Airtel, Jio , Vi மாதாந்திர திட்டங்கள் எல்லாமே 30 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் இருப்பதற்கான இதுதான் காரணமா!
Airtel, Jio , Vi மாதாந்திர திட்டங்கள் எல்லாமே 30 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் இருப்பதற்கான இதுதான் காரணமா!
பொதுவாக ஒரு மாதம் என்றாலே 30 அல்லது 31 நாட்கள் கொண்டது. ஆனால், ஏர்டெல் தனது ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மாதாந்திர சந்தா திட்டம் என்று சொல்லிவிட்டு, 28 நாட்கள் என்று கணக்கு வைத்தது.
இதையே எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பின்பற்றின.
ஒரு வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் உள்ளன. மாதாந்திர திட்டத்தின்படி, ஒருவர்12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்தால், அவர் அந்த சந்தாவில் இருக்கும் நாட்கள் 12x28 = 336. ஒரு ஆண்டில் 365 நாட்களில், 336 நாட்கள் பயன்பெறுகிறார். அதாவது, 28 நாட்கள் என ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில், ஆண்டுக்கு 13 மாதங்கள் ரீசார்ஜ் செய்கிறார்.
இதனால் என்ன ஆகிவிட போகிறது, ஒரு வாடிக்கையாளர் மட்டும் ஒரு ஆண்டுக்கு கூடுதலாக ஒரு மாதம் ரீசார்ஜ் செய்கிறார், அவ்வளவு தானே என்று நினைக்கலாம். ஏர்டெலில் மட்டுமே 35.48 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த கூடுதல் ஒரு மாதத்திற்கு ரூ.179க்கு ரீசார்ஜ் செய்யும் போது, சுமார் 6,350 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு கிடைக்கிறது.
இதே போல் ஜியோவில் 40.8 கோடி பயனர்கள் உள்ளனர், அவர்கள் மூலம் 8,527 கோடி ரூபாய் ஜியோவுக்கு கிடைக்கிறது. எனவே, நாம் சாதாரணமாக 2நாட்கள் தானே குறைவு என்று நினைக்கும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வெறும் அந்த 2 நாள் சூட்சமம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.