குழந்தை மேம்பாடு மற்றும் கல்வியியல் தாள் - II.Child Development and Pedagogy paper - 2
குழந்தை மேம்பாடு மற்றும் கல்வியியல் தாள் - II
Child Development and Pedagogy paper - 2
* கற்றல் - மனித நடத்தையில் ஏற்படும் மாற்றம்
* சிக்மண்ட் ப்ராய்டு - உளப்பகுப்பாய்வு கோட்பாடு, கனவுகள் ஆய்வு
* ஆல்டர் - தனிநபர் உளவியல்
* மாஸ்லோ, காரல் ரோஜர்ஸ் - மனித நேய உளவியல்
* மரபு - தன் பொற்றோர்களிடமிருந்து பெரும் உடற்கூறு மற்றும் உளக்கூறு பண்புகள்
* சூழ்நிலை - நம்மை சுற்றியுள்ள தூண்டலுக்கேற்ற தலங்கள்
* ஒரு கரு இரட்டையர் - ஒரு கரு முட்டையுடன் இரு விந்தணு கூடி கருவுறுதல்.
* மரபும், சூழலும் - மனித வளர்ச்சிக்கு முக்கியமானது.
* கவனப்பிரிவு, கவனப்பகுப்பு - ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனம் செலுத்துதல்.
* கவனமாற்றம் - நமது கவனம் ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கு தாவுதல்.
* கவனவீச்சு - ஒரு நொடியில் எத்தனை பொருட்களை கவனிக்க முடியுமே அப்பொருட்களின் எண்ணிக்கையே கவனவீச்சு.
* டாசிஸ்டாஸ்கோப் - கவனவீச்சை அளவிடும் கருவி.
* அகக்காரணி, புறக்காரணி - கவனத்துடன் தொடர்புடைய காரணிகள்- 2.
* புறக்காரணிகள் - தூண்டலுக்கான செறிவு, உருவ அளவு, புதுமை, மாற்றம், வேறுபாடு, அசைவு, திரும்ப திரும்ப கூறுதல்.
* அகக் காரணிகள் - தேவை, விருப்பார்வம், மனநிலை, பழக்கவழக்கம், உடல்நிலை
* பிரச்சனை தீர்க்கும் படிநிலைகள் - பிரச்சனையை அறிதல், அடையாளம் காணுதல் புள்ளி விவரம் சேகரித்தல், கருது கோள் உருவாக்கம் மதிப்பீடு, சரிபார்த்தல்.
* சமூக வளர்ச்சியின் பண்புகள் - தம்மை, பிறர் ஏற்றுக்கொள்ளும் திறன் பெறுதல், கலாச்சாரம் மற்றும் பண்பாடு கற்றுத் தேர்தல், மற்றவரோடு இணக்கமான நடத்தைகளை பெறுதல்.
* முன்னோர்க்க தடை - முன்பு கற்பவை தற்போது கற்கும் செயலை நினைவு கூற குறுக்கீடு.
* பின்னோக்கு தடை - தற்போது கற்கும் செயல், முன்னர் கற்ற செயலை நினைவு கூற தடை.
* மறதி வரைபடம் - 1885, எபிங்காஸ்
* கற்றலில் 20 நிமிடம் கழித்து - 47 சதவீதம் மறதி
* கற்றலில் 1 மணி நேரம் - 60 சதவீதம் மறதி
* கற்றலில் 9 மணிநேரம் - 70 சதவீதம் மறதி.
* கற்றலில் 1 மாதம் கழித்து - கிட்டத்தட்ட முழுவதும் மறதி.
* கற்றல் படிநிலை கோட்பாடு - காக்னே
* கற்றல் வளைவு - பூஜ்ய முன்னேற்றம், நேர்மறையான முன்னேற்றம், எதிர்மறையான முன்னேற்றம், தேக்கநிலை.
* தேக்க நிலைக்கான காரணிகள் - அறிவு எல்லை, உளவியல் எல்லை, ஊக்குவித்தல் எல்லை.
* நுண்ணறிவு சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர் - ஆல்பர்ட் பீனே
* நுண்ணறிவின் வகைகள் - 3. அவை: 1.தாண்டைக் கருத்தியல் நுண்ணறிவு 2. பொறியியல் நுண்ணறிவு 3. சமூக நுண்ணறிவு.
* புலண் - உணர்வு ஐம்புலன்கள் மூலமாக ஏற்படும் உணர்வு.
* புலன் - காட்சி புலன் உணர்வும், பொருள் அறிந்து புரிதலும்.
* அறிவின் வாயில்கள் - ஐம்புலன்கள்
* புலன்காட்சி விதி - உருவ பின்னணி
* புலன்காட்சி வெலிப்புறக் காரணிகள் - அண்மை விதி, ஒப்புமை விதி, தொடர்ச்சி விதி, பூர்த்தி செய்தல் விதி, முழுமைக் காட்சி விதி.
* புலன்காட்சி உட்புறக்காரணிகள் - கடந்தகால அனுபவம், மனப்பான்மைகள்.
* புலன்காட்சி பிழைகள் -திரிபுக்காட்சி, இல்பொருள் காட்சி
* திரிபுக்காட்சி - தவறான புலன்காட்சி, பொருள் திரிந்து காணப்படுதல்(முல்லர் - லேயர்)
* இல்பொருள் காட்சி - எவ்வித தூண்டல் இல்லாமல் பொருள் இருப்பதாக உணர்தல்.
* பயிற்சி மாற்ற உளப்பயிற்சி கோட்பாடு - வில்லியம் ஜேம்ஸ்
* பயிற்சி மாற்ற ஒத்தக்கூறு கோட்பாடு - தாண்டைக்
* பயிற்சி மாற்ற பொதுவிதிக் கோட்பாடு - C.H. கீடு.
* பயிற்சி மாற்ற குறிக்கோள் கோட்பாடு - w.C. பேக்லி
* நினைவு - கற்றவற்றை மனத்தில் இருத்தி தேவைப்படும்பொழுது வெளிக்கொணர்தல்.
* நினைவு படிநிலை - கற்றல், மனத்திருத்தல், மீட்டுணர்தல், மீட்டறிதல், மீட்டுக்கொணர்தல்
* நினைவு வீச்சு - பார்த்த பொருளில் எத்தனை தவறின்றி கூறப்படுகிறதோ அந்த ஆற்றல்
* மறதி - கற்றவற்றை நினைவு கூர்தலில் ஏற்படும் நிரந்தரமான அல்லது தற்காலிக இழப்பு முறை.
* மறதி வகை - இயற்கை மறதி, செயற்கை மறதி.
* மறதிக்கான காரணம் - காலம் கடந்து செல்லுதல், தடைகள், அடக்குதல், மனவெழுச்சி, பதட்டம், உடல்நலமின்மை.
* ஒருவர் கருத்தை வெளிப்படுத்தும் கருவி - மொழி
* ஒலி வடிவமான பொருளுக்குரிய குறியீடு - மொழி
* மொழியின் அடிப்படை திறன் - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
* சில நோக்கத்தை நோக்கி, முடிவுகள் எடுக்க தொடர்ச்சியான வழிநடத்தும் கருத்துக்கள் - சிந்தனை
* சிந்தனைக் கூறுகள் - பிம்பங்கள், கருத்துமைகள், குறியீடு, அடையாளம், மொழி, தசைச் செயல்பாடுகள், மூளைச் செயல்பாடுகள்.
* மொழி வளர்ச்சிக்கு முக்கிய காரணி - ஊக்குவித்தல்
* கற்பித்தலின் முதல் படிநிலை - திட்டமிடுதல்
* கற்பித்தலின் கடைசி படிநிலை - மதிப்பீடு செய்தல்
* குவி சிந்தனை - குறிப்பிட்ட தூண்டலுக்கான துலங்கள் யாவும் ஒரே இலக்கினை அடைதல்
* விரி சிந்தனை - குறிப்பிட்ட தூண்டல் வெவேவேறு விதமான பல துலங்களை வரவழைத்தல்.
* குவி சிந்தனை - செங்குத்துச் சிந்தனை
* விரி சிந்தனை - பக்கவாட்டு சிந்தனை
* காரண காரியம் ஆராய்தல் - ஆராய்ந்து பிரச்சனைக்கு முடிவு காணுதல்
* ஆய்வுச் செயலில் - தொகுத்தறிமானம், பகுத்தறிமானம் இணைந்து காணப்படும்.
* கற்றலின் அடிப்படை அலகு - பொதுமைக் கருத்து
* பொருட்கள், நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான தன்மையை காட்டும் குறியீடுகள் காட்டும் குறியீடுகள் - பொதுமைக் கருத்து
* பொதுமைக் கருத்தின் வகைகள் - எளிய கருத்து, சிக்கலான கருத்து, இணைப்பு கருத்து, இணைப்பற்ற கருத்து, தொடர்பு கருத்து.
* பொதுமைக் கருத்து உருவாதல் படிநிலைகள் - புலன்காட்சி, பண்புகளை பிரித்தல், பொதுமைப்படுத்துதல், வேறுபடுத்துதல்.
* பொதுமைக்கருத்து உருவாக காரணிகள் - மாற்றம், தெளிவுநிலை, கையாளும் திறன், செயல்முறைக்கான தயார்நிலை, தொடர்புள்ள விபரங்கள்.
* பொதுக்கருத்து படம் - ஆசுபல், ஜோடப் ஈ, நோவோ
* The Process of Education - புரூணர்
* நுண்ணறிவு குடியரசுக் கொள்கை ஒற்றைக் காரணிக் கோட்பாடு - சைமன் பீனே
* இரு காரணிக் கோட்பாடு - சார்லஸ் ஃபியர்மன்(1904)
* இரு காரணி - பொதுக் காரணி, சிறப்புக் காரணி
* குழு காரணிக் கொள்கை - எல்.எல். தர்ஸ்டன்
* தர்ஸ்டனின் நுண்ணறிவு PMA - PRIMARY MENTAL ABILITIES 7 வகை அடிப்படை மனத்திறன் உடையது.
* PMA - சொல்லாற்றல், சொல் வேகத்திறன் ஆற்றல், எண்ணாற்றல், இட ஆற்றல், நினைவாற்றல், புலன்காட்சி வேகம், காரண காரியம் அறிதல்.
* பல காரணிக் கோட்பாடு - தாண்டைக்
* கில்போர்டு நுண்ணறிவு கொள்கை - 3D மாடல்
* 3D-யின் நுண்ணறிவுத் திறனின் எண்ணிக்கை - 120
* 3D நுண்ணறிவு அடங்கிய தொகுதிகள் - 3
செயல் - 5 உட்கூறுகள்
பொருள் - 4 உட்கூறுகள்
விளைவு - 6 உட்கூறுகள்
5 X 4 X 6 = 120
* பொதுமைக் கருத்து படி படிநி்லைகளாக புரூணர் கூறுவது - செயல்சார்ந்த அறிவு நிலை 0 - 2 வயது, உருவம் சார்ந்த அறிவு நிலை 3 -7 வயது, குறியீடு சார்ந்த அறிவு நிலை 8 - 14 வயது.
* பியாஜே - ஸ்வீட்சர்லாந்த் நாட்டை சேர்ந்தவர்.
* பியாடேயின் அறிதல்திறன் வளர்ச்சி படிநிலை - 4. அவை: புலன் உணரும் பருவம் 0 - 2 வயது, மனச்செயல்பாட்டுக்கு முந்தைய நிலை 2 - 7 வயது, கண்கூடாக பார்த்து * சிந்தித்து செயல்படும் பருவம் 7 - 12 முறையாக யோசித்து சிந்தித்து செயல்படும் பருவம் 12 வயது.
* தனக்கும், பிறருக்கும் மனநிறைவை ஏற்படுத்துதல் - மனவெழுச்சி முதிர்ச்சி
* மனவெழுச்சி வாழ்வில் பயன்படும் இடம் - வீடு, பள்ளி, பள்ளிப்பாடங்கள், பொழுதுபோக்கு இடங்கள்.
* மனவெழுச்சி நுண்ணறிவு - தன் மற்றும் பிறர் உணர்வுகள், மனழெழுச்சிகள் கண்டறிந்து முறைப்படுத்தும் அறிவு, தன் செயல்களை நெறிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல்.
* மனவெழுச்சி நுண்ணறிவின் கூறுகள் - மனவெழுச்சிகளை உணர்த்தல், வெளிப்படுத்துதல், மனவெழுச்சிகளை சிந்தனையில் பயன்படுத்துதல், மனவெழுச்சிக்களை புரிந்து கொண்டு பகுத்தாராய்தல், மனவெழுச்சிகளை நெறிப்படுத்தி சுய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல்.
* கோல்பர்க் ஒழுக்க வளர்ச்சி படிநி்லைகள் - மரபுக்கு முந்தைய நிலை, மரபு நிலை, மரபுக்கு பிந்தைய நிலை
* ஒழுக்கம் பற்றிய முழுமையாக அறிய முயற்சிக்கும் வயது - 11 முதல் 12.
* கற்றல் பண்புகள் - பயிற்சி, வலுவூட்டல், மாற்றம்
* கற்றல் கூறுகள் - கற்போர், தூண்டல், துலங்கல்
* ஒருங்கிணைந்த வளர்ச்சி - உடல், அறிவு, மனவெழுச்சி சமூக மற்றும் ஒழுங்க வளர்ச்சி இணைந்தது.
* வளர்ச்சி சார்செயல்கள் ஹர்விகர்ஸ்ட் - ஒவ்வொரு பருவத்திலும் கட்டாயம் கற்றுத் தேரும் நடத்தைகள்
* நெருக்கடியான சூழலில் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி. கூறியவர் - ஸ்பிட்ஸ்.
* அடிப்படை மனவெழுச்சி - பிறப்பிலேயே கட்டமைக்கப்படுகிறது - சினம், பயம், மகிழ்ச்சி, ஆச்சர்யம்.
* சிக்கலான மனவெழுச்சி - பிள்ளைப்பருவம், குமரப்பருவத்தில் தோன்றும் குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு.
* பிறரை சார்ந்திருக்கும் கற்றல் - சமூக வளரச்சி, சமூக நடத்தை, சமூக மதிப்புகள் அடங்கியவை.
* நன்னடத்தை - குணநலன் வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி
* சமூக வளர்ச்சியின் கூறுகள் - சமூக உணர்வை பெறுதல், தனித்தன்மை பெறுதல்
* சமூக வளர்ச்சிக்கான காரணிகள் - அகக்காரணி, புறக்காரணி
* சமூகவியல் பினை பெறும் இறுதி இலக்கு - சமூக முதிர்ச்சி
* எரிக்சனின் சமூக வளர்ச்சி நிலைகள் - 8
* HATE - HEREDITY, AGE, TRAINING, ENDOCRINE GLAND
* மனவெழுச்சி கட்டுப்பாடு - மனவெழுச்சியை முறையாக கையாளுதல்.
* தீவிர மனவெழுச்சிப் பருவம் - குமரப் பருவம்
* மனவெழுச்சியை கட்டுப்படுத்துதல் - உடற்பயிற்சி, தியானம், யோகா, பயிற்சிகள்
* நுண்ணறிவு சோதனை வகை - தனியார் சோதனை, குழு சோதனை
* நுண்ணறிவு சோதனையின் மற்றொரு வகை - சொல் சோதனை, செயல் சோதனை
* பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு - கார்டனர்
* நுண்ணறிவு ஈவு - வில்லியம் டெர்மன்
* IQ = MC/CA X 100
* சைமன் பீனே சோதனை - 30 வினாக்கள் உடையது.
* வெஸ்லர் சோதனை - 7 முதல் 16 வயது குழந்தைகள் நுண்ணறிவு மதிப்பிடுதல்.
* WISC/WISA - WESHLER INTELLIGENCE SACLE FOR CHILDREN / ADULTS
* வெஸ்லர் சோதனைத் தொகுதிகள் - 2
* சொற்சோதனை செயற்சோதனை - வெஸ்லர் சோதனையின் மொத்த உறுப்புகள் - 11, சொற்சோதனை - 6, செயற்சோதனை - 5
* அறிவு வளர்ச்சியை கூறியவர் - பியாஜே
* உடல் வளர்ச்சியை கூறியவர் - ஹர்லாக
* சமூக வளர்ச்சியை கூறியவர் - எரிக்சன்
* ஒழுக்க வளர்ச்சியை கூறியவர் - கோல்பர்க்
* ADOLESENCE - இலத்தின் மொழி
* குமரப்பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் - ஸ்டான்லி ஹால்
* மனப்பான்மை அளவுகோள் - லிக்கர்ட்ஸ் அளவுகோல், தர்ஸ்டன் அளவுகோல்
* நாட்டம் - குறிப்பிட்ட துறையில் விரைவாக, பொருத்தமாக வெற்றி பெறும் திறன்.
* நாட்டச் சோதனை - முன்னறிச் சோதனை (Prognostic Test) DAT - Different Aptitude Test, எழுத்தறிவு நாட்டச் சோதனை, பொறியியல் நாட்டச்சோதனை, மொழியாற்றல் சோதனை.
* ஆர்வம் - ஒரு செயலை அடைவதற்கு அவனை ஊக்குவிக்கும் வினையே ஆர்வம்.
* ஆர்வப் பட்டியல் - ஸ்ட்ராங் தொழிலார்வம் பட்டியல் (SVIB)
* புறச்சுழலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உற்று நோக்குதல் - கவனம்.
* கவனத்தின் வகைகள் - விருப்பமுள்ள கவனம், விருப்பமற்ற கவனம்
* கவனமின்மை -குறிப்பிட்ட தூண்டல், செயலை கவனிக்காத நிலை கவனமின்மை
* கவனமின்மையின் வகைகள் - முழுமையான கவனமின்மை, பாதியளவு கவனமின்மை
* அறிவுபுல கற்றல் கோட்பாடு - கோலர்
* கெஸ்சால்ட் என்னும் சொல் - ஜெர்மனி வார்த்தை
* ஜெஸ்சால்ட் என்பதற்கு - முழுமை எனப் பொருள்
* பிரச்சனைக்கு தீர்வு காணும் அனுபவம் - உட்காட்சி ஆற்றல்
* உட்காட்சி கற்றலின் விலங்கு - சிம்பன்சி - மனிதகுரங்கு.
* உட்காட்சி கற்றல் - சிக்கல் தீர்வு முறை, செய்து கற்றல் முறை, தானே கற்றல் முறைக்கு அடிப்படையாதல்.
* பயிற்சி மாற்றல் - ஒரு சூழலில் கற்றது மற்றொரு சூழலுக்கு பயன்படுதல், உதவுதல்
* பயிற்சி மாற்ற வகைகள் - நேர்மறை பயிற்சி மாற்றம், எதிர்மறை பயிற்சி மாற்றம், பூஜ்ஜிய பயிற்சி மாற்றம்
* உளவியல் ஆய்வகம் ஆரம்பித்தவர் - வில்லியம் ஊண்ட் 1832 -1920
* உளவியல் ஆய்வகம் அமைத்த நகர் - ஜெர்மன், லிப்சிக் நகர்
* மாணவர்களின் நடத்தையை அறிவியல் பூர்வமாக ஆராயும் முறை - பரிசோதனை முறை
* பரிசோதனை முறையின் மாறிகள் - 3 அவை: தனித்து இயக்கும் மாறிகள், சார்ந்து இயக்கும் மாறிகள், குறுக்கீட்டு மாறிகள்
* பரிசோதனை முறையின் வகைகள் - 2 அவை: ஒரு குழு பரிசோதனை முறை, இரு குழு பரிசோதனை முறை.
* உளவியல் முறைகளின் நம்பகமான முறை - பரிசோதனை முறை
* மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் உளவியல் - அறிவுரை பகர்தல் உளவியல்
* மனிதன் நடத்தை வெளிப்படும்போது உள்நோக்கங்கள் வெளிப்பட்டு புலப்படுகிறது - ஹார்மிக் கொள்கை
* ஹார்மிக் கொள்கையை கூறியவர் - மக்டூகல்
* மனம், அறிவுசார் இயக்கமுடையது - வடிவமைப்புக் கோட்பாடு
* வடிவமைப்புக் கேட்பாடு மற்றும் அகேநோக்க கோட்பாட்டைக் கூறியவர் - டிச்னர்(1887 - 1927)
* நடத்தையே உளவியல் மையப்பொருள் - நடத்தைக்கோட்பாடு
* நடத்தை கோட்பாட்டை கூறியவர் - வாட்சன், டோலமன், ஹப், கத்ரி, ஸகின்னர்
* இயல்பூக்க கோட்பாட்டை கூறியவர் - மக்கேல்
* உளவியல் முறைகளில் பழமையானது - அகநோக்கு முறை
* தானே விருப்பு, வெறுப்பின்றி பகுத்துணரும் முறை - அகநோக்கு முறை
* பிறரது நடத்தையை கவனித்து கூறுதல் - உற்றுநோக்கல் முறை
* அறிவுரை பகர்தல் - தனிநபர் பிரச்சனை மையமானது.
* வழிகாட்டல் - தனிநபர் மையமானது
* அசாதாரணக் குழந்தைகள் - பார்வைதிறன் குறைபாடுடையோர், பின்தங்கிய குழந்தைகள், மீத்திறன் மிக்க குழந்தைகள்
* பார்வை திறன் குறைவானவர்களுக்கான கல்வி முறை - பிரைலி, பதிவு நாடா கருவி
* பார்வைதிறன் குறைபாட்டை போக்க - வைட்டமின் ஏ அதிகம் தேவை.
* மீத்திறன் குழந்தைகளுக்கான திட்டம் - விரைவுக் கல்வித் திட்டம், வளமைக் கல்வித் திட்டம், குழுக் கல்வித் திட்டம்
* கல்வியில் பின்தங்கியோர் - IQ 70 - 80 தொடர்ந்து பள்ளித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவர்.
* குறைநிலைச் சாதனையாளர் - உயர் அறிதிறனைப் பெற்றிருந்தும் குறைந்த அடைவு பெறுதல்
* மாணவனின் நடத்தைக் கோளாறுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கும் முறை - தனியாள் ஆய்வு முறை.
* தனியாள் ஆய்வு முறையின் முக்கியமான செயல் - மாணவனின் நடத்தைகளின் தகவல்களை சேகரித்தல்.
* தகவல் சேகரித்தலின் படிகள் - முதல்நிலைத் தகவல், கடந்தகால வரலாறு, தற்போதைய நடத்தைகள்.
* மாணவர்களை நல்வழிகாட்ட பயன்படும் முறை - தனியாள் ஆய்வு முறை.
* குழந்தைப் பருவம் முதல் முதிர்ச்சி பருவம் வரை நடத்தைக் கோலங்களில் வளர்ச்சி மாறுபாடுகள் அறியும் முறை - மரபுமுறை அல்லது பருவ வளர்ச்சி அறியும் முறை
* அடைவூக்கிகள் - சாதனை புரிவதற்கான ஆற்றல், தோல்வியை தவிர்த்தலுக்கான ஆற்றல்.
* அடைவூக்கத்தை அளவிடுதல் - TAT மெக்லிலேண்டு (1965)
* அவாவு நிலை - ஒருவர் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் உண்மையான குறிக்கோள், இலக்கை அடைய முற்படும் ஆற்றல்.
* போட்டி - குழந்தைகளிடையேயான போட்டி மனப்பான்மை வளர்ச்சிக்கு உதவுகிறது.
* ஒத்துழைப்பு - வகுப்பறைக் கற்பித்தல் வெற்றிபெற ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
* தலைவர் - ஒரு குழுவின் மற்றவர் பின்பற்ற முன்மாதிரியாகத் திகழ்பவர்.
* Motivation - Lalin word
* ஊக்கம் - ஒரு இலக்கை அடைய தேவைப்படும் தூண்டுதல்
* ஊக்கிகள் - ஊக்குவித்தல் நடைபெறத் தூண்டும் காரணிகள்.
* ஊக்கிகளின் வகைகள் - உள்ளூக்கம், வெளியூக்கம்
* தேவை மடிநிலைக் கோட்பாட்டின் எண்ணிக்கை - 7
* அடைவூக்கம் - உயர் சாதனையை அடைய முற்படுதல்
* அடைவூக்கம் கோட்பாடு - டேவிட் மெக்யிலேண்ட், அட்கின்சன்
* கற்றல் - நேரடியான, மறைமுகமான அனுபவத்தின் மூலம் ஏற்படும் நடத்தை மாற்றம்.
* ஆக்கநிலை நிறுத்தம் - பால்வோ (1849 -1936)
* பால்வோ ஆய்வுக்கு பயன்படுத்திய விலங்கு - நாய்.
* வலுவூட்டம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - தாண்டைக்
* முயன்று தவறிக் கற்றல் - தாண்டைக் (1814 - 1944)
* முயன்று தவறிக் கற்றல் ஆய்வு - பசியுள்ள பூனை
* கற்றல் விதிகளை கூறியவர் - தாண்டைக்
* கற்றல் விதிகள் - 3 அவை: பயன் விதி, பயிற்சி விதி, ஆயத்த விதி
* கருவி சார்ந்த ஆக்க நிலை நிறுத்தல் அல்லது செயல்படு ஆக்கநிலை நிறுத்தம் -ஸ்கின்னர்
* ஸ்கின்னர் -ஆய்வின் மையப்பொருள் வலுவூட்டல்
* வலுவூட்டலின் வகைகள் - நேர்மறையான வலுவூட்டிகள், எதிர்மறையான வலுவூட்டிகள்
* வலுவூட்டம் - தண்டனை குறிப்பிட்ட நடத்தையை நிலை நிறுத்த அல்லது முன்னேற்றம் அடையச் செய்ய பயன்படும் நடத்தை.
* நேர்முறையான வலுவூட்டிகள் - வெகுமதி
* மனப்போராட்ட வகை - அணுகுதல் அணுகுதல் மனப் போராட்டம், விலகுதல் விலகுதல் மனப் போராட்டம், அணுகுதல் விலகுதல் மனப் போராட்டம்
* மனமுறிவு காரணிகள் - உடல் சார்ந்த தடை, சமூக பொருளாதார இடைஞ்சல், பயிற்சி குறைவு, பெற்றோர் ஆசிரியர் அதிகாரம், எதிர்பாராத நிகழ்வுகள்.
* அமைதியின்மை - மனப்போராட்டம் மிகுந்து மனமுறிவு ஏற்படுவதே அமைதியின்மை.
* பொருத்தப்பாடு இயற்கை சமூகம் இவற்றோடு இமைந்த வாழக் கற்றுக் கொள்ளுவது - இணக்கம்.
* பொருத்தப்பாடின்மை - சூழ்நிலையோடு இயைந்து வாழ செயல்பட முடியாத நிலை.
* தற்சார்பு நடத்தைகள் - மனக்கவலை உருவாகும் போது அதை தவிர்கும், தணிக்கும் நோக்கோடு தன்னையறியாமல் வெளிப்படும் நடத்தை.
* ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்தது அமைப்பு ஆளுமை - கில்போர்டு.
* தம் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்தும் பொருத்தப்பாட்டின் ஒருங்கிணைப்பு ஆளுமை - கெம்ப்.
* தங்களுக்கு அளிக்கும் சூழலில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிதல் ஆளுமை - கேட்டல்
* வகைப்பாட்டுக் கொள்கை - Hippocrates
* சிடுமூஞ்சி - குறைந்த மனவெழுச்சி அதிக உடல் பலம்.
* அழுமூஞ்சி - குறைந்த மனவெழுச்சி, குறைந்த உடல் நலம்.
* தூங்கு மூஞ்சி - அதிக மனவெழுச்சி, குறைந்த உடல் பலம்.
* சிடுமூஞ்சி - அதிக மனவெழுச்சி, அதிக உடல் பலம்
* அகமுகன், புறமுகன் வகைப்படுத்தியவர் - யுங்
* வகைப்பாடு மற்றும் உளப்பண்பு கோட்பாடு - ஐசன்ங்
* ஐசன்ங் கொள்மையின்படி ஆளுமை - 4 வகைகள் அவை: அகமுகத்தன்மை, புறமுகத் தன்மை, நரம்புத்தன்மை நோய், கடுமையான சித்தக் கோளாறு
* சிக்மண்ட பிராய்டு - இட், ஈகோ, சூப்பர், ஈகோ
* லிபிடோ என்பது - பாலூக்கம் இச்சை நிலை
* ஆக்கத்திறனின் புதுமைப் பயன் சோதனை - டாரன்ஸ் மின்ன சோட்ட சோதனை, மொழிச் சோதனை, படச் சோதனை
* இந்திய ஆக்கத்திறன் சோதனை - பெக்கர் மேதி படைப்பாற்றல் சோதனை, பாசி படைப்பாற்றல் சோதனை.
* நுண்ணறிவு செயல் சோதனைகள் வெஸ்லர் செயல் சோதனை - Alexandar's Battery of Performance Test, Bhatias Battery of Performance Test, Koh's Block Design Test, Reven's Progressive Matrices Test.
* புறத்தேற்று முறைகள் - ரோசாக் மைத் தடச் சோதனை (1921), TAT -முகர்ரே மற்றும் மார்கன் (1935), கதை முடித்தல் சோதனை
* ரோசாக் எந்த நாட்டவர் - சுவிட்சர்லாந்து
* மைத்தச் சோதனை அட்டைகள் -10 அவை: 5 கருப்பு,வெள்ளை, 2 கருப்பு,சிகப்பு, 3 பல வண்ணம்.
* கதை கூறும் சோதனை முறை - TAT
* TAT சோதனை அட்டைகள் - 30 அவை: 10 ஆண், 10 பெண், 10 இருபாலர்.
* ஒருங்கிணைந்த ஆளுமை - ஹர்லாக்
* மனநலம் -ஆளுமையின் நிறைவான, இடைவான செயல்பாட்டைக் குறிப்பது - ஹேட்பீல்டு.
* நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி பிறரோடு இணைந்து போகும் தன்னிக்கம் மனநலம் - மார்கன் மற்றும் கிங்.
* மனநலக் காரணிகள் - மரபு, உடல், வீடு, சமூகம், தேவைகளில் திருப்தி.
* மனநலவியல் நல்ல மனநலத்துடன் வாழ்வதற்கு உதவுகின்ற அறிவியல் - மார்க்ரட் மீட்
* மனமுறிவு - ஒரு இலக்கை அடைய முயற்சியில் ஏற்படும் தடை
* மனப் போராட்டம் - ஒரு இலக்கை, தேவையை அடையும் முயற்சியில் ஏற்படும் தடுமாற்றம்.
* அறிவுரை பகர்தல் - தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்களுக்கு நேருக்கு நேர் கூறும் அறிவுரை.
* அறிவுரை பகர்தல் வகைகள் - நேர்முக அறிவுரை பகர்தல் - வில்லியம் சன், மறைமுக அறிவுரை பகர்தல் - ஆர். ரோஜர்ஸ், சமரச அறிவுரை பகர்தல் முறை - F.C.தார்சன்.