Search This Blog

Science Box questions, Do you know, 9th std Term iii unit - 3. அண்டம்

9 ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
3. அண்டம்‌

1. இருண்ட பொருள்‌ என்றால்‌ என்ன என்ற புரிதல்‌ அறிவியலாளர்களுக்கு இன்னும்‌ முழுமையாக ஏற்படவில்லை. நம்மிடம்‌ தற்போதுள்ள எந்தக்‌ கருவியையும்‌ கொண்டு
அவற்றைக்‌ காண முடியாததால்‌, அப்பொருள்கள்‌ இருண்ட பொருள்‌ என
அழைக்கப்படுகின்றது.

2. அண்டமானது கிட்டத்தட்ட 27% இருண்டபொருள்களால்‌ ஆனதே. விண்வெளி முழுவதிலும்‌ இருண்ட ஆற்றல்‌ நிரம்பியுள்ளது. அண்டமானது எவ்வளவு விரிவடைகிறது என்பதை இருண்ட ஆற்றல்‌ கொள்கை விளக்குகின்றது. அண்டத்தில்‌ கிட்டத்தட்ட 68% இந்த இருண்ட ஆற்றல்‌ உள்ளது.

3. நமக்கு அருகாமையில்‌ உள்ள அண்டிரோமீடா விண்வெளித்‌ திரளின்‌ தொலைவு 2.5
மில்லியன்‌ ஒளி ஆண்டுகள்‌ ஆகும்‌. பூமி இயங்கும்‌ வேகத்தில்‌ (அதாவது 30 கிமீ / வி) நாம்‌ சென்றால்‌ கூட அதைச்‌ சென்றடைய 25 பில்லியன்‌ ஆண்டுகள்‌ தேவைப்படும்‌.

4. நாம்‌ பால்வெளி வீதியின்‌ மொத்த சுற்றளவான 1,00,000 ஒளி ஆண்டுத்‌ தொலைவைக்‌
கடக்க சூரியனுக்கு 200 மில்லியன்‌ ஆண்டுகள்‌ ஆகும்‌.

* ஒவ்வொரு நாளும்‌ நம்‌ பூமியை நோக்கி 126,000,000,000,000 குதிரைத்‌ திறன்‌
அளவுள்ள ஆற்றலை சூரியன்‌ வெளியேற்றுகிறது.

* வட துருவத்தில்‌ 186 நாள்களுக்கு சூரியனை நம்மால்‌ காண இயலாது.

* உலகம்‌ முழுவதும்‌ உள்ள மனிதர்கள்‌ பயன்படுத்தும்‌ ஆற்றலைப்‌ போல பூமியின்‌
பரப்பை நோக்கி வந்தடையும்‌ சூரியனின்‌ ஆற்றல்‌ 6000 மடங்கு அதிகம்‌.

* பூமியிலிருந்து வெறும்கண்ணால்‌ பார்த்தால்‌ தெரியும்‌ 6000 விண்மீன்களுள்‌ சூரியனும்‌
ஒன்று.

5. சூரியன்‌


6. சூரியனுக்குள்‌ 1 மில்லியன்‌ பூமிகளைவிட அதிகமான பூமிகளை வைக்க முடியும்‌. பூமியில்‌ 60 கிகி எடை கொண்ட ஒருவர்‌ சூரியனின்‌ மீது 1680 கிகி எடையைக்‌ கொண்டிருப்பார்‌.

7. அனைத்து விண்மீன்களும்‌ கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல்‌ தோன்றினாலும்‌ ஒர ஒரு விண்மீன்‌ மட்டும்‌ நகராமல்‌ உள்ளதுபோல்‌ கதரியும்‌. அது துருவ விண்மீன்‌ என்று அழைக்கப்படுகிறது.

8. நிலையாக அமைந்துள்ள புவியின்‌ சுழல்‌ அச்சிற்கு நராக அமைந்திருப்பதால்‌, துருவ
விண்மீன்‌ ஒர இடத்தில்‌ நகராமல்‌ உள்ளதுபோல்‌ தோன்றுகிறது. புவியின்‌ தெற்கு
அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன்‌ தெரிவதில்லை.

9. காஸ்மிக்‌ ஆண்டு - நொடிக்கு 250 கி.மீ (மணிக்கு 9 இலட்சம்‌ கி.மி) வேகத்தில்‌ பால்வெளி
வீதியைச்‌ சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும்‌ காலம்‌ காஸ்மிக்‌ ஆண்டு எனப்படும்‌. இது 2258 மில்லியன்‌ புவி ஆண்டுகளுக்குச்‌ சமம்‌.

10. நுண்‌ ஈர்ப்பு என்பது பொருள்கள்‌ அல்லது மனிதர்கள்‌ எடையற்றுப்‌ இருப்பதுபோல்‌
தோன்றும்‌ நிலை ஆகும்‌. விண்வெளி வீரர்களும்‌, ஒரு சில பொருள்களும்‌ விண்வெளியில்‌
மிதக்கும்போது, நுண்‌ ஈர்ப்பின்‌ விளைவுகளை நாம்‌ அறியலாம்‌.

11. நுண்‌ ஈர்ப்பு என்றால்‌ மிகச்சிறிய ஈர்ப்பு என்று பொருள்படும்‌. நுண்‌ ஈர்ப்பு நிலையில்‌ பல
நிகழ்வுகள்‌ வேறுபட்டுக்‌ காணப்படுகின்றன. ஈர்ப்பின்‌ விளைவு இல்லாததனால்‌, எரியும்‌ நெருப்பின்‌ சுடரானது வட்ட வடிவத்தில்‌ உள்ளது. நுண்‌ ஈர்ப்பு நிலையில்‌ பலவித
ஆய்வுகளை நாசா மேற்கொள்கிறது.

12. பன்னாட்டு விண்வெளி மையத்தைப்‌ பற்றிய சில தகவல்கள்‌


13. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ (இஸ்ரோ) தலைவர்‌, கே. சிவனின்‌ கூற்றுப்படி, 2021/ 2022-ம்‌ ஆண்டில்‌ இந்திய மனித விண்வெளிப்பயணத்‌ திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும்‌.

* இதன்‌ முதல்‌ பணிக்குழுவில்‌ மூன்று விண்வெளி வீர்கள்‌ இருப்பர்‌. ஜி.எஸ்‌.எல்‌.வி- III ராக்கெட்‌ மூலம்‌ விண்வெளிக்கு இவர்களை எடுத்துச்‌ செல்லும்‌ திட்டம்‌ சுகன்யான்‌ என்றழைக்கப்படுகிறது.

* இந்தத்‌ திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஏவுதல்‌ தொழில்நுட்பத்தில்‌ வல்லுநரான வி.ஆர்‌. லலிதாம்பிகா என்பவர்‌ இயக்குநராகப்‌ பொறுப்பேற்றுள்ளார்‌.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url