Science Box questions 8th STD term -III | unit 5 and 6
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
5. அமிலங்கள் மற்றும் காரங்கள்
1. ஸ்வீடன் நாட்டு வேதியியலாளர் அர்ஹீனியஸ் அமிலங்கள் பற்றிய ஒரு கொள்கையை முன்வைத்தார். அவரின் ௯ற்றுபபடி அமிலம் என்பது நீர்க்கரைசலில் H+ அயனிகள் அல்லது H2O+ அயனிகளைத் தரும் வேதிப்பொருளாகும்.
2. நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நமக்கு பசியுணர்வு ஏற்படுவதற்கு ஒரு
காரணமாகும். ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரக்கும் அளவு அதிகரித்தால் வயிற்றுப்புண் தோன்றும்.
3. காப்பர் அல்லது பித்தளைப் பாத்திரங்கள் வெள்ளீயம் என்ற உலோகத்தால் (ஈயம்) பூசப்படுகின்றன. ஏன் பூசுகிறார்கள் எனில் உணவுப்பொருட்களிலுள்ள கரிம அமிலங்கள் பாத்திரங்களிலுள்ள காப்பருடன் வினைபுரிந்து உணவை நஞ்சாக்கிவிடும். வெள்ளியம்,
பாத்திரங்களை அமிலங்களின் செயல்பாட்டிலிருந்து தனித்துப் பிரித்து உணவை நஞ்சாக்குவதிலிருந்து தடுக்கின்றது.
4 ஊறுகாயில் வினிகர் (அசிட்டிக் அமிலம்) அல்லது பென்சாயிக் அமிலம் இருப்பதால் இவைகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் உள்ளது.
5. சோடியம் கார்பனேட் வணிக ரீதியாக சலவைசோடா எனவும், சோடியம் பைகார்பனேட் பேக்கிங் சோடா எனவும், சோடியம் ஹைட்ராக்ஸைடு காஸ்டிக் சோடா எனவும், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு காஸ்டிக் பொட்டாஷ் எனவும் அழைக்கப்படுகின்றன.
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
6. அன்றாட வாழ்வில் வேதியியல்
1. புரப்பேன் LPG சிலிண்டர்களில் பயன்படுகிறது இது நிறமற்ற வாயுவாக இருப்பதால் இதன் கசிவினை கண்டறிய முடியாது. எனவே மெர்கேப்டன் என்ற துர்நாற்றம் தரும்
வேதிப்பொருள் LPG யுடன் கலக்கப்படுகிறது. இதனால் வாயுக்கசிவினை கண்டறிய முடியும்.
2. மிதமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், ஓவியங்களையும் தொன்மையான
கலைப்பொருட்களையும சுற்றச்சூழலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காப்பதற்கு தேவைப்படுகிறது. இயற்கை வாயுவை கொண்டு அருங்காட்சியங்களில் உள்ள பழங்கால நினைவு சின்னங்களையும் பாதுகாக்கலாம்.
3. CNG யின் சராசரி இயைபு.
பகுதி பொருட்கள் -சதவீதம்
மீத்தேன் - 88.3
ஈத்தேன் - 5
புரோப்பேன் - 3.7
பியூட்டேன் - 1.8
பென்டேன் - 05
4. உற்பத்தி வாயு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இது அமெரிக்காவில் மரவாயு என்றும், இங்கிலாந்தில் உறிஞ்சு வாயு என்று
அழைக்கப்படுகிறது.
5. நிலக்கரி கருப்பு வைரம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது விலைமதிப்பற்றது. 1000கிகி நிலக்கரியானது 700 கிகி கல்கரி, பல லிட்டர்கள் அம்மோனியா, 50 லிட்டர்கள்
கரித்தார் மற்றும் 400மீ^3 கரிவாயுவைத் தரவல்லது.
6. உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறு 1839 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது. இரண்டாவது எண்ணெய்க் கிணறு 1867
ஆம் ஆண்டு இந்தியாவில் அசாமில் மாக்கும் என்ற இடத்தில் தோண்டப்பட்டது.
7. பழங்கால நாகரிகங்கள் கச்சா ஒட்டும் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளன. பல்வேறு பரப்புகளில் நீரபுகாவண்ணம் தடுப்பதற்கு ஒட்டும் பொருளாக பயன்படுத்தப்பட்டது.
8. எதிர்காலத்தில் ஹைட்ரஜன் வாயு ஒரு மிகச்சிறந்த மாற்று எரிபொருளாகும். இந்த
எரிபொருள் தூய்மையானது ஏனெனில் இது எரியும் பொழுது நீமட்டுமே வெளிவரும், இது மட்டுமல்லாமல் அதிகமான ஆற்றலையும் காற்றை மாசுபடுத்தாத தன்மையையும்
பெற்றுள்ளது.