Science Box questions, Do you know, 9th STD - term -I 2. இயக்கம்
9 ஆம் வகுப்பு - முதல் பருவம்
2. இயக்கம்
1. எதிர்முடுக்கந்தை வேக இறக்கம் அல்லது ஒடுக்கம் எனலாம்.
2. ஒரு குறிப்பிட்ட கணத்தில் உடனடித் திசைவேகத்தின் எண்மதிப்பும், உடனடி வேகத்தின் எண்மதிப்பு சமம்.
3. தானியங்கி வாகனத்தின் வேகமானி வாகனத்தின் அக்கண நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும். ஒரு பரிமாணத்தில் சீரான இயக்கத்திற்கு சராசரித் திசைவேகம் = உடனடித்
திசைவேகம். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும். இயங்கும் பொருளின் உடனடித் திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்பதை வேகம் என்றும் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், பொருளின் திசைவேகம் படிப்படியாகக் குறைந்து, பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறுகிறது. அப்போது அப்பொருளின் முடுக்கம் புவிஈர்ப்பு முடுக்கத்துக்குச சமமாக
இருக்கும்.
5. ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்தவிசை, நிலைமின்னியல் விசை மற்றும் இது போன்ற எந்த ஒரு விசையும் மையநோக்கு விசை போன்று செயல்படும்.
6. பாலாடையைப் பிரிக்கும் கருவி உயர் வேக சுழற்சித்திறறுயுடையது. அது மைய சுழற்சி தத்துவத்தின் படி செயல்படும் ஒரு கருவியாகும்.
7. குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப்பற்றி சுழலும்போது நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். இது மையவிலக்கு விசையினால்
ஏற்படுவதாகும்.