பயமும், நைட்ரஸ் ஆக்ஸைடும் | Science Facts, அறிவியல் தகவல்கள்
* 'சயின்ஸ்' என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு 'எனக்குத் தெரியும்' என்று பொருள்.
* இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் 'டைனமோ' ஆகும்.
* விமானங்களை பார்த்து பயப்படுவதற்கு 'ஏரோ ஃபோபியா' என்று பெயர்.
இருட்டைப் பார்த்து பயப்படுவதற்கு 'ஸ்கோட்டோ ஃபோபியா' என்று பெயர்.
மீன்களைப் பார்த்து பயப்படுவதற்கு 'இச்தையோ ஃபோபியா' என்று பெயர்.
தண்ணீரைப் பார்த்து பயப்படுவதற்கு 'ஹைட்ரோ ஃபோபியா' என்று பெயர்.
* 'அனஸ்தீசியா' (உணர்வு நீக்கி) மருந்துகளை 'ஆலிவர் வென்டால் ஹோம்ஸ்' என்ற விஞ்ஞானிதான் முதன்முதலில் தயாரித்தார்.
* நைட்ரஸ் ஆக்ஸைடு, ஈதர், குளோரோஃபார்ம் ஆகியவை உணர்வு நீக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
* 'சிரிப்பூட்டும் வாயு' என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை 'ஜோசப் ப்ரிஸ்டலி' என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
* செயற்கைத் தங்கத்தின் பெயர் 'இன்பால்' ஆகும். இண்டியம் மற்றும் பல்லேடியம் சேர்த்து இது உருவாக்கப்படுகிறது.