Search This Blog

TNTET paper-I Social Science Box questions, Do you know, 4th STD - term -I

நான்காம் வகுப்பு முதல் பருவம்

1. கல்லணை கி.மு.(பொ.ஆ.மு) 2-ஆம்‌ நூற்றாண்டில்‌ கரிகாற்சோழனால்‌
கட்டப்பட்டது. உலகில்‌ இன்றளவும்‌ அழியாமல்‌ பயன்பாட்டில்‌ இருக்கக்கூடிய
மிகப்‌ பழைமையான அணை இதுவேயாகும்‌. இவ்வணை கற்கள்‌ மற்றும்‌
சுண்ணாம்புக்‌ கலவை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

2. பண்டைய மதுரை மாநகரில்‌ நாளங்காடி என்ற பகல்நேரக்‌ கடைகளும்‌, அல்லங்காடி என்ற இரவு நேரக்‌ கடைகளும்‌ இருந்தன.

3. மகேந்திரவர்மனின் மகனான நரசிம்மவர்மன் பல்லவ மன்னர்களுள் சிறப்பு பெற்றவர் ஆவார் . அவர் சிறந்த மல்யுத்த வீரராய் திகழ்ந்ததால் ' மாமல்லன் ' என்ற பட்டம் பெற்றார் . இவரது வீரத்தை போற்றும் விதமாக வரலாற்றுச் சிறப்பு பெற்ற துறைமுக நகரமான மாமல்லபுரம் ( மகாபலிபுரம் ) கட்டப்பட்டது .

4. ஔவையார் ' வரப்புயர ' என்று வாழ்த்துவதன் மூலம் சங்க காலத்தில் வேளாண்மைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம் .

5. தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய மலைகள் செஞ்சி மலை , கொல்லி மலை , சேர்வராயன் மலை , கல்வராயன் மலை , நீலகிரி மலை , ஜவ்வாது மலை , பச்சை மலை .

6. மேற்குத்‌ தொடர்ச்சி மலையில்‌ 
நன்கு வளரும்‌ குறிஞ்சி ஒரு
அதிசய தாவரமாகும்‌ .
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும்‌ இந்த அதிசய
குறிஞ்சி மலரானது,
ஜூலை - செப்டம்பர்‌
மாதங்களில்‌ பூக்கும்‌. இம்மலர்‌
மருத்துவ குணம்‌
கொண்டதாகும்‌.
 
7.  உற்பத்திப் பொருட்கள் -  பயன்படும் மரங்கள்

தாள் ( காகிதம் ) - மூங்கில் , தைல மரம் , குடைவேல்

தீக்குச்சிகள் - அயிலை , முள் இலவு

நறுமணப் பொருட்கள் - சந்தன மரம்

தைலம் , சோப்பு -  இலுப்பை , வேம்பு , புங்க மரம்

8. தமிழ்நாட்டில்‌
கடலூர்‌ மாவட்டம்‌,
சிதம்பரத்திற்கு அருகில்‌
பிச்சாவரம்‌ என்ற ஊர்‌ உள்ளது.
இங்குள்ள சதுப்பு நிலக்காடுகள்‌
(அலையாத்தி காடுகள்‌)
இந்தியாவிலேயே இரண்டாவது
மிகப்‌ பெரியதாகும்‌. இது
சிறு தாவரங்களையும்‌ நீர்‌
விலங்குகளையும்‌ ஈரமான
வெப்பநிலையையும்‌
கொண்டுள்ளது.

9. கல்லணை ஒரு
பழமையான நீர்த்தேக்கம்‌
ஆகும்‌. இது தமிழ்நாட்டின்‌
தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌
காவிரி ஆற்றின்‌ குறுக்கே
கட்டப்பட்ருள்ளது. இதன்‌
நீளம்‌ 1079 அடி, அகலம்‌ 66 அடி,
உயரம்‌ 18 அடி ஆகும்‌. 
பழங்காலத்திலேயே நீரைத் திருப்பிக் கால்வாய்  பாசன வசதி செய்வதில்  இந்த நீர்த்தேக்கம்‌
உலகளவில்‌ நான்காம்‌
இடம்‌ பெற்றுள்ளது .

10. அறிந்த இடம்‌, அறியாத உண்மை

தமிழகத்தின்‌ சென்னை
நகரில்‌ அமைந்துள்ள
இயற்கையான கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்‌. உலகின்‌ மிக நீளமான இரண்டாவது கல
கடற்கரை இதுவாகும்‌. இது 
இந்தியாவின்‌ கிழக்கு கடற்கரையில்‌
வங்காள விரிகுடாவை ஓட்டி,
வடக்கே புனித ஜார்ஜ்‌ கோட்டை முதல்‌ தெற்கே பட்டினப்பாக்கம்‌ வரை அமைந்துள்ளது. இதன்‌ நீளம்‌ 13 கி.மீ
ஆகும்‌. (அமெரிக்க நாட்டின்‌ 
புளோரிடாவில்‌ உள்ள மியாமி
கடற்கரை உலகிலேயே
மிக நீளமான கடற்கரை
ஆகும்‌,)

11. உள்ளாட்சி அமைப்பின் தந்தை - ரிப்பன் பிரபு.

12. 1957 ஆம் ஆண்டு ' பல்வந்த் ராய் மேத்தா குழு ' அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது .

13.  1978 ஆம் ஆண்டு ' அசோக் மேத்தா குழு ' அறிக்கையின்படி இந்தியாவில் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது .

14. மாநகராட்சி 
1. சென்னை
 2. மதுரை
 3. கோயம்புத்தூர்
 4. திருச்சிராப்பள்ளி
 5. சேலம் 
6. திருநெல்வேலி
 7. வேலூர்
 8. தூத்துக்குடி 
9. திருப்பூர் 
10. ஈரோடு 
11. தஞ்சாவூர் 
12. திண்டுக்கல்
 13. ஓசூர் 
14. நாகர்கோவில்
 15. ஆவடி
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url