Search This Blog

22 ஆண்டுகள் வெறும் டீ மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர் | உணவு | Facts



* சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் 'டக் ரெஸ்டாரண்ட்' ஒரே நேரத்தில் ஒன்பதாயிரம் பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியதாம்.

* எந்த திட உணவும் சாப்பிடாது, வெறும் டீ மட்டும் 22 ஆண்டுகள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர் ‘சத் பவர் பாய் டோபேர்’ என்பவர். இவர் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாயத் மாவட்டத்துக்காரர்.

* சிக்கரி செடியின் வேரிலிருந்து தான் சிக்கரித் தூள் தயாரிக்கப்படுகிறது.

* பீட்ரூட் ஒரு வகை கிழங்கு. இதில் துத்தநாகம் 910 மி.கிராம். கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. உணவில் சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

* பாகற்காய் விட்டமின் சி. உள்ள காய். இரும்புச்சத்து உள்ளது. வயிற்றில் உள்ள பூச்சியைக்கொல்லும். சர்க்கரை நோயைக் கட்டுபடுத்தும். பசி ஏற்படுத்தும். நன்மை செய்யும் கசப்பான காய் இது.

* உருளைக் கிழங்கில் மாவுச்சத்து அதிகம். 22.6 கிராம். அதோடு விட்டமின் ஏ, விட்டமின் சி, மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவையும் உள்ளன.

* ஐரோப்பிய நாடுகளில் மிளகாய்க்குப் பதில் மிளகை அதிகம் பயன்படுத்தினர். இந்தியாவில் ஐரோப்பிய நாடுகள் இதனை இறக்குமதி செய்தனர். எவ்வித நஞ்சையும் முறியடிக்கும் சக்தி இதற்குண்டு.

* வாழைப்பழத்தில் 20 வகைச் சத்துக்கள் உள்ளன.

* இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்-பி, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

* கரும்புச் சாறில் உள்ள சத்து கால்சியம் ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url