Science Box questions, Do you know, 9th std unit - 8. சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு
9 ஆம் வகுப்பு - முதல் பருவம்
8. சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு
1. டாக்டர் ஃபன்க் என்பவரால் விட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
2. வைட்டமின் A-க்கு ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான A கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் இதுவாகும்.
3. வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுவதால் எலும்பின் பலத்தை
அதிகப்படுத்துகிறது.
4. இறைச்சியில் உள்ள இரும்புச்சத்து (ஹீம் உள்ள இரும்புச்சத்து) மற்றும் தாவர மூலப்பொருள்களில் (ஹீம் அல்லாத இரும்புச்சத்து) உள்ள இரும்புச்சத்தை உடல்
வெவ்வேறாக உறிஞ்சுகிறது. இறைச்சியினுடைய புரதத்தில் காணப்படும் இரும்புச்சத்து
எளிதாக உறிஞ்சப்படுகிறது. அதே சமயம் ஹீம் அல்லாத இரும்புச்சத்தை
உறிஞ்சுவதற்கு வைட்டமின் C தேவைப்படுகிறது.
5. நமது தோலில் வைட்டமின் D எப்படி உருவாக்கப்படுகிறது? - மனிதனின் தோலால் வைட்டமின் D - ஐ உருவாக்க முடியும். மனிதனின் தோலில் சூரியக்கதிர்கள்
விழும்போது (குறிப்பாக அதிகாலையில்) வைட்டமின் D உருவாக்கப்படுகிறது.
சூரியக்கதிர்கள் தோலின் மேல் விழும்போது டிஹைடிரோ கோலஸ்ட்ரால் எனும் பொருள்
வைட்டமின் D - ஆக மாறுகிறது. எனவே, வைட்டமின் D 'சூரிய ஒளி வைட்டமின்'
என்று அழைக்கப்படுகிறது.
6. அக்டோபர் 31-ஆம் தேதி உலக அயோடின் குறைபாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7. முன்கழுத்துக் கழலை (காய்டர்) - தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தின் கீழ்பகுதி வீங்கி காணப்படும். இந்த நோய் அயோடின் குறைப்பாட்டால் வருகிறது
8. ஈரமான திராட்சைகள் அறை வெப்பநிலையில் கெட்டுப்போகின்றன. ஆனால் உலர்ந்த திராட்சைகள் (ரெய்சின்கள்) அதே வெப்பநிலையில் கெட்டுப்போவதில்லை.
7. அதிக குளிர் முறை பாதுகாப்பு என்பது உணவுப்பாதுகாப்பு முறைகளில் ஒன்றாகும். இங்கு உணவுப்பொருட்கள் குளிர்ந்த அறையின் உள்ளே -23℃ முதல் -30℃ வெப்பநிலை
வரை வைத்து பாதுகாக்கப்படுகிறது. விதைகளானது 0℃ வெப்பநிலைக்கு கீழே சேமித்து
வைக்கப்படுகிறது,
10. லூயி பாஸ்டர் (1822-1895) அறிவியலின் ஒரு பிரிவான நுண்ணுயிரியிலைத் தோற்றுவித்தார். இவர் பிரான்ஸ் நாட்டைச் 6சர்ந்த வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல்
வல்லுநர். அவர் நொதித்தல் மற்றும் நோய்களுக்கு நுண்ணுயிரிகளே காரணம் எனக் கண்டறிந்தார். பாஸ்டர் பதனம் முறையினையும், வெறி நாய்க்கடி (பிஸ்) மற்றும்
ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளையும் உருவாக்கினார்.
11. 1970 - ஆம் ஆண்டு தேசிய பால் மேம்பாட்டு வாரியம் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆப்ரேஷன் பிளட் நடவடிக்கை வெண்மைப்புரட்சி' யை இந்தியாவில் தொடங்கியது.
ஆனந்த் பால் கூட்டுறவுச் சங்கத்தை (AMUL) நிறுவிய முனைவர். வாகீஸ் குரியன் இந்த வெண்மைப்புரட்சியின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.
12. மெத்திலீன் சாய ஒடுக்க சோதனை - பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கறந்த
மற்றும் பதனப்படுத்துதல் செய்யப்பட்ட பாலில் உள்ள நுண்ணுயிரிகளின் அளவை
மதிப்பீடு செய்வதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
13. பாலின் தரம் மென்மையானதா அல்லது மேன்மையற்றதா என்பதை அறிவதற்கு மெத்திலீன் நீல சாயக்கரைசல் பாலில் சேர்க்கப்பட்டு பின், பால் நிறம் மாறுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிறமாற்றம்
உடனே நடந்தால், பாலின் தரம் குறைவாகவும் அதில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை
அதிகமாகவும் இருக்கும். எனவே பால் பதப்படுத்தல் முறையானது மேற்கொண்டு
அதிகரிக்கப்படுகிறது.
14. அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உணவு
வீணாகதலைக் குறித்த விழிப்புணர்வு வலியுறுத்தப்படுகிறது.
15. உணவுப் பாதுகாத்தலை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காகவும்
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினத்தன்று “பண்ணை முதல்
உண்ணும் வரை பாதுகாத்திடுவீர்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.
16. கோடக்ஸ் அலிமென்டாரியஸ் (இலத்தீன் மொழியில் 'உணவு விதி) என்பது உணவுகள்,
உணவு உற்பத்தி பொருட்கள் செய்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு சர்வதேச
அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிர்ணயங்கள், விதிமுறைகள், வழிமுறைகள் மற்றும் இதர பரிந்துரைகள் அடங்கிய ஒரு தொகுப்பாகும்.
17. சர்வதேச அளவில் ஏற்படும் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பில் எழும்
விவாதங்களை தீர்த்து வைப்பதற்கு உலக வர்த்தக நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட
ஒரு அமைப்புதான் இந்த கோடக்ஸ் அலிமென்டாரியஸ்.
9 ஆம் வகுப்பு - முதல் பருவம்
9. கணினி - ஓர் அறிமுகம்
1. ENIAC என்பது சுமார் 18,000 வெற்றிடக்குழாய்களைப் பயன்படுத்தி செயல்படும் ஒரு
கணினி. இதன் அளவானது ஒரு வகுப்பறையின் அளவினை ஒத்ததாக இருக்கும்.
2. 1980 ல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஒரு ஜிகாபைட் (1GB) டிஸ்க் ட்ரைவ்
கிட்டத்தட்ட 250 கிலோ எடைகொண்டது. இதன் மதிப்பு சுமார் 25 இலட்சம் ஆகும்.