ஆகஸ்ட் 29 - சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் ( International Day against Nuclear Tests in tamil):
ஆகஸ்ட் 29 - சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் ( International Day against Nuclear Tests in tamil):
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாஇ நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணு ஆயுதத்தை முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசியது. அதன் பிறகு இதுவரை சுமார் 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைஇ சுகாதாரம்இ சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இன்றைக்குள்ள அணு ஆயுதங்களை கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க வலியுறுத்தியும் ஐ.நா. சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.