Science Box questions, Do you know, 9th std Term iii unit - 6. சூழ்நிலை அறிவியல்
9 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
6. சூழ்நிலை அறிவியல்
1. ஆகாயத் தாமரையானது, சிண்ட்ரெல்லா என்ற கதையில் வரும் அழகிபோல் பார்ப்பதற்கு
மிகவும் அழகாக இருப்பதால் தாவர உலகின் சிண்ட்ரெல்லா என அழைக்கப்படுகிறது.
2. கோடை காலங்களில், ஆகாயத் தாமரை உள்ள ஏரி நீரானது, ஆகாயத் தாமரை இல்லாத ஏரி நீரைவிட ஒன்பது மடங்கு அதிகமாக வற்றிப்போகிறது.
3. நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும்
மார்ச் 22 ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.
■ இயற்கை நீருக்கே-21 ஆம் நூற்றாண்டில் நாம் சந்திக்கக் கூடிய நீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கையின் அடிப்படையில் தீர்வுகளை ஆராய்தல் என்பதே
உலக நீர் தினம் - 2018 ன் முக்கியக் கருத்தாக இருக்கின்றது.
4. மண்புழுக்கள் உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றன. கரிமப் பொருள்களை செரிமானம் செய்தபின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் எனப்படும்
கழிவை வெளியேற்றுகின்றன.
5. விலங்குக் கழிவு மற்றும் தாவரக் கழிவு ஆகியவற்றின் மீது மண்புழுக்களைப் பரப்பி
துரிதப்படுத்தப்பட்ட சிதைவு முறையில் தயாரிக்கப்படும் கரிம உரம் மண்புழு உரம் எனப்படும்.
6. வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குளியலறைகள், வாறல் இரைப்பான்கள் மற்றும் துணி துவைப்பதால் வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன.
7.சாம்பல் நீரை பசனத்திற்குப் பயன்படுத்தும்போது, தாவரங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு,
நச்சுத்தன்மையற்ற மற்றும் சோடியம் அளவு குறைந்த சோப்பு நீரைப் பயன்படுத்த வேண்டும்.
8. சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் ஐ.யூ.சி.என் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.