TNTET paper-I Social Science Box questions, Do you know, 5th STD - term -ii
ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்
1. அகழ்வாராய்ச்சியில் கண்டெருக்கப்பரும் பொருள்கள்
தொல்கைவினைப் பொருள்கள் என அழைக்கப்பருகின்றன.
தொல்பொருள் ஆய்வாளர்கள் அக்காலத்தில் மக்கள் எவ்விதம்
வாழ்ந்தனர் என்பதனை அவற்களின் வீருகள், உடைகள்,
எலும்புகள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு
கூறுகின்றனர்.
2. மனித இனத்தின் பழங்கால எச்சங்கள் எங்கெல்லாம்
காணப்பருகின்றனவோ அவ்விடங்களைத் தொல்பொருள்
ஆய்வுக் களங்கள் என்று அழைக்கிறோம்.
3. சாக்கடலில் எவ்விதமான கடல்வாழ் உயிரினங்களும்
வாழ்வதில்லை. ஏனெனில், அந்நீர் அதிக உப்புத்
தன்மையைக் கொண்டிருக்கும்.
4. வியக்கத்தக்க உண்மை என்னவெனில், நமது பூமியில்
உள்ள பல்வேறு வகையான உயிரினங்கள் அதிக அளவில் பெருங்கடல்களில்தாம் வாழ்கின்றன.
5. இந்தியாவில் பாயும் சில நீளமான நதிகள் கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி.
6. இராஜஸ்தானில் உள்ள சாம்பர் உப்பு ஏரி இந்தியாவில்
உள்ள மிகப்பெரிய உள்நாட்டு உப்பு ஏரிகளுள் ஒன்று.
7. மனிதனால் கட்டப்பட்டதில் சீணப்பெருஞ்சுவரை மட்டுமே
விண்வெளியில் இருந்துகூடக் காண முடியும்.
8. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்,
தற்போதுள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து இருந்தது. பெரிய நிலப்பரப்பாக இருந்த அந்நிலப்பரப்பு
பாஞ்சியா என்று அழைக்கப்பட்டது. ஆனால், மெல்ல மல்ல
அந்நிலப்பரப்பு உடைந்து, ஏழு கண்டங்களாகப் பிறிந்தது.
9. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அறியப்படாமல்
இருந்ததாலும்,மக்கள்வசிக்கஏற்றகழ்நிலைஇல்லாததாலும்
ஆப்பிரிக்கா கண்டம் இருண்ட கண்டம் என அழைக்கப்பட
காரணமாயிற்று.
10. உலகின் அனைத்து வகையான காலநிலைகளையும் கொண்ட ஒரே கண்டம் வடஅமெரிக்கா ஆகும்.
11. அமேசான் மழைக்காடுகள் என்பவை, தென்அமெரிக்காவின்
அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பெரிய
மழைக்காடுகள் ஆகும்.
12. பாரதி மற்றும் மைத்ரி அண்டார்டிகாவில் செயல்படும்
இந்திய ஆராய்ச்சி நிலையங்கள் ஆகும்.
13. இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையமான தக்சின் கங்கோத்ரி விநியோக தளமாக பயன்படுத்தப்படுகிறது.
14. ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து, ஏரிகளின் நிலம்
என்று அழைக்கப்பருகிறது, ஏனெனில், இங்கு
பனிக்கட்டிகள் உருகி அதிக ஏரிகள் உருவாகியுள்ளன.
15. இரஷ்ய நாடு கிழக்கு ஐரோப்பா மற்றும்
வட ஆசியாவில் பரந்து விரிந்துள்ளது.
16. உக்ரைன் ஐரோப்பாவின் கோதுமைக் களஞ்சியம் என்று
அழைக்கப்படுகிறது. ஏனெனில், இங்கு அதிக அளவு கோதுமை
உற்பத்தி செய்யப்படுகிறது.