அக்டோபர் 5 - தேசிய டால்பின்கள் தினம் National Dolphin Day

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது அக்டோபர் 5 ஆம் தேதியினைத் தேசிய டால்பின் (ஓங்கில்) தினமாக அறிவித்துள்ளது.

இது இந்த ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படும்.
தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு அக்டோபர் 5 ஆம் தேதியைத் தேசிய டால்பின் தினமாக அறிவிப்பதற்கான இந்த முடிவை எடுத்தது.
கங்கை டால்பின் உள்ளிட்ட டால்பின் இனங்களின் பாதுகாப்புத் திட்டங்களின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செய்வதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
கங்கை டால்பின்கள் உயிர்வாழும் வகையில் கங்கை மற்றும் அதன் துணை நதிகளின் நீரின் தரம் மற்றும் அதன் ஓட்டத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
Next Post Previous Post