Science Box questions, Do you know, 9th std Term iii unit - 5. பயன்பாட்டு வேதியியல்
9 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
5. பயன்பாட்டு வேதியியல்
1. நானோ ரோபாட்டிக்ஸ் என்பது புதுவிதமான இயந்திரங்களையும், ரோபாட்டுகளையும் நானோ
பரிமாணத்தில் உருவாக்கும் நானோ தொழில்நுட்பத்திலுள்ள ஒரு பிரிவு ஆகும். இந்த கருவிகள் 0.1 - 10 மைக்ரோ மீட்டர் அளவில், நானோ அல்லது மூலக்கூறு அளவிலான பொருள்களைக் கொண்டு செய்யப்படுகின்றன.
★ மருத்துவம், விண்வெளித் துறை போன்ற துறைகளில் நானோ ரோபாட்டுகள் பயன்படுகின்றன. உயிரி மருத்துவத் துறையில், குறிப்பாக புற்றுநோயைக் குணப்படுத்தவும், சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கும், டி.என்.ஏ அமைப்பில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யவும், மனித உயிர்களைப் பாதுகாக்கப் பயன்படும் வேறு சில சிகிச்சைகளிலும் நானோ ரோபாடிக்ஸ் பயன்படுகிறது.
◆ நோயாளிகளின் உடலில் உள்ள புற்று நோய் வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகளைக் கண்டுபிடிப்பதற்கு உட்பொதிக்கப்பட்ட வேதியியல் உயிரி உணர்விகளுடன் நானோ ரோபாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கும் களிம்பு - நானோ வேதியியல்
* நம் தோலில் வெகுநேரம் சூரிய ஒளி படும்போது. அதனால் தோல் எரிச்சல்
மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. நானோ
டைட்டானியம் ஆக்சைடு கொண்ட சன்ஸ்கிரீன் லோஷன் அதிக பாதுகாப்புத் திறன் கொண்டது.
* நானோ சிங்க் ஆக்சைடு மற்றும் டைட்டானியம் ஆக்சைடு போன்ற சூரியக்கதிர் தடுப்புப் பொருள்கள் தோலின் உள்ளே ஊடுருவுவதில்லை. மாறாக தோலின்
மீது ஒரு மெல்லிய படலாமாக படிந்து புறஊதாக் கதிர்களைத் தடுக்கின்றன.
மேலும் அவை மற்ற சாதாரணக் களிம்புகளை விட நன்கு செயல்பட்டு
தோலின் இயற்கை நிறத்தையும் தக்கவைக்கின்றன.
3. வேதி மருத்துவம்: மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும்
கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச்சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதி மருத்துவம் என்கிறோம். இது பெரும்பாலும் புற்று நோய்ச் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
4. மயக்க மருந்து கண்டுபிடிப்பு
◆ வில்லியம் மோர்டன் - சிறிய விலங்குகள் கந்தக ஈதரை (இப்போது இவை டை எத்தில் ஈதர் அல்லது எளிய ஈதர் என்று அழைக்கப்படுகின்றன) நுகரும் பொழுது உணர்வை இழந்து துலங்கல் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தார்.
◆ கண்டுபிடித்த சில மாதங்களுக்குப் பிறகு 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16
அன்று, மோர்டன் ஒரு நோயாளியை மருத்துவமனையில் மக்கள் முன் மயக்கமூட்டிக்காட்டினார்.
5. 1932 ஆம் ஆண்டில் முதலாவது வணிக ரீதியான நுண்ணுயிர் எதிர்பொருள் உருவாக்கப்பட்டது.
2,000 ஆண்டுகளுக்கும் முன்னர் பழங்கால எகிப்தியர்களும் கிரேக்கர்களும்
தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பூஞ்சை மற்றும் தாவரச் சாறுகளைப்
பயன்படுத்தினர்.
உண்மையில் 1928 ஆம் ஆண்டு வரை பென்சிலியம் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் அடிபட்ட காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பூஞ்சைபடிந்த ரொட்டியைப் பயன்படுத்துவது பழங்கால எகிப்தியர்களின் நடைமுறையில் இருந்தது.
1941 ஆம் ஆண்டில் பெனிசிலின் ஒரு முக்கிய நுண்ணுயிர் எதிர்பொருளாக மிகவும் பிரபலமாக ஒன்றாக இருந்தது. ஏனென்றால் அது போர் வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியது. எனவே, இது 'அதிசய மருந்து' என்று பெயரிடப்பட்டது.
6. ஓய்வு நிலையிலுள்ள யுரனியாமானது சிதைவடைந்து மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு என்று கருதப்படுகிறது.
7. ஹென்றி பெக்கோரல் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்ததற்காக 1903 ஆம் ஆண்டிற்கான நோபால் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் பியரி கியூரி (பிரான்ஸ்) மற்றும் மேரி கியூரி ஆகிய இரு பிரான்ஸ் நாட்டு அறிஞர்களுக்கும் “கதிரியக்கம்” பற்றிய அவர்களின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
8. ரடியம் மற்றும் பொலோனியத்தைக் கண்டுபடித்ததற்காகவும், ரேடியத்தை பிரித்தெடுத்தற்காகவும், 1911 ஆம் ஆண்டு மேரி கியூரி நோபல் பரிசைப் பெற்றார். அவர்கள்தான் கதிரியக்கம் என்ற பதத்தை உருவாக்கினர்.
9. ஹென்ரிகோ ஃபெர்மி என்ற இத்தாலி நாட்டு அறிஞர் நியூட்ரான்களால் தூண்டப்பட்ட
உட்கரு வினைகளைக் கண்டறிந்ததற்காக 1938 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.
10. செயற்கை சாயம் தயாரிப்பு 1856 இல் தொடங்கியது. ஆங்கில வேதியியலாளர் WH. பெர்கின் என்பவர் குயினைன் என்ற பொருளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது சிறந்த சாயமூட்டும் தன்மை கொண்ட ஒரு நீல நிறப் பொருளைக் கண்டறிந்தார்.
பிற்காலத்தில் அது அனிலின் ஊதா, டைரியன் ஊதா அல்லது மாவெய்ன் என்று அழைக்கப்ட்டது.
11. பெர்கின் தனது கண்புபிடிப்பிற்கான காப்புரிமையைப் பெற்று அதன் உற்பத்தியைத் தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே செயற்கைச் சாயங்களே இயற்கைச் சாயங்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்தல் இந்த செயற்கைச் சாயங்கள் எளிய வேதியியல் முறையில் தொழிற்சாலைகளில்
தயாரிக்கப்படுகின்றன.
12. நீண்ட நெடுங்காலமாகவே பல இயற்கைச் சாயங்கள் அறியப்பட்டுள்ளன. இவை
அனைத்தும் தாவர கூலங்களில் இருந்து பெறப்பட்டவை.
■ ஹென்னா: இது ஒரு இயற்கைச் சாயம் ஆகும். இது லவ்சோனியா இனா்மிஸ் (மறுதோன்றி) என்ற தாவரத்தில் இருந்து பெறப்படும் செம்பழுப்பு நிறச் சாயம் ஆகும். இதன் அரைத்த விழுதுகள் கூந்தல் நிறமியாகவும், கைகளை
வண்ணமயமாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
■ மஞ்சள்: இது இந்தியாவின் பாரம்பரிய இயற்கை அழகு சாதனப் பொருள். இது கர்குமா லங்கா (மஞ்சள்) என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. கிருமி நாசினியாகவும் இது செயல்படுகிறது. பெரும்பாலும் இந்தியாவில் உணவு நிறமியாக பயன்படுத்தப்படுகிறது.
13. இன்றைய உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழிலில்
ஈடுபடுகின்றனர். இதுவே உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட வேலை வாய்ப்பு ஆகும்.
14. உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி (WHO), பூச்சிக்கொல்லிகள் என்பவை
பூச்சிகள், பூஞ்சை மற்றும் தேவையற்ற தாவரங்கள் போன்றவற்றை அழிக்கப்பயன்படும்
வேதிக்கலவை ஆகும்.
15. இயற்கை விவசாயம்: வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை, பயிர் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், அவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. எனவே, இந்நாட்களில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இந்த
முறையானது, இயற்கை வேளாண்மை என்று அழைக்கபடுகிறது. மண்புழு உரம் என்பது வீட்டுக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரமாகும்.
16. இயற்கையில் பல உணவுப் பதப்படுத்திகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உணவை பதப்படுத்தலாம்.
எண்ணெய்: உணவானது, காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்சிஜனேற்றம்
அடைந்து கெட்டுப்போகத் தொடங்குகிறது. ஆனால், எண்ணெயானது
ஆக்சிஜனேற்றத்தைக் குறைத்து, உணவிலிருந்து உருவாகும்
நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துகிறது.
சாதாரண உப்பு: சாதாரண உப்பானது, இறைச்சி மற்றும் காய்கறிகளை சிறிது
காலத்திற்கு கெடாமல் பாதுகாக்கின்றது. உணவை கெட்டூப்போகச் செய்யும்
நுண்ணுயிரிகள் நீரில் வளரும். ஆனால் உப்பானது, நீரை உறிஞ்சி அவற்றின்
வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், ஈஸ்ட், பாக்டீரியா ஆகியவற்றின்
சிதைவையும் தடுக்கிறது.
17. எந்த இரண்டு கைரேகைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
உங்கள் விரல்களில் உள்ள ரேகைகள் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றின்
உள்ளே இருக்கும் போதே உருவாகியவை.
கைரேகைகளைப் போலவே, கருவிழி அச்சு மற்றும் நாக்கு அச்சு போன்றவையும் தனித்துவமானவை: மற்றும் யாருடைய உருவத்தையும் ஒத்து இருக்காது.
18. அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்பவர் இங்கிலாந்திலுள்ள லண்டனைச் சேர்ந்தவிஞ்ஞானி மற்றும் மருத்துவர் ஆவார்.
1900 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாக்ட்டீரியாவை அழிக்க முயற்சிகள் எடுத்தார். பூஞ்சையைச் சுற்றி பாக்டீரியா வளரவில்லை அந்த காலகட்டத்தில் அதிகமான மக்கள் பாக்ட்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்கள்.
அலெக்ஸாண்டர் ஃபிளமிங் அவரது ஆய்வகத்தில் பாக்ட்டீரியாவைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும்பொழுது எதிர்பாராவிதமாக அவர் ஒருவகை பூஞ்சையைக் கண்டறிந்தார்.
அது பென்சிலியம் என அழைக்கப்பட்டது. அந்த என்பதனைக் கண்டறிந்து அதனைப் பற்றி மேலும் ஆராய்ந்தார். இறுதியாக, சிறிய அளவு பூஞ்சைச்சாற்றை அதிலிருந்து பிரித்தெடுத்தார்.
இதுவே தற்பொழுது உள்ள பென்சிலின் ஆகும். ஃபிளமிங் முதன் முதலில் இதனைக் கண்டறிந்தாலும் அதனை உயிர் காக்கும் மருந்தாக மாற்ற முயலவில்லை.