Science Box questions, Do you know, 9th std Term iii unit - 2. ஒளி
9 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
2. ஒலி
1. ஹென்றி ரூடால்ப் ஹெர்ட்ஸ் - இவர் JC மேக்ஸ்வெல் என்பவரின் மின்காந்தக் கொள்கையை சோதனை மூலம் நிரூப்பித்தார்.
2. ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற கருவிகளை கண்டுபிடிப்பதற்கான அடித்தளத்தை இவர் அமைத்தார்.
* மேலும் ஒளிமின் விளைவையும் இவர் கண்டுபிடித்தார். அதனை, பிற்காலத்தில் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் நிரூபித்தார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக,
அதிர்வெண்ணிற்கான SI அலகிற்கு அவரது பெயர் வழங்கப்பட்டுள்ளது.
2. ஒலியானது காற்றைவிட 5 மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். கடல் நீரில் ஒலியின் வேகம் மிக அதிகமாக (அதாவது 5500 கிமீ/மணி) இருப்பதால், கடல் நீருக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று கடல் நீரில் மூலமாக எளிதில் பேசிக் கொள்ள முடியும்.
3. ஒலி முழக்கம்: ஒரு பொருளின் வேகமானது, காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீ.வி⁻¹)
அதிகமாகும் போது அது மீயொலி வேகத்தில் டுசல்கிறது. துப்பாக்கிக் குண்டு, ஜெட் விமானம், ஆகாய விமானங்கள் போன்றவை மீயொலி வேகத்தில் செல்பவையாகும்.
4. ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகின்றது. இதனை ஒலி முழக்கம் என்கிறோம்.
5. ஓலி மாசுபாடு: இரைச்சல் என்பது இனிமையற்ற மற்றும் தவையற்ற ஒலியாகும். ஓலியின் செறிவு 120 டெசிபெல் (db) அளவை விட அதிகமாகும்போது செவிக்கு வலியை உண்டாக்கும்.
◆ இதைவிட அதிகமான செறிவை உடைய ஒலியைக் கட்கும் போது செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தரமாக காது கேட்காத நிலை ஏற்படும்.
அவை மனரீதியான பாதிப்பையும் உண்டாக்கலாம்.
◆ தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் செவிப் பாதுகாப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். மிகுந்த இரைச்சலுள்ள பேண்ட் ஒலியை நீண்ட நேரம் கேட்கும்பொழுதும் தற்காலிமாக கட்கும் திறன் பாதிக்கப்படக்கூடும்.
6. வெளவால்கள், டால்பின்கள், எலிகள், திமிங்கலங்கள் மற்றும் ஒரு சில பறவைகள்ன்பயணம் செய்யவும். தகவல் பரிமாற்றத்திற்கும் மீியொலிகளைப் பயன்படுத்துகின்றன.
7. வெளவால், டால்பின் மற்றும் ஒருசில திமிங்கலங்கள், மீியொலிகளைப் பயன்படுத்தும் முறையாகிய, எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்துகின்றன.
இதன் மூலம் வெளவால்கள் இருட்டான குகைகளில் பயணிப்பதோடு, தங்களுக்குத் தேவையான இரையையும் பெற்றுக்கொள்கின்றன.
8. டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள், தண்ணீருக்கு அடியில் மீயொலி அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்பி அதன் மூலம் பயணிக்கின்றன. மேலும் தங்களுக்குத் தேவையான இரையையும் தேடிக்கொள்கின்றன.
9. இருட்டில் வாழக்கூடிய பூச்சிகளான, அந்துப்பூச்சி, வெட்டுக்கிளி, இடையன்புூச்சி, வண்டுகள்,
லேஸ்விங்க் போன்றவை மீயொலிகளைக் கேட்கும் திறன்பெற்றவை. எனவே இவை
எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கின்றன.
10. எண்ணெய்ப் பறவைகள் மீயொலிகளைப் பயன்படுத்தி இரவில் பறக்கவும் வேட்டையாடவும்
செய்கின்றன. இவை, வெளவால்கள் மற்றும் பிற பூச்சிகளைவிட குறைந்த அதிர்வெண் கொண்ட மீயொலிகளைப் பயன்படுகின்றன.