TNTET paper-I Science Box questions Do you know 4th STD term - III
நான்காம் வகுப்பு மூன்றாம் பருவம்
1. உணவுமற்றும் பானங்கள் உள்ள கண்ணாடி கொள்கலன்கள் 100% மறுசுழற்சி செய்யக்கூடியது. மேலும் அவைகளை பலமுறை நல்ல தரத்துடன் மறுசுழற்சி செய்யலாம்.
2. லியோ பேக்லேண்டு என்பவரால் 1907 ஆம் ஆண்டு முதன் முதலில்
முழுமையான செயற்கை நெகிழி கண்றுபிடிக்கப்பட்டது.
3. யானை, அணில், எலி மற்றும் எவளவால் போன்ற சில விலங்குகள் தூங்கும்போது கனவு காண்கின்றன.
4. பூனை, நாய் மற்றும் குரங்குகள்
நீண்ட கனவு நேரத்தைக் கொண்டுள்ளன.
5. சமூக நெசவாளர் என்ற பறவைகள் (Social Weavers) தனியாக கூருகளை கட்ருவதில்லை. அவ்வினத்தின் ஆண் பறவைகள் ஒன்றாக இணைந்து, 400 பறவைகள் தங்க கூடிய ஒரு பொதுவான கூட்டினை கட்டுகின்றன.
6. பச்சை ஹெரான் (Green Heron) என்றபறவையால் நீந்த முடியாது என்றாலும், அது தண்ணீறிலிருக்கும் மீனை எப்படி பிடிக்கிறது?
அது வண்ணமயமான இலைகள் மற்றும் பழங்களை.தண்ணீரில் போரும்போது, என்னவென்று பார்க்க
மீன்கள் வளியே வரும் போது, தன் அலகால் அவற்றை பிடித்து உண்கிறது.
7. கடல் நீர் நாய்கள் தூங்கும்போது அவை கைகளைப் பிடித்துக்கொள்கின்றன. அதனால் அவை ஒன்றை விட்டு ஒன்று விலகிப் போவதில்லை.
8. முள்ளம் பன்றிகளின் உடலில் முட்கள் இருப்பதால் அது எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.
9. முதலைகள் உணர்திறன் கொண்ட தோலைக் கொண்டிருப்பதால், நீறில் ஏற்பரும் சிறிய அதிர்வுகளைக் கூட உணர முடியும்.
10. பூச்சிகளின் கூட்டுக் கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை. அவை ஒமடீடியா (ommatidia) என அழைக்கப்படுகின்றன.
11. உங்கள் பூனையின் உணவில் சர்க்கரை சேர்ப்பது பயனில்லை, ஏனெனில் பூனையால் இனிப்பை சுவைக்க முடியாது.
12. பெரும்பாலான பாம்புகளுக்கு குறைவாகவே பார்க்கும் திறன் உண்டு. பாம்புகள் நாக்கைக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை உணர்கின்றன.
13. பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை பகலில் இரை தேடும் விலங்குகள் என்று அழைப்பர்.
௭.கா. கோழி, குதிரை மற்றும் ஒட்டகம். சிங்கங்கள் பகலிலும் இரவிலும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.
14. கோடை காலங்களில் களிமண் பானையிலிருந்து எவ்வாறு குளிர்ந்த நீர் கிடைக்கிறது?
களிமண் பானையில் ஆயிரக்கணக்கான சிறியதுளைகள் உள்ளன, இத்துளைகளின்
மூலம் நீரானது நீராவியாக வெளியேறுவதால் குளிர்ச்சியாக உள்ளது.
15. நாதஸ்வரமும், புல்லாங்குழலும்
காற்றைக் கொண்டு இசைக்கப்படும்
இசைக்கருவிகளாகும்.
16. 1772 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து வேதியியலாளர் டேனியல் ரூதர்ஃபோர்டு "தீங்கு விளைவிக்கும் காற்று ஒன்றைக் கண்டறிந்தார். தற்போது இது 'நைட்ரஜன்' என்று அழைக்கப்பருகின்றது.
17. அதிக உயரத்தில் மலைகளில் ஏறுபவற்களும் ஆழ்கடலில் நீந்துபவர்களும் ஆக்ஸிஜன் உருளைகளை பயன்பருத்துகிறார்கள்..
18. காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ளதை ஸ்காட்லாந்து வேதியியலாளர் ஜோசப் பிளாக் என்பவர் கண்ருபிடித்தார்.
19. ஒர் வளர்ந்த மரமானது ஒரு நபரால் வெளியேற்றப்படும் மூன்றில் ஒரு பங்கு (1/3) கார்பன் டைஆக்சைடை எருத்துக்கொள்கிறது. மேலும், இது ஒரு நபருக்குத் தேவையான
அளவு ஆக்ஸிஜனை அளிக்கிறது. எனவே, ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜனை பெறுவதற்கு மூன்று மரங்கள் தேவை.
20. தும்பல் மற்றும் இருமல் போன்ற செயல்களின் போது வாய் மற்றும் மூக்கை மூருவதனால் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகள் காற்றின் வழியே பிறருக்கு பரவாமல் தடுக்கலாம்.
21. சூரிய சக்தி, அணுசக்தி, நீர்மின்சக்தி, அலை ஆற்றல், உயிரி எரிபொருள்கள்,
இயற்கை எரிவாயு, புவிவெப்ப சக்தி, காற்று ஆற்றல், உயிர் எரிபருள், கடல் ஆற்றல் மற்றும், ஹைட்ரஜன் வாயு போன்றவை ஆற்றலின் மாற்று ஆதாரங்கள் ஆகும்