ஆகஸ்ட் 29 இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day)
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.