Science Box questions, Do you know, 9th std unit - 6. தாவர உலகம் - தாவர செயலியல்
9 ஆம் வகுப்பு - முதல் பருவம்
6. தாவர உலகம் - தாவர செயலியல்
1. தமிழில் மைமோசா புடிகா (Mimosa pudica( 'தொட்டால் சிணுங்கி' எனவும் மற்றும் டெஸ்மோடியம் கைரன்ஸ் (Desmodium gyrans) 'தொழு கன்னி' என்றும்
அழைக்கப்படுகின்றன.
2. டெஸ்மோடியம் கைரான்ஸ் இந்திய தந்தித் தாவரம் என்ற தாவரத்தில் உள்ள
கூட்டிலைகள் மூன்று சிற்றிலைகளை கொண்டிருக்கும்.
3. டெஸ்மோடியம் கைரான்ஸ் என்பது நடனமாடும் தாவரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தாவரத்தை தான் இந்திய அறிவியல் அறிஞரான ஜெகதீஸ் சந்திரபோஸ் தனது
ஆய்விற்கு பயன்படுத்தினார்.
4. தாவரங்கள் உயிர்பிழைத்து வாழ மிகச்சிறந்த சூழலை அசைவுகள் உருவாக்குகின்றன
5. அசைவு இயக்கங்கள் மெதுவாகவும், தூண்டுதல் இருக்கும் திசையை நோக்கியும் அல்லது விலகியும் மற்றும் வளர்ச்சியை சார்ந்து இருக்கும்
6. திசை சாரா அசைவு ஒரு உடனுக்குடனான செயலாகும்
7. சில உவர்த்தாவரங்கள் எதிர்புவிசார்பசைவு உடையவை. அவை 180℃ கோணத்தில் செங்குத்தான வேர்களை கொண்டவை. எ.கா. ரைசோபோரா, சுவாச வேர்கள்
8. சில தாவரங்கள் பூச்சிகள், சிறு விலங்கினங்களையும், தவளையைக் கூட உண்ணுகின்றன.
எடுத்துக்காட்டு: நெபந்தஸ், ட்ரோஸிரா, வீனஸ் பூச்சிப்பிடிப்பான்.
9. நடுக்கமுறு வளைதல் என்ற திசைசாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான்
என்றழைக்கப்படும் டையோனியா மிஃசிபுலா என்ற தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திசைக்சாரா தூண்டலில் இது மிக வேகமானது ஆகும்.
10. தாவரங்கள் மட்டுமே ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆக்சிஜனை வெளியிடுகிறது
11. பச்சையம் ஹீமோகுளோபினை மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்.
12. அறிவியலாளர்கள் எலிசியா குளோரோட்டிகா என்ற மரகத பச்சை நிறமுடைய கடல் அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர். இவை ஒளிச்சேர்க்கை மூலமாக ஆற்றலை உற்பத்தி செய்கின்றன என்று கண்டறிந்தனர். இந்த கடல் அட்டை வெளச்சீரியா லிட்டோரியா என்ற
பாசியை உட்கொள்கின்றன. உட்கொள்ளப்பட்ட பாசி கடல் அட்டை உடலில்
முழுமையாக ஜீரணம் அடையாமல், அட்டையின் உடலில் தங்கியிருந்து தொடர்ந்து
ஒளிச்சேர்க்கை மூலமாக அட்டைக்குத் தேவையான உணவை அளிக்கின்றது.
13. சூரிய ஒளி கடலில் 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை ஊடுருவ இயலும், கடலின்
ஆழம் அதிகரிக்க ஒளி மங்கிவிடும்.
14. அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஒளிச்சேர்க்கை வல்லுநர்கள் மெக்ஸிகோ நாட்டில் உள்ள பசுபிக் பெருங்கடலில் 2400மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெப்ப நீராற்றல் ஏற்படும் சிறுதுளையின் அருகில் காணப்படும் பசுங்கந்தக பாக்டீரியங்கள் வாழ்வதைக்
கண்டறிந்தனர். "இத்தகையப் பாக்டீரியங்கள் அசாதரணமான சூழ்நிலையில் வாழ்வதற்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்”.
15. இலைத்துளைகளில் உள்ள காப்பு செல்களில் பச்சையம் உள்ளது. ஆனால்
ஒளிச்சேர்க்கை செய்ய இயலாது. ஏனெனில், காப்பு செல்களில் RUBISCO மற்றும்
NADP- டிஹைட்ரோஜீனேஸ் போன்ற நொதிகள் இல்லை.
16. தாவரங்கள் தொடர்ந்து அதிக அளவு நீரை மண்ணிலிருந்து உறிஞ்சுகின்றன. அதனை
ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன. ஒரு வேதிய பகுப்பாய்வின்படி 100 கிராம் நீர் மற்றும் 260 கிராம் கார்பன் - டை ஆக்ஸைடு உடன் செர்ந்து வினைபுரிந்து 180 கிராம் அளவுள்ள கார்போஹைட்ரேட்டினை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்நிகழ்வில் 180 கிராம் ஆக்சிஜன் உருவாகிறது. இந்த 6வேதிவினையில் தாவரம் தனது வேரின் மூலம்
உறிஞ்சப்படும் நீரை முழுவதுமான உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தாது. எஞ்சியப் பெரும்பகுதி நீர் நீராவியாக்கப்பட்டு காற்றில் கரைகிறது.
17. தாவரம் உறிஞ்சும் நீரில் 1% நீரினை மட்டுமே பயன்படுத்துகின்றது. மீதமுள்ள 99% நீர் நீராவிபோக்கின் மூலம் இழக்கப்படுகின்றது.
18. ஒரு மக்காச்சோள தாவரம் தனது வாழ்நாளில் 54 கேலன் (gallons ) நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது.