Science Box questions, Do you know, 9th std Term ii unit - 7. திசுக்களின் அமைப்பு
9 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
7. திசுக்களின் அமைப்பு
1. உருளைக்கிழங்கில் பாரன்கைமாவின் வெற்றிடம் முழுவதும் ஸ்டார்ச்சினால் நிரம்பி உள்ளது. ஆப்பிளில் பாரன்கைமா சர்க்கரையை சேமித்து வைத்துள்ளது.
2. சணல் நார்கள், கயிறு மற்றும் ஆடைகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.
3. ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை புதிதாக உருவாக்கியவர் மஹோர்(1819) என்பவர். மேரி ஃபிரான்காய்ஸ் சோயியர் ஃபிசேட் (ஹிஸ்டாலாஜியின் தந்தை) என்பவர் உடற்கூறு மற்றும்
நோயியல் வல்லுனர் ஆவார். இவர் 21 வகை திசுக்களை வேறுபடுத்தி அதிலிருந்து மனித உடல் உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன எனக் கண்டறிந்தார்.
4. தோலில் அமைந்துள்ள எபிதீலியத் திசுக்கள் நீர்ப்பாதுகாப்பு உறையாகச்
செயல்படுகின்றன.
5. பருமனான வயது வந்தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை 60 - 100 பில்லியன் ஆகும். அதேசமயம் பருமனற்ற வயது வந்தவர்களில் அது 30 - 50 பில்லியன் ஆகும்.
6. மேட்ரிக்ஸின் புரத நார்களானவை எலாஸ்டினின் மஞ்சள் நார்கள் மற்றும் கொலாஜனின்
வெள்ளை நார்கள் ஆகியவற்றால் உருவானவை.
★ நானோ நார்கள் - சார்பிஸ் நார்கள் தசை நாண்களின் மிகச்சிறிய நார்கள் ஆகும். இவை எலும்பின் பெரிஸ்டோமியத்தின் உள்ளே நுழைகின்றன. தசைநார் பிணைப்பு மெல்லிய பின்னப்பட்ட நார்களால் வருகின்றது. தசை நார்கள் அதிகப்படியாக இழுக்கப்படுவதால் சுளுக்கு ஏற்படுகிறது.
7. நரம்பு செல்களில் சென்ட்ரியோல்கள் இல்லாததால் அவை பகுப்படைவதில்லை. ஆனால்,
இவை கிலியல் செல்களிலிருந்து நரம்புருவாக்குதலின் மூலம் உருவாக்கப்படுகின்றன.
8. நுண்கிலியல் செல்களானது மாற்றமடைந்த நரம்பு கிலியல் செல்களாகும். இவை விழுங்கு
தன்மை கொண்டவை. இவை மூளை மற்றும் தண்டுவடப்பகுதியில் காணப்படுகின்றன. இவை, அஸ்ட்ரோகிலியா அல்லது ஆலிகோடென்ரோகிலியா என்று அழைக்கப்படுகின்றன.
9. நமது உடல் செல்களின் வயது
◆ கண் விழி, பெருமூளை புறணியின் நரம்பு செல்கள் மற்றும் அதிகப்படியான தசை செல்கள் வாழ்நாளில் ஒரு முறை இறந்தால் அவை மீண்டும்
சீரமைக்கப்படுவதில்லை.
◆ குடலின் எபிதீலிய புறணி செல்களின் வாழ்நாள் ஐந்து நாட்களாகும்.
◆ மற்ற குடல் செல்களின் சராசரி ஆயுட்காலம் 15 ஆண்டுகள்
10. செல்கள் புதுபிக்க ஆகும் காலம்
◆ தோல் செல் - ஒவ்வொரு 2 வாரங்கள்
◆ எலும்பு செல்கள் - ஒவ்வொரு 10 வருடங்கள்
◆ கல்லீரல் செல்கள் - ஒவ்வொரு 300-500 நாட்கள்
◆ இரத்த சிவப்பு செல்கள் 120 நாட்களில் இறந்து மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.
11. உயிரணு செல்கள்
◆ வேறுபாடு அடையாத செல்கள் வரம்பற்ற பகுப்புகளுக்கு உட்பட்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல்வேறு வகை செல்களை உருவாக்குகின்றன.
◆ ௧ரு உயிரணு செல்கள் வேறுபாடு அடைந்த வேறுபட்ட திசுக்களாவும், உறுப்புகளாகவும் மாறுகிறது.
◆ உறுப்புகள் சிதைவடைந்தால் அந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உயிரணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
◆ தற்போதைய நாட்களில் குழந்தை பிறப்பின்போது தொப்புள் கொடி ரத்தம்
சேகரிக்கப்பட்டு எதிர்காலத்தில் நோய்கள் ஏற்பட்டால் அவற்றிற்கு சிகிச்சை அளிக்க உயிரணு செல்கள் பயன்படுத்தப்படுகிறது.