Search This Blog

TNTET paper-I Social Science Box questions, Do you know, 4th STD - term -II

 

நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம்

1. பல்வேறு இலக்கியநயம் வாய்ந்த செவ்வியல் ( classical ) பாடல்களைக் கொண்டுள்ள சங்க இலக்கியங்களே , சங்க காலம் பற்றி அறிவதற்கான முக்கிய ஆதாரமாகும் .

2. தமிழ்நாட்டில் மாவட்டங்கள் 32 இருந்தன . சமீபத்தில் தமிழக அரசு நிர்வாக கள்ளக்குறிச்சி , வசதிக்காக செங்கல்பட்டு , தென்காசி என மேலும் மூன்று மாவட்டங்களை பிரித்து அறிவித்துள்ளது . தற்போது ( 2019 ) 35 மாவட்டங்கள் உள்ளன .

3. ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகா , கேரளா மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் , மதராஸ் என்று அழைக்கப்பட்டது . 1953 இல் தெலுங்குமொழி பேசும் பகுதி ஆந்திரப் பிரதேசமாக உருவானது . அதேபோல் , 1956 இல் மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்படும் பகுதிகள் முறையே கேரளா மற்றும் மைசூர் என பிரிக்கப்பட்டன .

4. இந்தியாவின் முதல் கடற்பாலம் இராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் பாலம் ஆகும் . இது 1914 - ல் திறக்கப்பட்டது . 

 5.  தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலுள்ள மிகவும் புகழ்பெற்ற மலைக்கோட்டை செங்குத்தான பாறை ( Droog ) ஆகும் . 

6. 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் மிக அதிக அளவு வெப்பமாக 48.6 ° C திருத்தணியில் பதிவு செய்யப்பட்டது . ஆதாரம்- இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ( IMD )

7.  இரயில் இந்தியாவின் போக்குவரத்து உலகிலேயே மிகப்பெரிய நான்காவது போக்குவரத்து அமைப்பாகும் . மேற்கு வங்காளத்திலுள்ள டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில் ஓர் உலக பாரம்பரியம் மிக்க தளமாகும் . இது இந்தியாவிலேயே நீராவி மூலம் இயக்கப்படும் ஒரே இரயில் போக்குவரத்து ஆகும் .

8. இந்தியாவிலேயே மிக உயரமான ஹெலிபேட் ( Helipad ) சியாச்சின் ( Siachen ) பனிப்பாறையில் உள்ளது . இது கடல்மட்டத்தில் இருந்து 21,000 அடி உயரத்தில் உள்ளது .

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url