Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Nov 12, 2022

புயல் இப்படித்தான் உருவாகிறது.. உங்களுக்குத் தெரியுமா?


புயல் எப்படி உருவாகிறது?

 ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது, 
1. தோன்றும் நிலை,
 2. வலுவடையும் நிலை மற்றும்
3.  வலுவிழந்த நிலை. 

இந்த அனைத்து நிலைகளும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நடைபெறுகிறது.

 வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. அந்த நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது.

 இதன் காரணமாகத் தாழ்வு நிலை உண்டாகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது.

 இந்நிலையிலேயே புயலின் கண் உருவாகும். 

காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.

காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால் அது தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால் அது மிகத் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் அது கடும் தீவிர புயல்.

காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அது அதி தீவிர புயல்.

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம் :

புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும்.

ஒன்றாம் எண் கூண்டு : புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் எண் கூண்டு : புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

மூன்றாம் எண் கூண்டு : திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு : துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ள%2Bருக்கான எச்சரிக்கை.

ஐந்தாவது எண் கூண்டு : துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.

ஆறாவது எண் கூண்டு : துறைமுகத்தின் வலது பக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

ஏழாவது எண் கூண்டு : துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை.

எட்டாம் எண் கூண்டு : துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

ஒன்பதாம் எண் கூண்டு : துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

பத்தாம் எண் கூண்டு : புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

பதினொன்றாம் எண் கூண்டு : புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறதென்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பு முற்றிலும் முறிந்துபோன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்