Search This Blog

TNTET paper-I Social Science Box questions, Do you know, 5th STD - term -I


ஐந்தாம் வகுப்பு 
சமூக அறிவியல்
 முதல் பருவம்

1. உள்‌-பாறை கோள்கள்‌ புதன்‌, வெள்ளி, பூமி, செவ்வாய்‌ திடக்கோள்கள்‌ என அழைக்கப்பருகின்றன.

2. வெளிக்கோள்கள்‌
வாயுக்களால்‌ ஆனது. அவை வியாழன்‌, சனி, யுரேனஸ்‌
மற்றும்‌ ஏெப்டியூன்‌. 

3. உறைந்திருக்கும்‌ கோள்கள்‌ யுரேனஸ்‌ மற்றும்‌ நெப்டியூன்‌ ஆகும்‌.

4. வெள்ளியும்‌, பூமியும்‌ "இரட்டைக்கோள்கள்‌' எனஅழைக்கப்பருகின்றன.

5. செவ்வாய்‌ "செந்நிறக்‌ கோள்‌" என அழைக்கப்படுகிறது. மேலும்‌ பூமி நீர்க்கோளம்‌ என அழைக்கப்படுகிறது. 

6. வளையங்களைக்‌
கொண்டகோள்‌ சனி ஆகும்‌.

7.  A4 NoSE
 ( A1 ) ஆசியா ( Asia ) 
 ( A2 ) ஆப்பிரிக்கா ( Africa )
  ( A3 ) அண்டார்டிக்கா ( Antartica )
 ( A4 ) ஆஸ்திரேலியா ( Australia )
 ( No ) வட அமெரிக்கா ( North America )
 ( S ) தென் அமெரிக்கா ( South America ) 
 ( E ) ஐரோப்பா ( Europe )

8. கண்டங்களின்‌ மேற்பரப்பு ஆனது பலவகையான நிலத்தோற்றங்கள்‌ கொண்டுள்ளன. அவை: சமவெளிகள்‌, பீடபூமிகள்‌, மலைகள்‌, கடற்கரைச் சமவெளிகள்‌, பள்ளத்தாக்குகள்‌,
பாலைவனங்கள்‌ மற்றும்‌ தீவுகள்‌ போன்றவைகளாகும்‌.

9. உலகிலேயே மிக உயரமான சிகரம்‌ எவரெஸ்ட்‌ (8848மீ),
இது இமய மலையில்‌ அமைந்துள்ளது.

10. பெருங்கடல்களின்‌ சராசரி ஆழம்‌ 3800 மீ ஆகும்‌. 

11. பெருங்கடல்களில்‌ மிக
ஆழமான இடம்‌ மரியானா அகழி ஆகும்‌. இது பசிபிக்‌ பெருங்கடலில்‌
அமைந்துள்ளது.

12. பழங்கால மனிதன்‌ குவார்ட்சைட்‌ எனப்படும்‌ கரருமுரடான ஒரு வகை கல்லைக்கொண்டு, கருவிகள்‌ மற்றும்‌ ஆயுதங்களை
தயாரித்தான்‌.

13.  சிக்கிமுக்கி கற்கள்‌ எனப்படும்‌ ஒரு வகை கற்களைக்‌ கொண்டு
நெருப்பை உருவாக்கினான்‌.

14. ஆவணங்கள்‌ எழுதப்பட்ட காலம்‌ வரலாற்றுக்‌ காலம்‌ என்று
அழைக்கப்படுகிறது. மக்களின்‌ வாழ்வியல்‌ முறைகள்‌, நிகழ்வுகள்‌, உணவுப்‌ பழக்க வழக்கங்கள்‌, பண்பாரு, கலை, கட்டடக்கலை, இலக்கியம்‌ முதலியவைகளை அறிந்து கொள்ள இந்த ஆவணங்கள்‌
நமக்கு உதவுகின்றன.

15. அருங்காட்சியகம்‌ என்பது அறிய மற்றும்‌ நம்‌
முன்னோர்கள்‌ பயன்படுத்திய தொல்கைவினைப்‌
பொருள்கள்‌ பாதுகாக்கப்படும்‌ இடம்‌. இவை மக்களின்‌
வாழ்க்கையைப்‌ பற்றிய தகவல்களைத்‌ தருகிறது.
எனவே, கடந்த காலத்தின்‌ எஞ்சியப் பொருள்கள்களைப்‌
பாதுகாப்பது முக்கியமாகும்‌.

16. ஒரு அரசனின்‌ ஆட்சிக்காலம்‌,
மக்கள்‌ சமுதாய நிலை பற்றி
பாறைகளிலும்‌, சுவர்களிலும்‌
பொறிக்கப்பட்டவை, கல்வெட்டுகள்‌
என்று அழைக்கப்படுகின்றன.
பொதுவாக இவை கோவில்‌
சுவர்களில்‌ காணப்படுகின்றன.

17.உலகம்‌ அறநெறி உள்ளதால்‌ உயிர்த்துள்ளது. சுயநலம்‌ என்பது ஒழுக்கநெறி அல்ல, சுயநலமின்மை என்பதே ஒழுக்கநெறி. -சுவாமி விவேகானந்தர்‌.

18.  காயமடைந்த புறாவின்‌ உயிரைக்‌ காக்க பசித்த பருந்திற்கு, தன்‌
தொடை சதையை சிபி சக்கரவர்த்தி வழங்கினார்‌.

19. கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்க, மனுநீதிச்‌ சோழன்‌ தன்‌ மகனை தேர்‌ சக்கரங்களை ஏற்றிக்‌ கொன்றார்‌.

20. வள்ளல்‌ பாறி தனது தங்கத்‌ தேரை முல்லைக்‌ கொடிக்கு தானமாக வழங்கினார்‌.

21.  வள்ளல்‌ பேகன்‌ குளிரில்‌ நருங்கிக்‌ கொண்டிருந்த மயிலுக்கு போர்வையை அளித்தார்‌.

22. காலநிலை என்ற சொல்‌ கிளைமா என்ற கிரேக்க சொல்லில்‌ இருந்து
பெறப்பட்டது.

23. உலக வானிலையியல்‌ நாள்‌ - மார்ச்‌ -23

24. உலக ஓசோன்‌ தினம்‌ - சப்டம்பர்‌-16

25. புவியின்‌ மேற்பரப்பில்‌ மேற்கிலிருந்து, கிழக்காக வரையப்பட்ட கற்பனைக்‌ கோடுகள்‌ அட்சரேகை எனப்படும்‌.

26. வடக்கிலிருந்து, தெற்காக வரையப்பட்ட கற்பனைக்‌ கோருகள்‌ தீர்க்கரேகை எனப்படும்‌

27. அட்சரேகை மற்றும்‌ தீர்க்கரேகை ஒரு அமைவிடத்தை மிகத்‌
துல்லியமாக கண்டறிய உதவுகின்றன.

28. கடல்‌ மட்டத்தில்‌ சராசறி
காற்றின்‌ அழுத்தம்‌ 1013 ஈ௦
(Milli bar) ஆகும்‌.

29. காற்றின்‌ அழுத்தத்தை அளக்கப்‌ பயன்படும்‌ கருவி பாரமானி
(Barometre) ஆகும்‌.

30. காற்றின்‌ வேகத்தை அளவிட உதவும்‌ கருவி காற்றுமானி (Anemometre)
ஆகும்‌.

31. காற்றின்‌ திசையை அளவிட உதவும்‌ கருவி காற்று திசைக்காட்டி (Wind Vane) ஆகும்‌.

32.  காற்றாற்றல்‌ என்பது புதுப்பிக்கவல்ல ஆற்றலின்‌ ஒரு வடிவமாகும்‌.

33. காற்றுக்‌ கலன்கள்‌ காற்றின்‌ மூலம்‌ கிடைக்கும்‌ இயக்க ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது. 

34. மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.

35. லூ காற்று
  லூ என்பது இந்தியாவின்‌
வடமேற்கு பகுதியில்‌ வீசும்‌ ஒரு
வலிமையான, புழுதி படிந்த,
வெப்பமான, வறண்ட கோடைகாற்று ஆகும்‌. இக்காற்று வட இந்தியாவில்‌
குறிப்பாக மே, ஜுன்‌ மாதங்களில்‌ வலுவாக வீசும்‌.


36. கீற்றுமேகம்‌
   கீற்றுமேகம்‌ வானத்தில்‌ ஒரு வேள்ளி சாம்பல்‌ நிற மீனைப்போல காட்சியளிக்கிறது. இவ்வகையான மேகங்கள்‌ மழைப்பொழிவைத்‌ தராது.

37. படைமேகம்‌
    படைமேகம்‌ சாம்பல்‌ நிற விரிப்பு போன்ற தோற்றத்தை உடையது. இது சிறு தூறல்‌
மழையைக்‌ கொருக்கிறது.

 38. திரள்மேகம்‌
       திரள்மேகம்‌ எவண்பஞ்சு போல்‌ காட்சியளிக்கிறது.
இவ்வகையான மேகங்கள்‌
மழையபொழிவு, மின்னல்‌ மற்றும்‌ இடி ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்‌

39. கார்மேகம்‌

கார்மேகம்‌ அடர்‌ சாம்பல்‌ நிறத்தில்‌ இருக்கும்‌. இவ்வகையான மேகங்கள்‌
பலத்த மழையைத்‌ தருகிறது. இது செங்குத்து மேகங்கள்‌ அல்லது மழை மேகங்கள்‌ என்று அழைக்கப்பருகிறது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url