TNTET paper-I Social Science Box questions, Do you know, 5th STD - term -iii
ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம்
1. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட
முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆகும். புணித
ஜார்ஜ் கோட்டை சன்னையில் அமைந்துள்ளது.
இக்கோட்டையினுள் மாநிலத் தலைமைச் செயலகம்
செயல்படுகிறது.
2. திருமயம் கோட்டை அதன் அழகு மற்றும் கட்டடக்கலைக்காக புகழ் பெற்றது. இது
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.
3. திருமயம் கோட்டை மிகப்பெரி பாறைக் கல்வட்டுகளைக் கொண்டுள்ளது இது ஊமையன் கோட்டை என்று
அழைக்கப்படுகிறது.
4. டச்சுக்காரர்களால் வணிக
நோக்கங்களுக்காகக் கட்டப்பட்ட
அற்புதமான கோட்டை சதுரங்கப்பட்டினம்
கோட்டை ஆகும். இது காஞ்சிபுரத்தில்
அமைந்துள்ளது.
5. நாயக்கர் அரச மரபைச் சேர்ந்த இராணி மங்கம்மாளின்
கோடைக்கால இல்லமாகத்
தமுக்கம் அரண்மனைத் திகழ்ந்தது. இது மதுரையில் அமைந்துள்ளது.
6. ஊட்டியில் உள்ள பர்ன்கில்சு அரண்மனை மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத்
திகழ்ந்தது.
7. சரஸ்வதி மஹால் இந்தியாவின் பழைமையான
வரலாற்று நூலகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சரஸ்வதி மஹால் ஓர் அருங்காட்சியகத்தையும்
கொண்டுள்ளது. இந்த
நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், மராத்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில்
ஒரு மில்லியனுக்கும்
அதிகமான கையைழுத்துப்
பிரதிகள் உள்ளன.
8. ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில் பயிரிடும் விவசாயிகள், குறுவிவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
9. விவசாய விளைவாருள்களை
விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில்
நேரடியாக வாங்க இந்திய உணவுக் கழகம் போன்ற
நிறுவனங்களை அரசு அமைத்துள்ளது.
10. விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான
இடைத்தரகர்களை நீக்குவதற்காக, தமிழக அரசு
உழவர் சந்தையை அறிமுகப்படுத்தியது.
11. பசுமைப்புரட்சி என்பது, புதிய வகை விதைகள்,
பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய முறைகளைப் பயன்படுத்திப் பயிர் உற்பத்தியில்
மகசூல் அதிகரிக்க கொண்டுவந்த
ஒரு செயல்முறையாகும்.
12. தமிழ்நாட்டைச் சேர்ந்த Dr.M.S. சுவாமிநாதன்
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை
என்று அழைக்கப்படுகிறார்.
13. கால்நடை வளர்ப்பு என்பது
இறைச்சி, உரோமம், பால், முட்டை மற்றும் பிற பொருள்களுக்காக
விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.
14. தோட்டக்கலை என்பது பழங்கள், காய்கறிகள், பூக்கள், அலங்காரத் தாவரங்களை வளர்ப்பது பற்றிய கலை
அல்லது அறிவியல் ஆகும்.
15. காவிரி டெல்டாவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான வேளாண் மையம் தஞ்சாவூர் ஆகும். இது தமிழ்நாட்டின்
நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
16. தமிழ்நாட்டின் பருவப் பயிர்கள்.
நவரை, சொர்ணவாரி, கார்,
குருவை, சம்பா, தாளடி
17. தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
18. கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் பெறுவது அல்ல, ஏழுத்தறிவு வறுவது மட்டுமே கல்வியின் நோக்கமும் அல்ல. "
'உள்ளாற்ந்த திறன்களை வெளிக்கொணர்வதே கல்வியின் உன்னத நோக்கம். "
--மகாத்மா காந்தி.
19. 'அமரிக்காவின் சகோதர சகோதரிகளே என்று தொடங்கிய தனது
சொற்பொழிவால் சுவாமி விவேகானந்தர்
பரவலாக அனைவராலும்
அறியப்படுகின்றார்.
'கல்வி என்பது மனிதனுள்
ஏற்சகனவே இருக்கும் முழுமையின்
வெளிப்பாடு. "
-சுவாமி விவேகானந்தர்
20. குருகுலம் என்பது பண்டைய இந்தியாவில், பின்பற்றிக் கொண்டிருந்த கல்வி முறையாகும். குரு (ஆசிரிTயர்) மற்றும் விஷ்யா மாணவர்) ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.
21. சட்டமன்றப் பிரிவு மூன்று
பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகும். கல்வி, பொதுப் பட்டியல் பிரிவின் கீழ் வருகிறது.
22. முதல் தேசிய கல்வி கொள்கை 1968 இல் செயல்படுத்தப்பட்டது, இரண்டாவதாக 1986 இல்
செயல்படுத்தப்பட்டது.
23. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) மற்றும் ஆசிரியர் கல்வி (TE) ஆகிய முந்தைய (Erstwhile) மூன்று திட்டங்களை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (SS) ஏற்படுத்தப்பட்டது.
24. பெருந்தலைவர் கு.காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டினைப்
போற்றும் வகையில் அவறின் பிறந்த நாள் (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.