Science Box questions, Do you know, 9th std Term ii unit - 8. விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
9 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
8. விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
1. நாக்கு ஃப்ருனுலம் என்று அழைக்கப்படும் ஒரு சவ்வு மூலம் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. வாயின் கீழ்பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே இது அமைந்துள்ளது. நமது நாக்கை நாமே விழுங்கிவிடாதவாறு இது தடுக்கிறது.
2. இரப்பைசார் உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்லியம் பியூமாண்ட்
3. ரென்னின் - இது ஒரு செரிமான ஊக்கியாகும். பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது மற்றும் புரதம் செரிமானமாவதை அதிகரிக்கிறது.
4. ரெனின் - ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுகிறது மற்றும் சிறுநீரக வடிநீர்மத்திலிருந்து நீரையும் சோடியத்தையும் சீராக உறிஞ்சச் செய்கிறது.
5. செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதியான சிறுகுடல் 5மீ நீளமுடையது, ஆனால் தடித்த குழாயான, பெருங்குடல் 1.5 மீட்டர் நீளமுடையது.
6. முதல் சிறுநீரக மாற்றம் - 1954 ஆம் ஆண்டில் பாஸ்டன் என்ற நகரத்திலுள்ள பீட்டர் பெண்ட் பிரிகாம் என்ற மருத்துவமனையில் ஜோசப் இ முர்ரே என்ற மருத்துவரும் அவரது சக ஊழியர்களும் ரொனால்டு மற்றும் ரிச்சர்டு ஹெரிக் ஆகிய ஒத்த பண்புடைய இரட்டையர்களுக்கிடையே முதன் முதலில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்றத்தை செய்தனர். சிறுநீரகத்தைப் பெற்றுக் கொண்ட ரிச்சர்டு ஹெரிக் எட்டு வருடங்கள் வாழ்ந்து பின்
காலமானார்.
7. இரு சிறுநீரகங்களும் மொத்தமாக 2 மில்லியன் நெஃஃப்ரான்களைக் கொண்டு 1700 - 1800 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
8. சிறுநீரகங்களானது இரத்தத்தின் அளவில் 99% அளவை மீண்டும் உறிஞ்சிக்கொண்டு மீள வழங்குகிறது. இரத்தத்திலுள்ள 1% மட்டும் வடிகட்டப்பட்டு சிறுநீராக மாறுகிறது.
9. ஆணின் உடலில் மிகச் சிறிய செல் விந்து ஆகும். ஒரு சாதாரண ஆணின் வாழ்நாளில் 500 பில்லியன் விந்தணுக்கள் உருவாகின்றன. இவ்வாறாக விந்துவை உருவாக்கும்
செயலுக்கு விந்தணுவாக்கம் (ஸ்பெமடோஜெனிசிஸ்) என்று பெயர்.
10. கருமுட்டைதான் மிகப்பெரிய மனித செல் ஆகும். கருமுட்டையானது உருவாதல் நிகழ்வுக்கு கருமுட்டை உருவாக்கம் (Oogenesis) என்று பெயர்.