பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை விளக்கும் படம் | Ponniyin Selvan Characters
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை
மூலம் :
Ponniyin Selvan
Characters
நடிகர்கள்
- சோழர் குல பட்டத்து இளவரசரும் அருள்மொழிவர்மனின் அண்ணனுமான ஆதித்த கரிகாலனாக விக்ரம்.[13]
- ஆதித்த கரிகாலனின் தம்பியும் மகாராஜா ராஜராஜ சோழர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி.[14]
- வீரமும் துணிச்சலும் மிகுந்த வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்திக் சிவகுமார்.[14]
- செம்பியன் மாதேவி மற்றும் மான்ய மந்திரிக்காக வேலை செய்பவனான ஆழ்வார்க்கடியான் நம்பியாக (திருமலையப்பனாக) ஜெயராம்.[15]
- சோழ இளவரசி மற்றும் சந்தரசோழ சக்கரவர்த்தியின் மகளான இளைய பிராட்டி என்னும் குந்தவை பிராட்டியாராக திரிசா.[16]
- வெட்கமிகுந்தவளான கொடும்பாளூர் இளவரசி என்றழைக்கப்படும் வானதியாக சோபிதா துலிபாலா.[17]
- கோடிக்கரையில் வாழும் படகோட்டிப் பெண்ணானச் சமுத்திரக்குமாரி என்னும் பூங்குழலியாக ஐஸ்வர்யா இலட்சுமி.[18]
- ஆதித்த கரிகாலனின் நண்பனானப் பல்லவ வம்சாவழியில் வரும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு.[19]
- பூக்கார வாலிபனான சேந்தன் அமுதனாக அஸ்வின் ககுமனு.[20]
- போரிட்டுப்பெற்ற 64 காயங்களுக்காகவும் வீரத்துக்காகவும் போற்றப்படும் பழுவேட்டரையர் குலத்திலிருந்து வந்த சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்.[21]
- சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதி சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன்.[21]
- ஈழத்துப் படையை நடத்திய சோழப் பேரரசின் சேனாதிபதி மற்றும் வானதியின் மாமனான பூதி விக்கிரம கேசரியாக பிரபு.[22]
- அழகினால் சுந்தரர் என்று பெயர்பெற்ற சோழப் பேரரசர் பராந்தக சோழனாக பிரகாஷ் ராஜ்.[23]
- சைவராக வளர்க்கப்பட்ட செம்பியன் மகாதேவியின் மகன் மதுராந்தகத் தேவராக(மறுபெயர் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்) ரகுமான்.[24]
- இளைய சம்புவரையன் என்னும் கடம்பூர் இளவரசனான கந்தமாறனாக அஸ்வின் ராவ்.[25]
- சம்புவரையர் குடும்பத்திலிருந்து வந்த கடம்பூர்ச் சிற்றரசர் கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி.[26]
- சுந்தர சோழரின் மாமனார் மற்றும் அவரது குழந்தைகளுக்குத் தாய்வழிப் பாட்டனான மிலாடுடையார் எனும் திருக்கோயிலூர் மலையமானாக லால்.[27]
- விஜயாலய சோழராக விஜயகுமார்.[28]
- கந்தராதித்தரின் மனைவி மற்றும் உத்தம சோழரின் தாயான பெரிய பிராட்டி எனும் செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா
- வீரபாண்டியனாக நாசர்.[28]
- பொன்னியின் செல்வன் புதினத்தின் எதிர்நாயகன் ரவிதாசனாக கிஷோர்.[29]
- தற்போது கும்பகோணம் எனப்படும் குடந்தை நகரத்து சோதிடரான குடந்தை சோதிடராக மோகன் ராமன்.[30]
- நந்தினியின் பணிப்பெண் வாசுகியாக வினோதினி வைத்தியநாதன்.[31]
- பாண்டிய இளவரசனாக மாஸ்டர் ராகவன்.[32]
- இராஷ்டிரகூட அரசராக பாபு ஆண்ட்டனி.[33]
- காலமுகராக மகரந்த் டெஷ்பாண்டே[34]