TNTET paper-I Science Box questions Do you know 5th STD term -II
ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்
1. அடைக்கப்பட்ட (Packed) உணவுப் பொருள்களை வாங்கும்போது அவற்றில் கீழ்க்கண்டவற்றை சரிபாற்க்க வேண்டும்.
1. தயாரிக்கப்பட்ட தேதி
2. காலாவதியாகும் நாள்
3. அவற்றிலுள்ள மூலப்பாருள்கள்
4. அவற்றிலுள்ள ஆற்றல்
2. கதிர்வீச்சு பதனம் என்பது தற்போதைய நவீன உணவு பதப்படுத்தும் முறை
ஆகும். இம்முறையில், உணவுப்
பொருள்களில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிப்பதற்காக
அவை காமா மற்றும் புறஊதாக்
கதிற்வீச்சுக்கு உட்பருத்தப்படுகின்றன.
இதனால் உணவின் சுவை அல்லது ஊட்டச்சத்து மதிப்பு பாதிக்கப் படுவதில்லை. எ.கா: வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு.
3.18.5 முதல் 25 வரை உடல் நிறை குறியீட்டு எண் உடையவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை
வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது
4. வேறு எந்த நோயையும்விட இதய நோயினால் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலான மக்கள்
இறக்கின்றனர்.
5. குவாஷியோர்கர் நோயானது, வளரும் நாடுகளிலுள்ள மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. ஏனெனில், அவர்களது உணவு விலைமலிவான கார்போஹைட்ரேட்டுக்களை
அதிக அளவிலும், புரதத்தை குறைந்த அளவிலும் கொண்டுள்ளது. அவர்களுள் பெரும்பாலானோர்
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதால், அவர்களால் புரதச்சத்து மிக்க விலையுயர்ந்த உணவுகளை அதிகளவில் உண்ண முடிவதில்லை.
7. பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் பசலைக் கீரை போன்றவை விலைமலிவான, அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட கீரைகளாகும். இவற்றில் தாதுஉப்புகள், வைட்டமின்கள் மற்றும்
நார்ச்சத்துகள் அதிகளவு உள்ளன. இவை அனைத்துக் காலங்களிலும் கிடைக்கின்றன.
8. நிலத்தடி நீரில் மாசுக்கள்
காணப்படுவதில்லை. ஏனெனில், அது மண்ணின் பல்வேறு அடுக்குகள் வழியே ஊருருவிச் செல்லும்போது இயற்கையாகவே வடிகட்டப்பருகிறது.
9. உறைந்த நிலையில் வானத்திலிருந்து விழும் நீரானது பனி அல்லது ஆலங்கட்டியாக மாறுகிறது ஆலங்கடி பனிப்பந்தாகும்.
10. விவசாயமே நம் வாழ்வின் ஆதாரமாக உள்ளது. இது உலகிலுள்ள நன்னீர் மூலங்களின் பெரும் பகுதியைப் பயன்படுத்துகிறது. உலகில் கிடைக்கின்ற நன்னீரில் 70%
நீர் விவசாயத்திற்குப்
பயன்படுத்தப்படுகிறது.
11. மார்ச் 22ஆம் நாள் உலக நீர்
தினமாக கடைபிடிக்கப்பருகிறது
12. உலகிலுள்ள 25% மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.
13. வயிற்றுப்போக்கினால் உலகங்கும் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் சுமார் முப்பது இலட்சம் பேர் இந்நோயினால் இறக்கிறார்கள்.
14. ஏடிஸ் கொசுக்கள் சிக்குன் குணியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களையும் பரப்புகின்றன.
முறையான சிகிச்சை எடுக்காவிட்டால். இவற்றால் மரணமும் ஏற்படலாம்.
15. குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலந்தஸ் குந்தியானஸ்) மலரானது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோழா காடுகளில் காணப்பரும் புதர்ச் செடியாகும்.
12 ஆண்ருகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த ஊதாநிற மலற்களான குறிஞ்சி மலர்களின் பெயரில் இருந்துதான் நீலமலை என்று பொருள் கொள்ளும் நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.
16. பழந்தின்ணி எவளவால், ஓசனிச் சிட்டு மற்றும் எறும்பு முதலியனவும் மகரந்தச் சேர்க்கைக்கான
காரணிகளாக உள்ளன. பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ஆர்ணிதோஃபிலி என்று பெயர்.
17. விதைகள் மற்றும் கனிகள் பரவுவதற்கு மனிதனும் காரணமாக இருக்கிறான். சின்கோனா, இரப்பர் மற்றும் யூகலிப்டஸ் போன்ற பயனுள்ள தாவரங்கள் மனிதர்கள் மூலமே அவற்றின் இயற்கை வாழிடங்களிலிருந்து மிகவும் நீண்ட தொலைவிலுள்ள பல்வேறு இடங்களில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.