Search This Blog

Science Box questions, Do you know, 9th std Term ii unit - 2. மின்னூட்டமும்‌ மின்னோட்டமும்‌


9 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌

2. மின்னூட்டமும்‌ மின்னோட்டமும்‌

1. புரோட்டான்௧ளின்‌ எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்‌ நேர்‌ மின்னூட்டத்தைப்‌ பெறலாம்‌
என்கின்ற தவறான புரிதல்‌ உள்ளது: உண்மையில்‌, அணுவினுள்‌ நன்கு உள்ளமைந்த அணுக்கருவிற்குள்‌ புரோட்டான்கள்‌ உள்ளன என்பதால்‌, அவற்றை சேர்க்கவோ நீக்கவோ
அவ்வளவு எளிதில்‌ முடியாது.

2.  எலக்ட்ரான்களைக்‌ கொண்டு மட்டுமே எதிர்‌ மின்னூட்டத்தையோ அல்லது நேர்‌ மின்னூட்டத்தையோ நம்மால்‌ பெற முடியும்‌. எலக்ட்ரான்கள்‌ அதிகம்‌ இருப்பின்‌, பொருள்‌
எதிர்‌ மின்னூட்டத்தையும்‌ குறைந்திருப்பின்‌ நேர்‌ மின்னூட்டத்தையும்‌ பெறும்‌.

3. இரு புள்ளி மின்னூட்டங்களுக்கிடையில்‌ ஏற்படும்‌ நிலைமின்னியல்‌ விசை நியூட்டனின்‌ மூன்றாவது விதியின்‌ அடிப்படையில்‌ இயங்குகிறது. ஒரு மின்னூட்டத்தின்‌ மீது ஏற்படும்‌
விசை வினையாகவும்‌ இன்னொரு மின்னூட்டத்தின்‌ மீது ஏற்படும்‌ விசை
எதிர்வினையாகவும்‌ செயல்படுகின்றன.

4. மின்னியக்கு விசை உண்மையில்‌ ஒரு விசையல்ல. முற்காலத்தில்‌ மின்சாரம்‌ சார்ந்த
பணிகளை மேற்கொண்ட அறிவியலறிஞர்கள்‌ எலக்ட்ரான்கள்‌ கம்பியில்‌ இயங்க ஒரு விசை தேவைப்படும்‌ எனக்கருதினர்‌. ஆனால்‌, இதனை விசை என்று கருதுவதை விட
இத்தகைய இயக்கத்திற்குக்‌ காரணமாக ஒரு மின்னழுத்த வேறுபாடு உள்ளது என்ற
கருத்தினால்‌ மின்சார இயக்கத்தை எளிதில்‌ விளக்க முடிகிறது. எனினும்‌ மின்னியக்கு விசை என்ற பெயர்‌ இன்றளவும்‌ நிலைத்து விட்டது இதன்‌ அலகு வோல்ட்‌.

5. மின்னியக்கு விசை மற்றும்‌ மின்னழுத்த வேறுபாடு இவை இரண்டையும்‌ அளவிட வோல்ட்‌
என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.

6.  மின்தடையை அளவிட உதவும்‌ அலகு ஓம்‌

7. மனித உடலில்‌ மின்னூட்டத்‌ துகள்களின்‌ இயக்கத்தால்‌ மிகவும்‌ வலிமை குன்றிய
மின்னோட்டம்‌ உருவாகிறது. இதை நரம்பிணைப்பு சைகை என்பர்‌. இத்தகைய சைகைகள்‌
மின்‌ வேதிச்செயல்களால்‌ உருவாகின்றன. மூளையிலிருந்து பிற உறுப்புகளுக்கு
நரம்பியல்‌ மண்டலம்‌ மூலமாக இவை பயணிக்கின்றன.

8. ஜுல்‌ வெப்ப விளைவு நேர்‌ மற்றும்‌ மாறுதிசை மின்னோட்டங்கள்‌ இரண்டிலேயும்‌ நிகழும்‌.

9. இந்தியாவில்‌, வீடுகளுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ மாறு மின்னோட்டத்தின்‌ மின்னழுத்தம்‌
மற்றும்‌ அதிர்வெண்‌ முறையே 220 V , 50Hz ஆகும்‌. மாறாக, அமெரிக்க ஜக்கிய நாடுகளில்‌ அவை முறையே 110 V மற்றும்‌ 60 Hz ஆகும்‌.

10. உலர்ந்த நிலையில்‌ மனித உடலின்‌ மின்தடை ஏறக்குறைய 1,00,000 ஓம்‌. நம்‌ உடலில்‌ தண்ணீர்‌ இருப்பதால்‌,மின்‌ தடையின்‌ மதிப்பு சில நூறு ஓம்‌ ஆகக்‌ குறைந்து விடுகிறது.
எனவே, ஒரு மனித உடல்‌ இயல்பிலேயே மின்னோட்டத்தைக்‌ கடத்தும்‌ நற்கடத்தியாக
உள்ளது. ஆகவே, மின்சாரத்தைக்‌ கையாளும்‌ போது நாம்‌ சில முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளைக்‌ கடைபிடிக்க வண்டும்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url