Science Box questions, Do you know, 9th STD - term -I 1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்
9 ஆம் வகுப்பு - முதல் பருவம்
1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்
1. அடிப்படை அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் என்றும்,
வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் என்றும்
அழைக்கப்படுகின்றன.
2. ஃபோர்ட்நைட் என்பது இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்கள்.
3. ஒரு கணம் காத்திருங்கள் என்று ஒருவரிடம் கூறுகிறோம். இது எவ்வளவு குறைந்த கால
அளவு தெரியுமா? - இது 1/40 மணி நேரம் அல்லது 15 நிமிடம் ஆகும்.
4. ஆட்டோமஸ்: நம்மால் கற்பனை செய்து பார்க்கக்கூடிய மிகக் குறைந்த கால அளவாகிய
கண் இமைக்கும் நேரமாகும். இதன் மதிப்பு என்ன தெரியுமா? - இது 1/625 வினாடி
அல்லது 160 மில்லி வினாடி ஆகும்.
5. கழுதைத் திறன்: குதிரைத் திறன் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீரகள். கழுதைத் திறன்
என்றால் என்ன? - இது குதிரைத் திறனில் 1/3 மடங்கு ஆகும். இதன் மதிப்பு
ஏறக்குறைய 250 வாட் ஆகும்.
6. ஒளியானது ஒரு விநாடிக்கு 3x10⁸ மீ அல்லது 3 லட்சம் கிமீ தூரத்தைக் கடக்கிறது.
ஒரு ஆண்டில் 365 × 24 × 60 × 60 =3.153 ×10⁷ வினாடிகள் உள்ளன.
7. ஒரு ஒளி ஆண்டு = 3.153 x10⁷ x 3 x 10⁸ = 9.46⨯10¹⁵ மீ
8. ஒரு வானியல் அலகு என்பது 14,95,97,871 கிமீ அல்லது ஏறக்குறைய 150 மில்லியன் கிமீ
அல்லது 1,500 லட்சம் கிமீ ஆகும்.
9. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்பா சென்டாரி சூரியனிலிருந்து 1.34
விண்ணியல் ஆரத்தொலைவில் உள்ளது. இரவு நேரங்களில் நமது வெறும் கண்ணிற்குத்
தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத்தொலைவிற்குள்
உள்ளன.
10. மனித உடம்பில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களின் மொத்த நீளம் 96,000 கிமீ ஆகும்.
11. பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டகச்சிவிங்கிக் குட்டியின் உயரம் 1.8 மீ (6 அடி)
12. பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தைவிட இரு மடங்காகும்.
13. தமிழ்நாட்டில் இன்றும் கூட SI அலகுகளைத் தவிர நீளத்திற்கான பிற அளவுகளையும்
பயன்படுத்துகின்றனர். அந்த அளவுகோல்களுக்கும், SI அலகுகளுக்கும் இடையேயான
தொடர்பினை அறிந்து கொள்வது நல்லது.
◆ 1அடி - 30.4 செமீ
◆ 1மீ - 32 அடி
◆ 1 அங்குலம்(இன்ச்) - 23.54 செமீ
◆ ஒரு மீட்டர் என்பது ஏறக்குறைய 40 அங்குலத்திற்குச் சமமானது. வீட்டிற்குத் தேவையான குழாய்கள், மரச்சட்டங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கு இன்றுகூட வன்பொருள் அங்காடிகளில் இந்த அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மரவேலை செய்பவர்களும் கூட இந்த அளவு கோல்களைப்
பயன்படுத்துகின்றனர்.
14. 1 TMC (thousand million cubic feet) என்பது நூறு கோடி கன அடி அளவாகும். 1TMC = 2.83 × 10¹⁰ லிட்டர் தோராயமாக 1 TMC = 3000 கோடி லிட்டர் ஆகும்.
15. பருமனின் SI அலகு மீ³ ) ) அல்லது கன மீட்டர், பொதுவாக பருமனை லிட்டர் (l) என்ற
அலகாலும் குறிக்கலாம்.
1l=1dm³
1ml நீரின் நிறை = 1g
1l நீரின் நிறை = 1 kg (மற்ற திரவங்களின் நிறை அவற்றின் அடர்த்தியைப் பொறுத்து மாறுபடுகின்றன)
16. இன்றும் கிராமங்களில் மக்கள் SI அலகு முறையைத் தவிர்த்து வேறு சில அலகுகளையும், காலத்தைக் கணக்கிடப் பயன்படுத்துகின்றனர்.
● ஒரு மணி - 2.5 நாழிகை
● ஒரு நாள் - 60 நாழிகை (பகல் ன்3ஏன் ரம் 30 நாழிகை, இரவு நேரம் 30 நாழிகை)
● பகலில் நாழிகை, காலை 6 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு
நிறைவடைகிறது. ஒரு பகலின் மொத்த நாழிகை - 12 x 35 - 30.
●இரவு நேரத்தில் மாலை 6 மணிக்கு நாழிகை ஆரம்பித்து அடுத்த நாள் காலை 6
மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இரவு நேரத்தில் மொத்த நாழிகை 30 ஆகும்.
17 . பியரி வெர்னியர் (1580-1637) -அளவியல் துறையில் துல்லிய அளவுகோலான வெர்னியர்
அளவுகோலை கண்டுபிடித்தவர்
18. ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் 12% ஆகும். ஒருநீலத்திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்குச் சமம். அதன் நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்.