Science Box questions, Do you know, 9th std Term ii unit - 6. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
9 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
6. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
1. அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டவை. ஆனால் ஹைட்ரஜன் உள்ள அனைத்துப் பொருள்களும் அமிலங்கள்
அல்ல. எ.கா. மீத்தேன்(CH₄) மற்றும் அம்மோனியா(NH₃) ஆகியவை ஹைட்ரஜனைக் கொண்டுள்ளன. ஆனால் அவைகள் நீர்த்த கரைசலில் ஹைட்ரஜன் (H⁺) அயனிகளைத்
தராது.
2. அமிலங்களுக்கு காரத்துவம் என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம். காரத்துவம் என்பது ஒரு மூலக்கூறு அமிலத்தில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன்
அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
எ.கா. அசிட்டிக்அமிலத்தில் (CH₃COOH) நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும், ஒரே ஒரு ஹைட்ரஜனை மட்டுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும்.
எனவே இது ஒற்றைக் காரத்துவமுடையது.
3. வெப்பம் அல்லது கதிர்வீச்சு அல்லது வேதிவினை அல்லது மின்னிறக்கத்தால் அயனிகளைப் பிரித்தெடுக்கும் நிலை அயனியாதல் எனப்படும்.
4. சில உலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை. எ.கா. Ag, Cu
5. அமிலக் கரைசலில் நீரின் பங்கு:
◆ அமிலங்கள் நீரில் கரையும் போது மட்டுமே தங்களின் பண்புகளை வெளிப்படுத்தும். நீரில் கரையும் போது ஹைட்ரஜன் (H⁺) அயனிகளைத் தருவதால், அது அமிலம் என அறியமுடிகிறது. அதே சமயம் கரிமக் கரைப்பானில் அமிலங்கள் அயனியுறுவதில்லை.
◆ எ.கா: ஹைட்ரஜன் குளோரைடு நீரில் கரையும்போது H⁺ , Cl⁻ , அயனிகளைத் தருகிறது. அதே சமயம் எத்தனால் போன்ற கரிமக் கரைப்பானில் அயனியுறாமல் மூலக்கூறுகளாகவே இருக்கும்.
6. அமிலத்துவம் என்பது ஒரு காரத்தின், ஒரு மூலக்கூறில் உள்ள இடப்பெயர்ச்சி
செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகும்.
7. நீரில் கரையும் காரங்கள், எரிகாரங்கள் என்றழைக்கப்படும். அனைத்து எரிகாரங்களும் காரங்கள் ஆகும். ஆனால் அனைத்துக் காரங்களும் எரிகாரங்கள் அல்ல.
எ.கா NaOH, மற்றும் KOH எரிகாரங்கள் ஆகும். Al (OH)₃ மற்றும் Zn(OH)₃ காரங்கள் ஆகும்.
8. சில உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிவதில்லை. Cu, Ag, Cr