Search This Blog

பால் கொடுக்கும் கரப்பான் பூச்சிகள் – கதை அல்ல உண்மை

பால் கொடுக்கும் கரப்பான் பூச்சிகள் – கதை அல்ல உண்மை

கரப்பான் பூச்சிகள் பால் கொடுக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை... கேட்பதற்கு உவ்வே என்கிறீர்களா?... எது எப்படியோ ஆனால் இது உண்மை.




கரப்பான் பூச்சி பார்த்தாலே பலருக்கு அலர்ஜிதான். ஆனால் அதிலிருந்து பால் எடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார்கள்.

 பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் பொதுவாக அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களின் குஞ்சுகளுக்கு ஒருவித பாலையே உணவாக அளிக்கிறது. அந்தப் பாலில் தான் புரோட்டின் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

மேலும், அந்த பால், நமது எருமை மாட்டின் பாலில் உள்ள புரதத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும், அதிக கலோரி நிறைந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


கரப்பான்பூச்சியின் பால்:

பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூச்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகெங்கிலும் உள்ள மக்களின் புரோட்டீன் தேவைக்காக நுகரப்படுகிறது. இது பல சகாப்தங்களாக வழக்கத்திலுள்ளது.

1900--க்கும் மேற்பட்ட பூச்சிகள் உலகம் முழுவதும் மக்களால் உண்ணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு 2013 ஆம் ஆண்டில் அறிவித்தது. நம்புவதற்கு சற்று கடினம் இல்லையா? ஆனால் மக்கள் பூச்சிகளை உட்கொள்வதன் முக்கிய காரணம் அதிலுள்ள அதிகளவிலான ஊட்டச்சத்து சுகாதார நலன்களேயாகும்.


புரதம் நிறைந்தது:

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, ஒருமுறை அவரது குழந்தைகள் சிற்றுண்டிக்கு டோரிடோஸ் போன்ற மிருதுவான பூச்சிகளை விரும்பி எடுத்துக்கொள்வதாக பகிர்ந்துள்ளார்.சில பூச்சிகள் அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் 80 சதவிகிதம் புரதங்களைக் கொண்டுள்ளன. இது மற்ற விலங்கு ப்ரோட்டீன்களை விட மிக அதிகம்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் பூச்சிகளில் நிறைந்துள்ளன. மேலும் இதிலுள்ள புரதம் எளிதில் செரிக்கிறது என்பது சிறப்பு.

பயன்கள்?:

காக்ரோச் மில்க் பவுடரானது புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி 12 இன் மிகச் சிறந்த அளவில் கொண்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பூச்சிகள் உருவாகுவதற்கு குறைவான உணவு, குறைவான நிலம், குறைவான ஆற்றல் மற்றும் குறைவான நீர் மட்டுமே தேவை என்பதால் பூச்சிகள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் இவை சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுக்களையும் ஏற்படுத்துவதில்லை மற்றும் எந்தவித பூச்சிக்கொல்லி மருந்துகளும் கலப்பதில்லை என்னும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன.

பவுடர் தேவையான அளவு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற நல்ல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. 3-அவுன்ஸ் உலர்ந்த கம்பளிப்பூச்சி 50 கிராம் புரதங்களைக் கொண்டிருக்கிறது, இது ஒரு கோழியின் மார்பகத்தை அல்லது ஒரு வான்கோழியைவிட அதிகமாகும். இவை மோனோஅன்சாச்சுரெட் கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டுள்ளன.

கரப்பான் பூச்சியின் பாலை எவ்வாறு எடுப்பது?:

பெண் பசுபிக் பீட்டில் காக்ரோச் அடர்த்தியான புரோட்டீன்- திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்த பூச்சிகள் முட்டைகளை இடுவதில்லை பதிலாக இளம் குட்டிகளை ஈனுகின்றன. கருமுட்டைகள் உள்ளே வளர ஆரம்பித்தவுடன், பெண் கரப்பான் பூச்சி, தனது அடையிலிருந்து ஒரு மஞ்சள் நிற திரவப் பாலைக் கொடுக்கிறது. இந்தப் பால் மிகவும் உயர்ந்த சத்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலும், கரப்பான் பூச்சியின் பாலானது பூமியில் மிகவும் சத்தான மற்றும் உயர் கலோரிகள் கொண்ட ஒரு உணவாகும். பசுவின் பாலைவிட நான்கு மடங்கு புரதத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளது.கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை ஆற்றலை வழங்குவதற்கு உதவுகிறது.



அதேபோல், அந்த கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பாலில், மனிதர்களுக்கு தேவையான அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதால், எதிர்காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url