Science Box questions 8th STD term -III | unit 7. பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
7. பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை
1 வாழை மற்றும் மாங்கனி உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய நாடாகும். கோதுமை, நெல்
உற்பத்தியில் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.
2. பயிர் நடவு செய்தல் அல்லது நாற்று நடுதல். நாற்றங்காலில் இருந்து இளம்நாற்றுக்களை
எடுத்து வளர் நிலப்பகுதியில் அறுவடை வரை மீத வளர்ச்சிக்கு நடுதல் நாற்று நடுதல் எனப்படும்.
3. நாற்று நடுதலுக்கு ஆரம்ப இளம் வளர் தாவரங்கள், நாற்றுகள் அல்லது தாவர உடல பெருக்கத்தின் மூலம் உருவான நகல்கள் இதற்கு பயன்படுகிறது.
4. உலக மக்கள் தொகை 2050 ஆண்டில் 9 பில்லியனாக இருக்கலாம் என்று எதிர்
பார்க்கப்படுகிறது. எனவ நமது தலைமுறைக்கும் மற்றும் எதிர்கால தலைமுறைக்கும் கிடைக்க கூடிய அளவில் நீரின் பயன்பாடு திறன் மிக்கதாக வேண்டும். நன்னி வளத்தில்
70 விழுக்காடு விவசாயத்திற்கு பயன்படுகிறது. எனவே, சொட்டு நீ பாசனம் இதற்கு
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5. உலகம் முழுவதும் 30000க்கு மேற்பட்ட களைச் சிற்றினங்கள் உள்ளது. அவற்றில் 18000 சிற்றினங்கள் பயிர்களுக்கு தீவிர இழப்பினை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரே விதமான பயிரிடும் முறை களை தாவர இனங்களுக்கு பொருத்துக் கொள்ளும்
தன்மையை உண்டாக்குகிறது.
6. இந்திய உணவுக் கழகம் FCI 1965 ஜனவரி 14ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. நாடு
முழுவதும் பொது விநியோக திட்டத்தின் (PDS) கீழ் உணவு தானியங்களை வழங்கும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு
உணவு தானியங்கள் போதுமான அளவு வைப்பு மற்றும் போதுமான அளவு
செயல்பாட்டினை நிர்ணயிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுது இதனுடைய தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.
7. கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்ய ஜெதீஸ் சந்தர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம்
ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்த தோட்டம் பெரிய அளவிலான அரிதான தாவரங்களைக் கொண்டுள்ளன மற்றும் 12000 மாதிரித்
தாவரங்களில் மொத்த சேகரிப்பினை கொண்டுள்ளது தோட்டமானது 109 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுடையது.
8. இலை வழி ஊட்டமளித்தலில் ஊட்டப் பொருட்களுக்கு ஏற்ற துலங்கல் தாவரங்களில் விரைவாக வெளிப்படுகிறது. இலையின் ஊட்டப்பொருள் உள்ளெடுப்பின் திறன் மண்ணில் அளிக்கப்பட்ட ஊட்டப் பொருள்களை ஒப்பிடும்பொழுது பல மடங்குகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. வேரினால் ஊட்டப்பொருள் உறிஞ்சுதல் சூழ்நிலைக் காரணிகளால் தடுக்கப்படும்பொழுது இலை வழி ஊட்டமளித்தல் பரிந்துரைக்கப்படுகிறது.