TNTET paper-I Social Science Box questions, Do you know, 4th STD - term -III
நான்காம் வகுப்பு மூன்றாம் பருவம்
1. இந்தியா , இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் அலுவலக மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் உள்ளது .
2. தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் மூன்று முறை நடத்தப்பட்டன .
3. பத்துமலை என்பது, மலேசியாவின் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஒரு சுண்ணாம்புக் குன்றாகும். அது
தொடர்ச்சியான குகைகள் மற்றும் குகைக் கோயில்களைக் கொண்டு உள்ளது. பத்துமலையின் அடிவாரத்தில்
உள்ள முருகன் சிலை, உலகின்
இரண்டாவது மிக உயரமான இந்து தெய்வ சிலை ஆகும்.
4. சிங்கப்பூரில் 1828 ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் ஒன்று கட்டப்பட்டது . அது தமிழர்களால் திராவிடக் கட்டட முறையில் கட்டப்பட்டது . மேலும் அக்கோயில் சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது .
5. மியான்மரில் உள்ள பாகாங் என்ற நகரத்தில் , கி.பி. ( பொ.ஆ . ) 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது . அக்கல்வெட்டில் , சேர நாட்டைச் சேர்ந்த குலசேகர நம்பி என்ற வணிகர் மியான்மரில் உள்ள திருமால் கோயிலுக்கு நன்கொடை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
6. ஆனந்தா கோயில் மியான்மரிலுள்ள புகழ்பெற்ற கோயிலாகும் . இந்தக் கோயிலின் கோபுரம் திராவிட கட்டட முறையில் கட்டப்பட்டுள்ளது . வடஇந்தியக் கட்டடக்கலை முறையில் கோபுரத்தின் மேற்பகுதி கட்டப்பட்டுள்ளது .
7. 1810 ஆம் ஆண்டில் மொரீஷியஸ் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது . மேலும் அவர்கள் அத்தீவுக்கு அதிகமான இந்தியர்களை அழைத்து வந்தனர் . இப்போது , தமிழர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு உள்ளனர் .
8. அஞ்சல் அருங்காட்சியகம் அழகிய அது 19 ஆம் நூற்றாண்டின் ஆகும் . கற்கட்டடம் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது . அந்தக் கட்டடம் போர்ட் லூயிஸில் தமிழர்களால் கட்டப்பட்டது .
9. கற்பனைக்கெட்டாத அங்கோர் வாட் மிகவும் புகழ்பெற்ற மலைக்கோயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது . மன்னன் இரண்டாம் சூரியவர்மன் 12 ஆம் நூற்றாண்டில் , அதன் 30 ஆண்டுக் கால கட்டுமானத்தைத் தொடங்கினார் .
10. இந்திய நாணயங்களில் மட்டுமல்லாமல் , மற்ற மூன்று நாடுகளின் நாணயங்களிலும் தமிழ் இடம் பெற்றுள்ளது .
அவை : 1. இலங்கை 2. மொரீஷியஸ் 3.
11. சிங்கப்பூர் கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதம் அக்டோபர் 5 , 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்தது . இது தமிழ் - கனடியர்கள் , கனடிய சங்கத்திற்குச் செய்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக அமைந்தது .
12. மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் கிளைவ் மற்றும் கடைசி ஆளுநர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை ஆவர்
13. 2019ஆம் ஆண்டில் தமிழக அரசு கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களைப் புதிதாக
உருவாக்கியுள்ளது.
14. மதராஸ் , செங்கல்பட் , வட ஆற்காடு , தென் ஆற்காடு , சேலம் , திரிசினோபோலி , தஞ்சாவூர் , இராமநாதபுரம் , தின்னேவேலி , மதுரா , கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தற்போதைய தமிழ்நாட்டில் உள்ளன .
15. மலபார் மாவட்டம் தற்போதைய கேரள மாநிலத்திற்கு உட்பட்டதாகும் .
16. சித்தூர் , நெல்லூர் , கடப்பா , அனந்தபூரின் ஒரு பகுதி , குண்டூர் , கர்னூல் , கிஸ்ட்னா , கிழக்கு கோதிவரி , மேற்கு கோதிவரி மற்றும் விசாகப்பட்டணம் ஆகியவை தற்போதைய ஆந்திராவில் உள்ள பகுதிகளாகும் .
17. கஞ்சம் மாவட்டம் தற்போதைய ஒடிசாவில் உள்ளது . பெல்லாரி மாவட்டம் , தென் கனரா மற்றும் அனந்தபூரின் ஒரு பகுதி ஆகியவை தற்போதைய கர்நாடகாவில் இணைக்கப்பட்டுள்ளன .
18. இந்தியக் குடியுறிமையைப் பெற ஒரு வெளிநாட்டவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு வெளி நாட்டவர் இந்திய குடியுரிமையைப் பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும்.
19. இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும்.
இவற்றின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டதாகும்.
20. குழந்தைகளுக்கு அவர்கள் தொடர்பாக அனைத்துச் செயல்பாடுகளிலும் கலந்துரையாடவும் அவற்றை செயல்படுத்தவும் உரிமை உண்டு.