Science Box questions, Do you know, 9th std Term iii unit - 4. கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
9 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
4. கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
1. 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை கரிமச் சேர்மங்களை உயிருள்ள பொருள்களிடமிருந்து மட்டுமே பெற முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
2. 1829 ஆம் ஆண்டு பிரடெரிக் ஹோலர் என்பவர் கனிமச் சோரமங்களான லெட் சயனைடு மற்றும் நீர்த்த அம்மோனியா ஆகியவற்றிலிருந்து செயற்கை முறையில் யூரியாவைத்
தயாரித்தார்.
◆ Pb(OCN)₂ + 2NH₄OH ----> 2(NH₂)₂ CO + Pb (OH)₂
லெட்சயனேட் + திரவ அம்மோனியா ----> யூரியா + லெட் ஹைட்ராக்சைடு
◆ ஹோலர் அம்மோனியம் சயவனைடையே தயாரிக்க முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு யூரியா படிகங்கள் கிடைத்தன. இதுவே, செயற்கை முறையில் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மமாகும்.
◆ இது முக்கிய ஆற்றல் விதியை இல்லாமல் செய்துவிட்டது. 6ஹாலரின் இந்த முயற்சியைப் பின்பற்றி வேதியியலாளர்கள் அசிட்டிக் அமிலம், மீத்தேன், வண்ணப் பூச்சு போன்ற பல கரிமச்சேர்மங்களைத் தயாரித்தனர்.
* எனவே, பிரடெரிக் ஹோலர் “நவீன கரிம வேதியலின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.
3. கார்பன் சுழற்சி - கார்பன் சுழற்சி என்பது ஒரு உயிர்புவிவேதிச்சுழற்சி ஆகும். இச்சுழற்சியில் உயிர்க்கோளம், புவிக்கோளம், நீாக்கோளம் மற்றும் வளிமண்டலத்துடன் கார்பனானது
பரிமாற்றப்படுகிறது.
4. கார்பனானது, உயிரியல் சேர்மங்களின் முக்கியப் பகுதியாகவும், சுண்ணாம்புக்கல் போன்ற
கனிமங்களின் பெரிய அளவிலான பகுதியாகவும் உள்ளது.
5. ஹைட்ரஜன் சுழற்சி, நீச்சுழற்சி ஆகியவற்றுடன் இணைந்து, கார்பன் சுழற்சியானது பூமியின் மீது உயிரினங்களைத் தாங்குவதற்குத் தேவையான பல்வேறு நிகழ்வுகளின்
தொடர்ச்சியை உள்ளடக்கியுள்ளது.
6. கிரா.'.பீன் என்பது தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை
வடிவமாகும். இதில் தேனியின் கூட்டைப் போல அறுங்கோண வளைய வடிவில் கார்பன் அணுக்கள் ஒரே பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
* கிராஃபீன்தான் உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடிமன் குறைவான சோரமமாகும்.
இதன் தடிமன் ஒரு அணு அளவு மட்டுமே உள்ளது. இதுதான் உலகிலேயே மிகவும் லேசான சேர்மமாகும் (ஒரு சதுர அடியின் எடை 0.77 மில்லி கிராம் மட்டுமே).
* மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்களிலேயே மிகவும் வலிமையான சேர்மமும்
இதுவே ஆகும். (எஃகு இரும்பைக் காட்டிலும் 100 - 300 மடங்கு வலிமையானது). அறை வெப்ப நிலையில் இது ஒரு மிகச் சிறந்த வெப்பக் கடத்தி ஆகும். கிராபீனை 0.335 நானோமீட்டர் இடைவெளியில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது கிராஃபைட் கிடைக்கிறது.
கிராஃபைட்டில் உள்ள கிராஃபீன் அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
7. கார்பன் மோனாக்ஸைடானது நச்சுத்தன்மை வாய்ந்த கார்பனின் ஆக்ஸைடு வாயுவாகும். எரிபொருள்கள் பகுதியளவு (ஆக்ஸிஜன் குறைந்த சூழலில்) எரிக்கப்படும் போது கார்பன் மோனாக்ஸடு உருவாகிறது.
* இது நிறமற்ற மற்றும் மணமற்ற ஒரு வாயு ஆகும். மனிதர்கள் இதை
சுவாசிக்கும் போது இது மனித உடலுக்குள் நுழைந்து ஹீமோகுளோபினைத் தாக்குகிறது.
* இது ஹீமோகுளோபினில் காணப்படும் ஆக்ஸிஜனை இடப்பெயர்ச்சி செய்து அதன் மூலம் மனித உடலின் பாகங்களுக்கு ஆக்ஸிஜனைத் தடை செய்து, மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
8. ஒரு ஆய்வறிக்கையின்படி, நாம் நெகிழிகளின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளவிட்டால்
2050 ஆம் ஆண்டிற்குள், மீன்களைவிட நெகிழிகளே கடலுக்குள் அதிகமாக இருக்கும்.