Science Box questions, Do you know, 9th std Term iii unit - 1. பாய்மங்கள்
9 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
1.பாய்மங்கள்
1. கோடாரி மற்றும் கத்தியின் வெட்டும் பகுதி கூர்மையாக வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில்
பரப்பளவு குறையும் போது அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே, ஒரு பொருளை
வெட்டுவதற்கு குறைந்த அளவு விசையே போதுமானது.
2. அதிக எடை கொண்ட வாகனங்கள் ஆறு அல்லது எட்டு சக்கரங்களைக் கொண்டுள்ளன. பரப்பளவு அதிகரிக்கும் போது அழுத்தம் குறைந்து, சாலையில் வாகனங்கள் ஏற்படுத்தும் அழுத்தமானது குறைகின்றது.
3. விலங்குகள் அவற்றின் கூர்மையான பற்கள் மூலம் ஒரு சதுர அங்குலத்தில் 750 பெளண்ட்டுக்கும் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்.
4. மனிதனின் நுரையீரல் கடல்மட்ட வளிமண்டல அழுத்தத்தில் 101.3 kpa
சுவாசிப்பதற்கேற்ப தகந்த தகவமைப்பைக் கொண்டுள்ளது. உயரமான மலைகளின் மேலே செல்லும் போது அழுத்தம் குறைவாதால், மலையேறு பவர்களுக்கு உயிர்வாயு உருளை இணைந்த சிறப்பான சுவாசிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
5. எரிபொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் psi என்னும் அலகுகளில் குறிப்பிடப்படுகிறது. Psi என்னும் அலகு ஒரு அங்குலத்தில் (inch) செயல்படும் ஒரு பாஸ்கல் அழுத்தம் ஆகும். இது அழுத்தத்தைக் அளக்கும் ஒரு பழமையான முறையாகும்.
◆ psi= 6895 பாஸ்கல்
◆ 1 psi= 0.06895 ×10⁵ பாஸ்கல்
5. ஒரு டயரின் அழுத்தம் 30 psi எனில் அது 2.0685 ×10⁵ பாஸ்கலுக்கு சமமாகும்.
இது ஏறத்தாழ வளிமண்டல அழுத்தத்தின் இருமடங்கிற்கு சமமாக உள்ளது.
6. வளிமண்டலத்தின் நிறை
◆ புவியின் மேற்பரப்பில் செயல்படும் சராசரி வளிமண்டல அழுத்ததின் மதிப்பானது கடல்மட்ட அளவில் உள்ள சராசரி அழுத்தத்தை விட சற்று குறைவாகவே உள்ளது. புவியின் மேற்பரப்பு கடல்மட்ட அளவை விட சற்று உயரமாக இருப்பதே
இதற்குக் காரணமாகும்.
◆ வளிமண்டத்தின் மொத்த நிறையினை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
Pa= F/A = (mₐg)/4πR² ) ;
mₐ = (Pₐ4πR²)/g = 5.2×10¹⁸கிகி
◆ இங்கு R = 6400 கிமீ என்பது புவியின் ஆரமாகும்.ஃ
7. நன்னிரைவிட உப்புநீர் (கடல் நீர்) அதிகமான மிதப்புவிசையை ஏற்படுத்தும். ஏனெனில் மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது போல அதன் அடர்த்தியையும் சார்ந்துள்ளது.
8. காற்றை விட ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் வெப்பக்காற்று ஆகியவற்றின் அடர்த்தி குறைவாக உள்ளதால், அவை மிதப்புவிசையைப் பெறுகின்றன.
9. மீன்கள் காற்றினால் நிரப்பப்பட்ட நீந்தும் பையைக் கொண்டுள்ளன. நீரின் மேலே எழும்பவும் உள்ளே மூழ்கவும் ஏற்றாற்போல இவற்றின் பருமனையும் அடாத்தியையும்
இவை மாற்றிக்கொள்கின்றன.
10. பனிப்பாறைகள் மற்றும் கப்பல்கள் மிதப்புத் தன்மையின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு மிதக்கின்றன. நீந்துபவர்களும் இவ்வாறே மிதக்கின்றனர்.
11. பெட்ரோலியப் பொருள்கள் நீரில் மிதப்பதற்கு அவற்றின் தன்னடர்த்தி குறைவாக உள்ளதே காரணமாகும்.
12. நீர மூழ்கிக் கப்பல்கள் அதன் தனியறைகளில் நீரை உட்செலுத்தியும், வெளியேற்றியும் மிதக்கும் நிலைகளை மாற்றிக்கொள்கின்றன.
13. ஆர்ட்டீசியன் நீர்த்தேக்கம் என்பது நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு ஆகும் . இது போன்ற கிணறுகளில் நீர் மூலாதாரம் , அக்கிணறுகளை விட உயரமான மட்டத்தில் உள்ளதால் பம்புகளின் உதவியில்லாமல் நீரானது வெளியேறுகின்றது .