Science Box questions, Do you know, 9th std Term ii unit - 5. வேதிப்பிணைப்பு
9 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
5. வேதிப்பிணைப்பு
1. ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது அவ்வுலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை ஆகும். ஒரு அலோகத்தின் இணைதிறன் என்பது அது ஏற்கும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
2. ஒரு தனிமத்தின் அணு எலக்ட்ரானிய இணைதிறன் பிணைப்பை உருவாக்கும்போது
அவ்வணு இழக்கும் அல்லது ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதன் எலக்ட்ரான்
இணைதிறன் எனப்படுகிறது.
3. அதிக வினைதிறன் கொண்ட சோடியமும் நச்சுத்தன்மை வாய்ந்த குளோரின் வாயுவும்
இணைந்து சாதாரண உப்பு உருவாகிறது. சோடியம் மற்றும் குளோரினுக்கிடையே
உருவாகும் வேதிப்பிணைப்பு அவற்றின் பண்புகளை உணவுப் பொருள்களுக்கு
உகந்ததாக மாற்றுகிறது.
4. சகப்பிணைப்பின் மூன்று வகைகள்
● ஒற்றை சகப்பிணைப்பைக் குறிக்க அணுக்களுக்கிடையே ஒரு கோடு(-)
பயன்படுத்துப்படுகிறது. (எ.கா) H- H
● இரட்டை சகப்பிணைப்பைக் குறிக்க அணுக்களுக்கிடையே இரண்டு கோடுகள்
(=) பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா) o=o
● மும்மை சகப்பிணைப்பைக் குறிக்க அணுக்களுக்கிடையே மூன்று கோடு(Ξ)
பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா) N ΞN
5. வேறுபட்ட எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவுள்ள கரைப்பான்கள் உருவாகின்றன. எ.கா: நீர், எத்தனால், அசிட்டிக் அமிலம், அம்மோனியா அயனிச்சோமங்கள் இத்தகைய
கரைப்பான்களில் எளிதில் கரைகின்றன.
6. எலக்ட்ரான் கவர் தன்மையில் குறைந்த அளவே வேறுபாடு கொண்ட கார்பன் மற்றும்
ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவற்ற கரைப்பான்கள்
உண்டாகின்றன. எ.கா: அசிட்டோன், பென்சீன்,டொலுவீன், டா்பன்டைன். சகப்பிணைப்புச்
சேர்மங்கள் இத்தகைய கரைப்பான்களில் கரைகின்றன.
7. பிணைப்பில் உள்ள இணை எலக்ட்ரான்களை தன்னை நீநோக்கி கவர்ந்திழுக்கும் தன்மை எலக்ட்ரான் கவர் தன்மை எனப்படும்.
8. அதிக விலைமதிப்புள்ள உலோகமான தங்கம் அரிமானத்திற்கு உள்ளாவதில்லை.
9. வண்ணம் பூசுதல், எண்ணெய் விடுதல், பசை பூசுதல், முலாம் பூசுதல் மற்றும்
உலோகக்கலவையாக்கல் போன்றவை உலோக அரிமானத்தை தடுக்கும் முறைகள் ஆகும்.
10. வைட்டமின் - C, வைட்டமின் - E போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உணவுப்
பொருள்கள் எளிதில் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.
11. காற்றுப் புகாத கலன்களில் உணவுப் பொருள்களை பாதுகாப்பது ஆக்ஸிஜனேற்றத்தால்
உணவு வீணாவதைத் தடுக்கும். உருளைக் கிழங்கு வறுவல் போன்ற அடைக்கப்பட்ட
உணவுப் பொருள்களின் பைகளில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதன் மூலம், அப்பைகளில்
உள்ள ஆக்ஸிஜன் நீக்கப்படுகிறது.