Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Nov 12, 2022

உண்மையில் யார் சனி பகவான்?!



உண்மையில் யார் சனி பகவான்?!


"'விதி வலியது' என்பர். அந்த விதியை ஆளக்கூடிய கிரகங்களுள் வலிமையானவர் சனி பகவான். "

யார் இந்த சனி?!: 

சூரியனுக்கும் அவர் மனைவியான சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் இந்த சனி பகவான். ஒரே நகர்வில் மூன்று ராசிகளை ஏழரை சனியாகப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் இவர்.

 ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் தங்குவார். யம தர்ம ராஜனின் சகோதரர் இவர். அப்படிப் பார்த்தால் மகாபாரதப் படி கர்ணனும் சூரிய புத்திரன் தான். அதனால் கர்ணனுக்கும், ராமாயணத்தில் சுக்ரீவனும் சூரிய புத்திரன் தான். அதனால் சுக்ரீவனுக்கும் கூட இவர் சகோதரன் தான். 

புராணப்படி தனது தந்தை சூரிய தேவனின் மீது கொண்ட கோபத்தால், சூரிய தேவனை கிரகணத்தின் சமயத்தில் விழுங்கும் என்று சொல்லக் கூடிய பாம்பு கிரகமான ராகுவின் உற்ற நண்பர்.

சூரியனின் திசை கிழக்கு என்றால், சனி பகவானின் திசை மேற்கு. சூரியன் ஒளி பிரவாகம் என்றால், சனி காரிருள். சூரியனுக்கு சந்திரன் நண்பர் என்றால் சனிக்கு சந்திரன் கடும் பகைவர்.

 இப்படியாக சூரியனுக்கு எதிர்மறையான ஆற்றல் கொண்டவர் சனி. சூரியனின் மகனான யமன், ஒருவர் இறந்த பிறகு பாவ, புண்ணிய கணக்கின் படி நரகத்தில் ஆத்மாக்களுக்கு தண்டனை தருவார் என்றால், சனி பகவான் நாம் வாழும் போதே நம் கர்ம வினைக்கு தகுந்த படி தனது சனிப் பெயர்ச்சி காலத்தில் பலன் அளிப்பார்.

 ஜோதிடத்தில், சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர் ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார். ஆம்! நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனி பகவான்தான்.

"30 வருஷம் வாழ்ந்தவன் இல்லை. 30 வருஷம் வீழ்ந்தவன் இல்லை" என்ற பழமொழி வந்ததற்குக் கூட சனியே காரணம். சனி மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசி சக்கரத்தை சுற்றி வர 30 வருடங்கள் ஆகும். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன்.

 சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து, துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

 மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால், இந்தப் பலன்கள் சாதகமாக மாறும். தர்மம் தவறாமல் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நியாய உணர்வுடனும் வாழ்பவர்களை சனீஸ்வர பகவான் அனுக்ரஹத்தோடு காப்பாற்றுவார். தர்மமும் ஒழுக்கமும் தவறியவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை. இது அவரது இயல்பு. அதனால் தான் அவரின் சுவை கசப்பு.

சனி பகவானின் பத்தினியின் பெயர் நீலாதேவி. காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. சனி பகவானுக்கு உகந்த நிறம் கருநீலம். மனித உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர். இவருக்கு..

 நிறம் : கறுமை - கருநீலம்.

அதிதேவதை : பிரம்மன்.

 பிரத்யதி தேவதை: எமன். 

குணம் : தாமஸம். 

உலோகம் : இரும்பு. 

மலர் : வன்னி, கருங்குவளை. 

ரத்தினம் : நீலம். 

ஆசனம் : வில் வடிவம். 


இவர் ஆளும் நட்சத்திரங்கள் : பூசம், அனுஷம், உத்திராடம். 

ஜோதிடத்தில் இவரின் தசா காலம்: 19 ஆண்டுகள்.

 காரகம் : ஆயுள்.

 பிணி : வாதம் தொடர்பானவை.

 உபகிரகம் : குளிகன் (மந்தன்).

 ராசியில் சஞ்சரிக்கும் காலம் : இரண்டரை வருடங்கள்.

 தானியம் : எள். பஞ்சபூதத்தில் இவர் வாயு. 

இவருக்கு சமித்து : வன்னி. 

இவரின் நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன்.

 இவரின் பகைக் கிரகங்கள் : சூரியன், சந்திரன். 

இவரின் ஆட்சி வீடு: மகரம், கும்பம்.

 உச்ச வீடு: துலாம் (துலாமில் சூரியன் நீச்சம்) 

நீச்ச வீடு: மேஷம் (மேஷத்தில் சூரியன் உச்சம் அடைவார்)


இவரின் காயத்திரி மந்திரம்:- 

ஓம் காகத்வஜாய வித்மஹே

 கட்க அஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரசோதயாத்


ஓம் ரவிசுதாய வித்மஹே 

மந்தக்ரஹாய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்