Search This Blog

ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினம்

நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் 2015 ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' கடந்தாஹ் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக கடந்த ஆண்டு 2015, ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தரமான கைத்தறிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் ;இந்திய கைத்தறி முத்திரையை' அறிமுகம் செய்து, 'பிரயாஸ்' எனும் புத்தகத்தையும் வெளியிட்டார்.


மேலும், இத்தினத்தில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அனுபவம் மிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url