Science Box questions, Do you know, 9th std - term iii unit - 1.வெப்பம்‌

9 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
1.வெப்பம்‌
1. சில நேரங்களில்‌ நாய்‌ தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக்‌ கொண்டே சுவாசிப்பதைப்‌ பார்த்திருப்பீரகள்‌. அப்படி சுவாசிக்கும்‌ போது அதன்‌ நாக்கிலிருக்கும்‌ ஈரப்பதம்‌ திரவமாக மாறி பின்‌ ஆவியாகிவிடும்‌. திரவநிலை வாயுநிலைக்கு மாற வெப்ப ஆற்றல்‌ தேவைப்படும்‌. இந்த வெப்ப ஆற்றல்‌ நாயின்‌ நாக்கில்‌ இருந்து பெறப்படுகிறது. இவ்வாறு நாய்‌ தன்‌ நாக்கில்‌ இருக்கும்‌ தன்‌ வெப்பத்தை வெளியேற்றி தன்னைக்‌ குளிர்வித்துக்‌ கொள்கிறது.

2. எஸ்கிமோக்கள்‌ வசிக்கும்‌ பனிவீடுகளில்‌ வசிப்பவர்கள்‌ தகுந்த வெப்பத்தைக்‌ கடத்தாத பொருட்களைப்‌ பயன்படுத்தி பனி வீடுகளின்‌ உட்பகுதியை ஒப்பீட்டளவில்‌ வெப்பப்படுத்தி வைத்திருப்பார்கள்‌. ஒரு தெளிவான பனிகட்டிப்‌ படிகத்தை வீட்டின்‌ கூரையில்‌ பொருத்தி வீட்டிற்குள்‌ வெளிச்சத்தைக்‌ கொண்டுவருவார்கள்‌. குளிர்‌ காற்று வீட்டுக்குள்‌ வராமல்‌ தடுக்க கதவுகளின்‌ மடிப்புகளுக்கு விலங்குகளின்‌ தோல்களைப்‌ பயன்படுத்துவார்கள்‌.
பனிக்கட்டி மற்றும்‌ காரிபோ என்ற ஒருவகை மான்களின்‌ மென்மையான மயிர்கள்‌ ஆகியவற்றைப்‌ பயன்படுத்தி தங்களது படுக்கைகளை செய்துகொள்வர்‌.

3. மின்விளக்கு அல்லது மின்விசிறி ஆகியவற்றின்‌ மேற்பகுதியில்‌ இருக்கும்‌ சுவர்‌ அல்லது கூரையில்‌ கருப்புக்‌ கறைபடிந்திருப்பதைப்‌ பார்த்திருப்பீர்கள்‌. வெப்பச்‌ சலனத்தின்‌ காரணமாக மின்விளக்கு அல்லது மின்விசிறியில்‌ இருந்து மேலே செல்லும்‌ வெப்பக்காற்றில்‌ கலந்திருக்கும்‌ தூசியினால்தான்‌ இந்தக்‌ கறை ஏற்படுகிறது.

4. விறகு அடுப்பைப்‌ பயன்படுத்தும்‌ போது வெப்பம்‌ பரவும்‌ மூன்று வழிகளையும்‌ நாம்‌ பார்க்கலாம்‌. விறகினை எரிக்கும்‌ போது ஒருமுனையில்‌ இருந்து மறுமுனைக்கு
வெப்பக்கடத்தல்‌ மூலம்‌ வெப்பம்‌ பரவுகிறது. எரியும்‌ விறகின்‌ மேற்பகுதியில்‌ இருக்கும்‌
காற்று வெப்பமாகி மேலெழுந்து செல்வதால்‌ வெப்பச்சலனம்‌ மூலம்‌ வெப்பம்‌ கடத்தப்படுகிறது. வெப்பக்‌ கதிர்வீச்சினால்‌ அடுப்பில்‌ இருந்து வரும்‌ வெப்பத்தை நாம்‌ உணரமுடிகிறது.

5. பல்வேறு நிலைகளில்‌ இருக்கும்‌ நீரின்‌ தன்‌ வெப்ப ஏற்புத்‌ திறன்‌ கீழே
கொடுக்கப்பட்டூள்ளது.

◆ நீர்‌ (திரவநிலை) - 4200 JKg ⁻¹K⁻¹
◆ பனிக்கட்டி(திட நிலை) - 2100 JKg ⁻¹K⁻¹
◆ நீராவி (வாயு நிலை) - 460 JKg ⁻¹K⁻¹

6. ஒர வெப்பநிலையில்‌ இருக்கும்‌ வெந்நீர்‌ மற்றும்‌ நீராவி நம்‌ உடலில்‌ படும்போது நீராவி நமது தோல்‌ பகுதியில்‌ அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்‌?

● நீராவி நமது உடலில்‌ இருக்கும்‌ தோல்‌ மீது பட்டவுடன்‌ முதலில்‌ நீராக நிலை மாற்றமடையுடம்‌. அப்போது உள்ளுறை வெப்பத்தினால்‌ வெப்பநிலை மாறாமல்‌ தன்‌ நிலையை மாற்றிக்‌ கொள்ளும்‌. நீராவி வெந்நீராக மாறிய பின்னரே
அதனுடைய வெப்பம்‌ குறையத்‌ தொடங்கும்‌.

● ஆனால்‌ வெந்நீர்‌ தோலில்‌ படும்போது உடனடியாக வெந்நீரின்‌ வெப்பம்‌
தோலுக்கு கடத்தப்படுகிறது. இதனால்‌ வெப்பநிலை உடனடியாக குறைய
ஆரம்பிக்கிறது. நீராவி நீராக மாறும்‌ வரை வெப்பநிலை மாறாமல்‌ இருப்பதாலும்‌ அதிக நேரம்‌ தோலானது அதிக வெப்பத்துடன்‌ தொடர்பில்‌ இருப்பதாலும்‌ அதிக பாதிப்பை ஏற்படுத்தும்‌.

Next Post Previous Post