Science Box questions, Do you know, 9th std Term ii unit - 3. காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
9 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
3. காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
1. பல்வேறு இடங்களில் காந்தப்புலத்தின் மதிப்பினைத் தெரிந்துக் கொள்வோமா?
◆ மனித மூளையின் காந்தப் பாய அடர்த்தி = 1pT =1 பிகோ டெஸ்லா
◆ விண்மீன் திரளின் காந்தப் பாய அடர்த்தி - 05 nT - 05 நேனோ டெஸ்லா
◆ நுண்ணலை அடுப்பால் விளையும் காந்தப் பாய அடர்த்தி (ஒரு அடி தொலைவில்) = 8 μΤ = 8 மைக்ரோ டெஸ்லா
◆ சென்னையில் புவியின் காந்தப் பாய அடர்த்தி (13 அட்ச ரேகை) = 42μΤ=42 மைக்ரோ டெஸ்லா
◆ MRI ஸ்கேனரின் காந்தப்பாய அடாத்தி - 2T
2. சில கடல் ஆமைகள் (லாஜெர்ஹெட் கடல் ஆமை) அவைகள் பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன. ஒரு ஆராய்ச்சியில் ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய “புவிக்காந்த உருப்பதித்ல்” என்னும் முறையைக் கையாள்கின்றன என்று கூறப்படுகிறது. இந்த ஆமைகள், புவியின் பல்வேறு இடங்களிலுள்ள காந்தப்புல வலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவையாம். இந்த நினைவாற்றல் அவைகள் தாயகத்திற்குத் திரும்புவதற்கு
உதவுகிறது.
3. ஹான்ஸ் கிரிஸ்டன் ஓாஸ்டெட், (14 ஆக்ஸ்ட் 1777 - மார்ச் 9, 1851) - அவர்
மின்னோட்டம் காந்தப்புலத்தை உருவாக்கும் என்பதனைக் கண்டறிந்தார். மின்னோட்டத்திற்கும் காந்தப்புலத்திற்கும் இடையேயான முதல் விளக்கம் இதுவாகும்.
4. 1824 ஆம் ஆண்டில், ஓர்ஸ்டெட் இயற்கை விஞ்ஞான அறிவைப் பரப்புவதற்காக செல்கேபேட் நச்சுரலேரியன்ஸ் உட்பிடெல்ஸ் (SNU) என்னும் ஒரு அமைப்பை நிறுவினார்.
5. மைக்கேல் ஃபாரடே (22 செப்டம்பர் 1791 - 25 ஆகஸ்ட் 1867) - இவரது முக்கியக் கண்டுபிடிப்புகளில் அடிப்படை மின்காந்தத் தூண்டல், டயா காந்தத்தன்மை மற்றும்
மின்னாற்பகுப்பு ஆகியவை அடங்கும்.
6. ஃபாரடேவை கெளரவிக்கும் பொருட்டு மின்தேக்குத்திறனுக்கான SI அலகுக்கு ஃபாரட் என அவர் பெயரிடப்பட்டுள்ளது.
7. ஒரு ஏற்று மின்மாற்றி மின்னழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆனால் மின்னோட்டத்தைக்
குறைக்கிறது மற்றும் மறுதலையாகவும் அமையும். அடிப்படையில் வெப்பம், ஒலி போன்ற வடிவில் ஒரு மின்மாற்றியில் ஆற்றல் இழப்பு ஏற்படும்.