Science Box questions, Do you know, 9th std Term ii unit - 4. தனிமங்களின்‌ வகைப்பாடு அட்டவணை

9 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
4. தனிமங்களின்‌ வகைப்பாடு அட்டவணை

1. ஜாஹன்‌ வுல்‌ஃபாங்‌ டாபர்னீர்‌ - இவர்‌ மும்மை விதியால்‌ நன்கு அறியப்பட்டவர்‌. இவர்தான்‌
முதன்‌ முதலில்‌ தீப்பொறியூட்டியைக்‌ (Lighter) கண்டு பிடித்தவர்‌. இது “டாபரினீரின்‌ விளக்கு” என
அறியப்பட்டது. பர்‌ஃப்பூரல்‌ எனும்‌ இனிய மணமுடைய திரவத்தைக்‌ கண்டு பிடித்தார்‌.
பிளாட்டினத்தை வினையூக்கியாக உபயோகப்படுத்தினார்‌.

2. ஜான்‌ நியூலாந்து (1837 - 1898) - இவர்‌ 1865இல்‌ “எண்ம விதியை” வெளியிட்டார்‌. இந்த விதியின்படி கொடுக்கப்பட்டுள்ள தனிமங்கள்‌ எதுவாக இருந்தாலும்‌ அதனிலிருந்து
எட்டாவது இடத்தில்‌ அமைந்துள்ள தனிமத்திற்கு இணையான பண்புகளைக்‌ காண்பிக்கும்‌.

* நியூலாந்து அந்த நேரத்தில்‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ள எல்லா தனிமங்களையும்‌ ஹைட்ரஜனில்‌ இருந்து தோரியம்‌ வரை ஏழு குழுக்களாக அமைத்தார்‌. இதை
இவர்‌ சங்கீதத்தின்‌ ஏழு ஸ்வரங்களோடு தொடர்பு படுத்தினார்‌.

* இவரின்‌ அட்டவணையில்‌ தனிமங்கள்‌ அவற்றின்‌ அணு எடையின்‌ படி வரிசைப்‌ படுத்தப்‌ பட்டு அவற்றிற்கு ஏற்றாற்‌ போல்‌ எண்‌ கொடுக்கப்பட்டது.

* டிமிட்ரி மெண்டெலீவ்‌ மற்றும்‌ லோதார்‌ மேயருக்கு அடுத்தாற்‌ போல்‌ இவர்‌ மதிப்பிற்குரிய டேவி பதக்கத்தை 1887 இல்‌ பெற்றார்‌.

3. டிமிட்ரி ஐவனேவிச்‌ மெண்டலீவ்‌ தனிமங்களின்‌ ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்‌. இவர்‌ நவீன தனிம வரிசை அட்டவணையின்‌ தந்தை என்று அழைக்கப்படுகிறார்‌.

4. ஹென்றி க்வைன்‌ மோஸ்லே - இவர்‌ அணு எண்‌ எனப்படும்‌ வேதிக்‌ கருத்தினை உருவாக்கினார்‌.

* நீல்ஸ்‌ போரின்‌ கொள்கைக்கு சோதனை மூலம்‌ முதல்‌ நிரூபணம்‌ கொடுத்ததால்‌ அணு இயற்பியல்‌, நியூக்ளியர்‌ இயற்பியல்‌ மற்றும்‌ குவாண்டம்‌ இயற்பியலை உயர்‌ நிலை அடைச்‌ செய்தது.

* இது போரின்‌ ஹைட்ரஜன்‌ அணு அலைமாலை டகொள்கைக்கு அப்பாற்பட்டது இந்த கொள்கை எ்னஸ்ட்‌ ரூதர்‌ஃபோர்டு மற்றும்‌ அண்டோனியஸ்‌ வான்டன்‌ புரூக்‌ மாதிரியை மேம்படுத்த உதவியது. (அந்த கொள்கை “ஒரு அணு அதன்‌ உட்கருவில்‌ கொண்டிருக்கும்‌ நேர்மின்‌ சுமையே தனிம அட்டவணையில்‌ உள்ள அணு எண்ணுக்குச்‌ சமமாகும்‌ எனக்‌ கூறியது).

5. IUPAC னால்‌ அறிமுகபடுத்தப்‌ பட்ட புதிய தனிமங்கள்‌

நிஹோனியம்‌ (Nh) தனிமம்‌ 113. (முதலில்‌ இது Uut)

மாஸ்கோவியம்‌ Mc) தனிமம்‌ 115. (முதலில்‌ இது Uup)

டன்னஸ்ஸைன்‌ (Ts தனிமம்‌ 117. (முதலில்‌ இது Uus

ஓகனெஸ்ஸன்‌ (Og தனிமம்‌ 118. (முதலில்‌ இது Uuo).

6. IUPAC -  (International Union of Pure and Applied Chemistry) என்பது ஒரு சர்வதேச நிறுவனங்களின்‌ கூட்டமைப்பாகும்‌. இது பன்னாட்டு தனிம
மற்றும்‌ பயன்பாட்டு வேதியியல்‌ ஒன்றியம்‌ என தமிழில்‌ அழைக்கப்படுகிறது. இது
சுவிட்சர்லாந்தில்‌ உள்ள ஜார்ச்‌ எனும்‌ இடத்தில்‌ பதியப்பட்டுள்ளது மற்றும்‌ இந்த நிறுவனத்தின்‌ செயலகம்‌ அமெரிக்காவில்‌ உள்ளது.

7. வண்ண உப்புக்களின்‌ பெரும்‌ பகுதி d தொகுதி தனிமங்களைச்‌ சார்ந்ததாகும்‌
(இடைநிலைத்‌ தனிமங்கள்‌)

*  அநேக d தொகுதி தனிமங்கள்‌ வேறுபட்ட ஆக்ஸிஜனேற்ற நிலையைக்‌ கொண்டுள்ளன.

* இந்த இடைநிலைத்‌ தனிமங்கள்‌ வினைஊக்கித்‌ தன்மையையும்‌ கொண்டுள்ளன.

*  மேலே உள்ள எல்லா d- தொகுதி தனிமங்களின்‌ பண்புகளுக்கும்‌ காரணம்‌ அவற்றில்‌ இருக்கின்ற இடைநிலை அயனிகளே ஆகும்‌.

8. ஹைட்ரஜன்‌ உலகில்‌ அதிக அளவு காணப்படும்‌ ஒரு தனிமமாகும்‌. மேலும்‌ ஐந்தில்‌ - நான்கு பங்கு எல்லா பருப்பொருள்களையும்‌ உருவாக்குவதில்‌ பங்கு வகிக்கிறது. இது எதிர்கால எரிபொருளாகக்‌ கருதப்பட்டாலும்‌ இதை உருவாக்குவதும்‌, கொண்டு செல்வதும்‌, சேமித்து வைப்பதும்‌ சற்று கடினமாகவே காணப்படுகிறது.

●  இராட்சத வாயுக்‌ கோள்களில்‌ காணப்படுவது போல்‌ மிகவும்‌ அதிகமான வெப்பநிலை மற்றும்‌ அழுத்தத்தில்‌ இது உலோகமாக மாறுவதற்கு சாத்தியக்‌கூறுகள்‌ உண்டு.

●  இராட்சத வாயுக்கோள்‌ என்பது மிக அதிகமாக ஹைட்ரஜன்‌ மற்றும்‌ ஹீலியம்‌ போன்ற வாயுக்கள்‌ மற்றும்‌ நடுவில்‌ மிகச்‌ சிறிய பாறை போன்ற அமைப்பைக்‌ன்கொண்டது. நமது சூரியக்‌ குடும்பத்தில்‌ வியாழன்‌, சனி, யுரேனஸ்‌ மற்றும்‌ நெப்டியூன்‌ இப்படிப்‌ பட்ட கோள்களாகும்‌.

9. மோனல்‌ என்பது 67% நிக்கலும்‌ செம்பு மற்றும்‌ மிகச்‌ சிறிதளவு இரும்பு, மாங்கனீசு,.கார்பன்‌ மற்றும்‌ சிலிகான்‌ கலந்த ஒரு உலோகக்‌ கலவை. இது தூய நிக்கலை விட
வலிமையானது. இது துருப்பிடித்தலையும்‌ அரித்தலையும்‌ தடுத்து நிறுத்தும்‌ வலிமை
கொண்டது. கடல்‌ நீரால்‌ கூட அரிக்கப்படுவதில்லை. இது விமானக்கட்டுமானத்திலும்‌
சோதனை இராக்கெட்டுகளின்‌ தோல்‌ போன்ற வெளிப்‌புற பகுதியிலும்‌ பயன்படுகின்றது.

10. ஒரு உலோகம்‌ பாதரசத்தோடு சேர்க்கப்படும்‌ போது அது அமால்கம்‌ என அழைக்கப்படுகிறது.
Next Post Previous Post