Search This Blog

Science Box questions 8th STD term -III | unit 4. நீர்

8 ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
4. நீர்

1. ஹென்றி கேவென்டிஷ்‌ ஒரு ஆங்கில தத்துவயிலாளர்‌, அறிவியலாளர்‌, வேதியியலாளர்‌ மற்றும்‌ இயற்பியலாளர்‌ ஆவார்‌. இவர்‌ ஹைட்ரஜன்‌ உற்பத்தி செய்ததன்‌ மூலம்‌
அனைவராலும்‌ அறியப்பட்டார்‌ ஹைட்ரஜனை எளிதில்‌ எரியும்‌ காற்று என இவர்‌ அழைத்தார்‌. உலோகங்களை செறிவுமிக்க அமிலங்களுடன்‌ கலந்து ஹைட்ரஜனை உருவாக்கினார்‌. மேலும்‌ உலோகங்களை செறிவுமிக்க காரங்களுடன்‌ சேர்த்து கார்பன்டை
ஆச்சைடையும்‌ இவர்‌ உருவாக்கினார்‌.

2. தூய நீர்‌ கீழ்காணும்‌ இயற்பியல்‌ பண்புகளைப்‌ பெற்றுள்ளது.

■ தூய நீரின்‌ கொதிநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில்‌ 10072 ஆகும்‌.

■ தூய நீரின்‌ உறைநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில்‌ 100℃ ஆகும்‌.

■ தூய நீரின்‌ அடர்தியானது 0℃ கி / செ.மீ3 ஆகும்‌.

3. பனிக்கட்டி மேல்‌ நகரும்‌ ஸ்கேட்டர்கள்‌ அதன்‌ மீது அழுத்தம்‌ கொடுக்கிறார்கள்‌. இந்த அழுத்தம்‌ பனிக்கட்டி உறைநிலையைக்‌ குறைக்கிறது. இதன்‌ விளைவாக ஸ்கேட்டின்‌ அடியில்‌ பனிக்கட்டி உருகி ஸ்கேட்டர்களால்‌ எளிதில்‌ பனிக்கட்டியின்‌ மீது சருக்க
இயல்கிறது. ஸ்கேட்டர்கள்‌ முன்னோக்கி நகரும்போது அழுத்தம்‌ குறைந்து நீர் மீண்டும்‌ பனிகட்டியாக மாறுகிறது.

4. மீன்‌ மற்றும்‌ இறைச்சியை பனிகட்டியினுள்‌ வைப்பதன்‌ மூலம்‌ அதனை புத்துணர்வுடன்‌ பராமரிக்க முடியும்‌. பனிகட்டியின்‌ அதிக உள்ளுறை வெப்பத்தால்‌ பனிக்கட்டி
உருகும்போது மீன்களிலிருந்து அதிக அளவு வெப்பத்தை உறிஞ்சிக்‌ கொண்டு
உணவினை குறைந்த வெப்பநிலையில்‌ நீண்ட காலத்திற்கு கெடாமல்‌ பாதுகாக்க உதவுகிறது.

5. தாமிரம்‌ எந்த வெப்பநிலையிலும்‌ நீருடன்‌ வினைபுரியாது. ஆகையால்‌ குழாய்கள்‌ மற்றும்‌ கொதிகலன்கள்‌ உருவாக்குவதில்‌ தாமிரம்‌ பயன்படுத்தப்படுகிறது.

6. குழாய்‌ நீர, நதி நீர மற்றும்‌ கிணற்று நீர கரைந்த திடப்பொருட்களை பெற்றுள்ளது.ஆனால்‌ மழைநீர்‌ மற்றும்‌ வடிகட்டிய நீரில்‌ கரைந்த திடப்பொருள்கள்‌ இருப்பதில்லை.
எனவே அவை நீராவிக்குப்பிறகு பொதுமைய வளையங்களை உருவாக்குவதில்லை.

7. சாக்கடலில்‌ (Dead sea) நீரின்‌ உப்புத்தன்மை மிக அதிகம்‌. இது உப்பு நிறைந்த ஒரு ஏரியாகும்‌. ஏனெனில்‌ இது ஒற்றை நீராதாரத்தை மட்டுமே பெற்றுள்ளது மற்றும்‌
பெருங்கடலுடன்‌ இணைக்கப்படவில்லை. இது நிலத்தால்‌ சூழப்பட்டுள்ளதால்‌ நீர்‌ ஆவியாவதுடன்‌ உப்புத்தன்மையின்‌ அளவும்‌ சீராக அதிகரித்து வருகிறது. தற்போது உப்புத்தன்மை மிக அதிகமாக இருப்பதால்‌ கடல்‌ வாழ்‌ உயிரினங்கள்‌ அதில்‌ வாழ முடியாது. ஆதனால்‌ தான்‌ இது சாக்கடல்‌ என்று அழைக்கப்படுகிறது.

8. ஒவ்வொரு வருடமும்‌ 4.6 மில்லியன்‌ குழந்தைகள்‌ வயிற்றுப்போக்கினால்‌ இறந்து விடுகிறார்கள்‌. நமது சுகாதாரம்‌ மற்றும்‌ உடல்நலத்திற்காக நாம்‌ தூயநீரையே பயன்படுத்த வேண்டும்‌.

9. எதிர்‌ சவ்வூடு பரவல்‌ என்பது நீரிலிருந்து மாசு மற்றும்‌ கிருமி நீக்கம்‌ செய்யப்படும்‌ முறையாகும்‌. மேலும்‌ இவை நீரின்‌ சுவையையும்‌ கூட்டுகிறது. RO என்பதன்‌ விரிவாக்கம்‌ Reverse osmosis ஆகும்‌. மேலும்‌ சில RO க்களில்‌ கிருமிகளை அழிக்கக்‌ கூடிய
புறஊதா(UV) அலகுகள்‌ நீரை சுத்தப்படுத்துதலுக்காக இடம்‌ பெற்றுள்ளன.

10. வாலை வடிநிர்‌ மற்றும்‌ காய்ச்சிய நீர சுவையாக இருப்பதில்லை. காற்று, கார்பன்‌ டை ஆக்சைடு மற்றும்‌ தாதுக்கள்‌ கரைந்துள்ளதால்‌ குடிநீர்‌ இனிமையான சுவை பெற்றுள்ளது.

11. கிடைக்கக்கூடிய மேற்பரப்பு நீரில்‌ 90% விவசாயம்‌ மற்றும்‌ நீர்ப்பாசனத்தற்காக
பயன்படுத்தப்படுகிறது.

12. இந்தியாவில்‌ நீர்‌ மாசுபாட்டின்‌ மிகப்பெரிய ஆதாரம்‌ சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்‌. ஒரு நபர்‌
துணி துவைத்தல்‌, சமைத்தல்‌, குளித்தல்‌ போன்றவற்றுக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர்‌
நீரைப்‌ பயன்படுத்துகிறார்‌.

13. காய்கறிகளை வளர்க்க விவசாயத்தில்‌ நெகிழி தாள்கள்‌ பயன்படுத்தப்படுகின்றன.
அறுவடைகால முடிவில்‌, இந்த நெகிழி தாள்கள்‌ மீண்டும்‌ மண்ணிலேயே விழுகின்றன. நெகிழித்‌ தாள்கள்‌ சிறிய துண்டுகளாக உடைந்து பூமியிலுள்ள புழுக்களால்‌ உண்ணப்படுகின்றன. இது அவற்றின்‌ ஆரோக்கியத்திற்கும்‌ மண்ணுக்கும்‌ தீங்கு விளைவிக்கும்‌.

14. ஒவ்வொரு நன்னீர்‌ மூலத்திலும்‌ நுண்ணிய நெகிழி காணப்படுகிறது. ஆர்க்டிக்‌ மற்றும்‌ அண்டார்டிக்காவின்‌ உறைபனி நீரிலிருந்து ஆழ்கடல்‌ தளத்தின்‌ அடிப்பகுதியான 5,000 
மீட்டர்‌ ஆழம்‌ வரை அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம்‌ முழுவதும்‌ பாட்டிலில்‌
அடைக்கப்பட்ட நீர்‌ மற்றும்‌ குழாய்‌ நீரில்‌ நுண்ணிய நெகிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url