Search This Blog

இன்றியமையாத இலக்கணக்‌ குறிப்புகள்‌, Tamil Grammar, தமிழ் இலக்கணம்

இன்றியமையாத இலக்கணக்‌ குறிப்புகள்‌

1. பெயரெச்சம்‌ :
வினை முற்றுப்‌ பெறாமல்‌ எஞ்சி நிற்கும்‌ எச்சம்‌ பெயர்ச்‌ சொல்லைக்‌ கொண்டு முடிவது பெயரெச்சம்‌.

(எ.கா) படித்த மாணவன்‌, படித்த ......... (அ) நடந்த (த்‌ + அ) அ என்ற விகுதியுடன்‌ முடியும்‌.


2. ஈறுகெட்ட எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌ :
ஓர்‌ எதிர்மறைப்‌ பெயரெச்சத்தின்‌ கடைசியில்‌ 'த' கெட்டு விடுவது ஈறுகெட்ட எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌. இது 'ஆ' என்ற ஒசையுடன்‌ முடியும்‌.

(அணையாத விளக்கு)
(அணையா விளக்கு)
அணையா (ஆ) யா =ய் + ஆ)

3. வினையெச்சம்‌ ;
வினை முற்றுப்‌ பெறாமல்‌ எஞ்சி நிற்கும்‌ ஒரு எச்சம்‌ வினைச்சொல்லக்‌ கொண்டு முடிவது  வினையெச்சம்‌.

இது “உ'' "இ விகுதிகளுடன்‌ முடியும்‌.

படித்து முடித்தான்‌ படித்து (ஊ) நடந்து பபபல கூறி (த்‌ + உ)

4. வியங்கோள்‌ வினைமுற்று :
வாழ்த்துதல்‌, வைதல்‌, வேண்டல்‌ பொருளில்‌ வருவது, காலம்‌ காட்டாது.

இது க, இய, இயர்‌ -
என்ற விகுதிகளுடன்‌ முடியும்‌.

(எ.கா) 
செல்க,
வாழ்க,
வாழி,
வாழிய, 
வாழியர்‌,

6. வினையாலணையும்‌ பெயர்‌ :
ஒரு வினைமுற்று வினையைக்‌ குறிக்காமல்‌ வினையைச்‌ செய்த கருத்தாவைக்‌ குறிக்கும்‌
பெயராய்‌ வருவது வினையாலணையும்‌ பெயர்‌.

 எழுதினான்‌ - எழுதியவன்‌ என வரும்‌, அது அன்‌, ஆன்‌, அர்‌, ஆர்‌, ஒர்‌, நர்‌ ஆகிய ஓசைகளுடன்‌ முடியும்‌.

(எ.கா) இழந்தவன்‌,
 சென்றனர்‌,
 அனுப்புநர்‌.

6. சொல்லிசை அளபெடை :
மூன்று மாத்திரை அளவில்‌ வினையெச்சப்‌ பொருளில்‌ வரும்‌ அளபெடை இது 'இ' என்று
எழுத்துடன்‌ முடியும்‌.

(எ.கா) ஓரீஇ,
 நம்பெழீஇ,
 உரனசை இ.

7. இன்னிசை அளபெடை :
மூன்று மாத்திரை அளவில்‌ மூன்று அசைச்‌ சொற்களில்‌ அமைவது இன்னிசை அளபெடை

(எ.கா) உண்பதூம்‌ 
(உணர்‌/பதூ/உம்‌) 
உடுப்பதூஉம்‌.

8. செய்யுளிசை அளபெடை :

மூன்று மாத்திரை அளவில்‌ இரண்டு அசை சொற்களில்‌ அமைவது செய்யுளிசை அளபெடை.

(எ.கா) ஆஅதும்‌, 
கழுஉமணி, 
படாஅபறை, 
தொழா அர்‌.

9. அடுக்குத்‌ தொடர்‌ :

அர்த்தமுள்ள சொற்கள்‌ பலமுறை அடுக்கி வருவது

(எ.கா) எண்ண எண்ண,
 பலப்பல,
 தீதீதீ

10. இரட்டைக்‌ கிளவி :

அர்த்தமுள்ள சொற்கள்‌ வினையைச்‌ சிறப்பிக்க இரட்டையாக மட்டும்‌ அமைவது.
(எ.கா) மடமட, 
சலசல.

11. ஒரு பொருட்‌ பன்மொழி :

ஒரே பொருள்‌ தரும்‌ இரண்டு சொற்களுடன்‌ அமைவது ஒரு பொருட்‌ பன்மொழி.

(ஈ.கா) தீயழல்‌, 
நடுமையம்‌, 
ஒரு தனி.

12. பண்புத்‌ தொகை :

இணைந்த தொகைச்‌ சொல்லை விரித்தால்‌ இடையில்‌ மை மறைந்திருப்பது.

(எ.கா) சிற்றில்‌ (சிறுமை + இல்‌)
 பைந்தமிழ்‌ - (பழமை தமிழ்‌),
 செங்கோல்‌ - (செம்மை + கோல்‌).

13. வினைத்‌ தொகை :

இணைந்த தொகைச்‌ சொல்லை விரித்தால்‌ இடையில்‌ காலம்‌ காட்டும்‌ இடைநிலை கின்ற
மறைந்திருப்பது.

(எ.கா) தொடுகடல்‌ (தொடுகின்ற கடல்‌)

14. உவமைத்‌ தொகை :

இணைந்த தொகைச்‌ சொல்லை விரித்தால்‌ இடையில்‌ “போன்ற! அல்லது 'போல' உவமஉருபு
மறைந்திருப்பது.

(எ.கா) பவளவாய்‌ 
(பவளம்‌ போன்ற வாய்‌)

15. வேற்றுமைத்‌ தொகை :

இணைந்த தொகைச்‌ சொல்லை விரித்தால்‌ இடையில்‌ வேற்றுமை உருபுகளில்‌ (ஐ, ஆல்‌, இன்‌, கு, அது, கண்‌) ஏதேனும்‌ ஒன்று மறைந்திருப்பது.

(எ.கா) கூலி வேலை (கூலிக்கு வேலை).

16. உம்மைத்‌ தொகை :

இணைந்த தொகைச்‌ சொல்லை விரித்தால்‌ இடையில்‌ “உம்‌ மறைந்திருப்பது

(எ.கா) செடி கொடிகள்‌ (செடிகளும்‌,
 கொடிகளும்‌ என்பதில்‌ உம்‌ மறைந்தது).

17. எண்ணும்மை :

உம்மைத்‌ தொகையைப்‌ போல்‌ உம்‌ மறையாமல்‌ எண்ணிக்கை காண்பதற்காக வெளிப்படையாக
இருப்பது எண்ணும்மை

(எ.கா) கற்பும்‌ காதலும்‌ (உம்‌ - வெளிப்படை)

18. அன்மொழித்‌ தொகை :

ஆகுபெயர்‌ போல்‌ ஒரு தொகைச்‌ சொல்‌ வேறு அல்லாத ஒன்றைக்‌ குறிப்பது அன்மொழித்‌
தொகை

(எ.கா) செந்தாமரை (பண்புத்‌ தொகை) 

செந்தாமரை வந்தாள்‌ (அன்மொழித்‌ தொகை)

19. உருவகம்‌ :

உம்மைத்‌ தொகையை முள்‌ பின்னாக மாற்றுவது உருவகம்‌. இது, உவமையைப்‌ பொருள்‌ மேல்‌ ஏற்று இடையில்‌ ஆகிய என்ற சொல்‌ மறைந்து வரும்‌.

(எ.கா) மதிமுகம்‌ (மதி போன்ற முகம்‌ - உவமைத்‌ தொகை)

முகமதி (முகமாகிய மதி உருவகம்‌)

20. தன்மை பன்மை வினைமுற்று :

அம்‌ ஓம்‌ என்ற விகுதிகளுடன்‌ முடிவது

(எ.கா) போற்றுதும்‌.



21. செய்யும்‌ என்னும்‌ வாய்ப்பாட்டு வினைமுற்று :

செய்யும்‌ என்ற சொல்லைப்‌ போன்றே தொனிப்பது

(எ.கா) படும்‌.

22. செயின்‌ என்னும்‌ வாய்ப்பாடு வினைமுற்று :

செயின்‌ என்ற சொல்லைப்‌ போன்றே தொளிப்பது.

(எ.கா) பெறின்‌.

23. ஆகுபெயர்‌ :

ஒன்றின்‌ இயற்பெயர்‌ மற்றொன்றுக்கு ஆகி வருவது.

(எ.கா) உலகு (உலக மக்களைக்‌ குறிக்கும்‌) ஊர்‌ சிரித்தது.

24. தொழிற்பெயர்‌ :

ஒரு தொழிலைக்‌ குறிக்கும்‌ பெயர்‌, காலம்‌ காட்டாது. இது தல்‌, அல்‌, கை, மை, ஐ, சி, பு என்ற விகுதிகளுடன்‌ அமையும்‌.

(எ.கா) பாடுதல்‌, 
பாடல்‌, 
ஆட்டம்‌,
 வீற்றிருக்கை,
 கொல்லாமை, 
எஞ்சாமை.


25. முதல்‌ நிலை திரிந்த தொழிற்பெயர்‌ :

ஒரு தொழிற்பெயரின்‌ விகுதி கெட்டு, முதல்‌ எழுத்தும்‌ மாறி ஒலிப்பது.

(எ.கா) கெடுதல்‌.
கெடுதல்‌ 3 கெடு -ஃ கேடு

பெறுதல்‌ -
 பெறு - பேறு

26. இலக்கணப்‌ போலி :
ஓர்‌ இலக்கண அமைப்புடைய சொல்லுக்கு போலியாக அமைவது

(எ.கா) தசை (சதை)

27. எழுத்துப்‌ போலி :
ஒரு சொல்லில்‌ எழுத்து மாறினாலும்‌ பொருள்‌ மாறாது. இது முதல்‌, இடை, கடைசியில்‌ அமையும்‌. முற்றிலும்‌ மாறுபட்டு அமையும்‌.

(எ.கா) நலன்‌ (நலம்‌) கடைப்போலி,
 அஞ்சு (ஐந்து) முற்றுப்போலி

28. உரிச்‌ சொல்‌ தொடர்‌ :
தனித்து இயங்கும்‌ ஆற்றல்‌ இல்லாத, சால, உறு, தவ, நனி, கூர்‌, கழி, வான்‌, மா, தட, வை, மழு, கடி போன்ற சொற்கள்‌ வேறு ஒரு சொல்லுடன்‌ உரிமை பெற்றுத்‌ தொடர்ந்து வருவது இது அதன்‌ பண்பை விளக்கும்‌.

(எ.கா) மாநாடு, 
உறுபசி, 
சாலப்‌ பேசினான்‌.

29. மருஉச்‌ சொல்‌ :
காலப்போக்கில்‌ மருவி மாறி வருபவை

(எ.கா) எந்தை (என்‌ தந்தை) பேர்‌ (பெயர்‌)


30. இடைக்குறை விகாரம்‌ :
ஒரு சொல்லின்‌ இடையில்‌ ஓர்‌ எழுத்து குறைந்து மாறுபட்டாலும்‌ அதே பொருளைத்‌ தருவது

(எ.கா) உளம்‌ (உள்ளம்‌)
கணீர்‌ (கண்ணீர்‌),

31. இரு பெயரொட்டுப்‌ பண்புத்‌ தொகை :

இரு சொற்களில்‌ முதல்‌ சொல்‌ சிறப்புப்‌ பெயராகவும்‌ அடுத்துள்ள சொல்‌ பொதுப்‌ பெயராகவும்‌ இருப்பது.

(எ.கா) தமிழ்மொழி,
 இமயமலை.

32. தன்மை ஒருமை வினைமுற்று :

என்‌, ஏன்‌ என்ற விகுதிகளுடன்‌ முடிவது.

(எ.கா) கொள்வேன்‌.

33. முற்றெச்சம்‌ :

ஒரு வினைமுற்றுச்‌ சொல்‌ வினையெச்சப்‌ பொருளில்‌ வந்து மற்றொரு வினைமுற்றைக்‌
 கொண்டு முடியும்‌.
(எ.கா) படித்தனன்‌ தேறினான்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url