Science Box questions 8th STD term -III | unit 3. அண்டமும் விண்வெளி அறிவியலும்
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
3. அண்டமும் விண்வெளி அறிவியலும்
1. சீனாவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடக்கத்தில், மரக் குழாய்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள்
உருவாக்கப்பட்டன. இவற்றை தீ அம்புகள் என அவர்கள் அழைத்தனர்.
2. கி.பி. 1239ல் மங்கோலிய ராணுவ வீரர்களை வெற்றி கொள்வதற்காக சீனர்கள் இந்த தீ அம்புகளை பயன்படுத்தினர். ராக்கெட்டை ஒரு போர் கருவியாகப் பயன்படுத்தினர்.
3. துருவத் துணைக்கோள் செலுத்து வாகனம் (PSLV) மற்றும் புவிநிலைத் துணைக்கோள்
செலுத்து வானகம் (GSLV) ஆகியவை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ராக்கெட்கள்
ஆகும்.
4. இந்தியா சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து நடத்திய ஒரு விண்வெளி ஆய்வுத் திட்டத்தில்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா என்ற விமானி விண்வெளிக்குச் செல்ல
தேர்வு செய்யப் பட்டார். இதன் மூலம் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் நாள்
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
5. கலாம்சாட் என்பது 64 கிராம் மட்டுமே எடைகொண்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக்
கோள் ஆகும். இது தமிழகத்தின் கரூர் நகருக்கு அருகில் உள்ள பள்ளபட்டி என்ற
சிற்றூரில் ரிபாத் ஷாருக் என்னும் 18 வயது பள்ளி மாணவனின் தலைமையில்
உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது 2017 ஆம் ஆண்டு ஜுன்
22 ஆம் நாள் நாசா விண்வெளி ஆய்வு மையம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
6. மயில்சாமி அண்ணாதுரை
* மயில்சாமி அண்ணாதுரை கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில்
உள்ள கோதவாடி என்னும் சிற்றூரில் 2.7.1958 அன்று பிறந்தார்.
* இவர் தன் இளங்கலை பொறியியல் பட்டத்தை கோயமுத்தூர் அரசு
தொழில்நுட்பக் கல்ஜூாயில் பெற்றார். 1982ஆம் ஆண்டு பிஎஸ்ஜி தொழில்நுட்பக்
கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன், அதே ஆண்டில் இந்திய விண்வெளி
ஆய்வு மையத்தில் ஆய்வாளராகப் பணியேற்றார்.
* பிறகு, கோயம்புத்தூர், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர்
பட்டதையும் பெற்றார். இவர் செயற்கைக்கோள் துறையில் முன்னணி தொழில்நுட்ப
வல்லுநர் ஆவார்.
* இவர் சந்திரயான் - 1, சந்திரயான் -2 மற்றும் மங்கள்யான் திட்டங்களில் திட்ட
இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். குறைந்த செலவில் சந்திராயனை
வடிவமைத்தத்தில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
7. சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்துள்ள கோள் செவ்வாய் ஆகும்.
* இது சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கோளாகும். இதன் சிவந்த
நிறத்தின் காரணமாக இது சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுகிறது இக்கோளின்
மேற்பரப்பில் உள்ள இரும்பு ஆக்சைடு மற்றும் அதன் வளிமண்டலத்தில் உள்ள
தூசுகள் அதற்கு சிவப்பு நிறத்தைத் தருகின்றன.
* இது தன் அச்சில் 24 மணி 37 நிமிடங்களில் தன்னைத்தானே சுற்றி வருகிறது.
மேலும், 687 நாட்களுக்கு ஒரு முறை சூரியனையும் சுற்றி வருகிறது. இதன்
சுற்றுக்காலம் மற்றும் காலநிலை ஆகியவை பூமியைக் ஒத்திருப்பதால்,
வானியலாளர்கள் செவ்வாயக் கோள் பற்றிய ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி
வருகின்றனர்.
* எனவே, அவர்கள் செவ்வாயின் மேற்பரப்பு, காலநிலை மற்றும் புவியியல் குறித்த
ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, பல்வேறு மனிதர் அற்ற விண்கலங்களை
அனுப்பி வருகின்றனர்.
8. நம் இந்திய நாடு, செவ்வாய்க்கோளை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற
பெருமையையும், உலகிலேயே, இச்சாதனையை தன் முதல் முயற்சியில் நிகழ்த்திய நாடு
என்ற பெருமையையும் உடையது.
9. சோவியத் விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை
செவ்வாய்க்கோளை அடைந்த பிற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆகும்.
10. டாக்டர் கைலாசம் வடிவு சிவன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தற்போதைய
தலைவர் ஆவார்.
* இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை என்னும் சிற்றூரில்
பிறந்தார். இவர் வானூர்திப் பொறியியல் இளங்கலை பட்டத்தை, 1980 ஆம்
ஆண்டு சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார்.
* 1982 ஆம் ஆண்டு தன் முதுகலை பொறியியல் பட்டத்தை, பெங்களுருவில்
உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து பெற்ற பின் இந்திய விண்வெளி
ஆய்வு நிறுவனத்தில் பணியில் 6சர்ந்தார். மேலும் இவர் தன் முனைவர் பட்டத்தை,
மும்பை இந்திய தொழில்நுட்ப நிறவனத்தில் 2006ம் ஆண்டு பெற்றார்.
* கடந்த 2018 ம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு
நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய விண்வெளித் திட்டங்களில்
பயன்படுத்தப்படும், கிரையோஜெனிக் இயந்திர தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இவர் அளித்த சிறந்த பங்களிப்பின் காரணமாக ராக்கெட் மனிதர் என்று
அழைக்கப்படுகிறார்.
* ஒரு விண்வெளி திட்டத்தின் போது, ஒற்றை ராக்கெட்டின் மூலம் 104 செயற்கை
கோள்களை விண்ணில் செலுத்தியது, இவரின் திறமைக்கு மிகச்சிறந்த
எடுத்துக்காட்டு ஆகும்.
11. இயற்கையில் பூமிக்கென் உள்ள ஒரே துணைக்கோள் சந்திரன் ஆகும். இது
பூமியிலிருந்து சுமார் 3,84,400 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் விட்டம் 3474 கி.மீ
ஆகும்.
12. சந்திரனில் வளிமண்டலம் இல்லை. சந்திரன் தாமாக ஒளிர்வது இல்லை. இது
சூரியனிலிருந்து வரும் ஒளிகதிர்களையே எதிரொளிக்கிறது. இது தன்னைத்தானே சுற்றிவர
எடுத்துக் கொள்ளம் நேரமும், இது பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரமும்
சமமாக இருப்பதால் நாம் எப்போதும் சந்திரனின் ஒரு பகுதியையே பார்த்து வருகிறோம்.
13.கல்பனா சாவ்லா விண்வெளியில், பூமியின் 252 சுற்று வட்டப்பாதைகளில் 10.4 மில்லியன்
மைல்கள் பயணம் செய்துள்ளார். மேலும் 372 மணிநேரத்திற்கும் மேலாக விண்வெளியில்
தங்கியிருந்துள்ளார்.
14. சந்திரனில் தரையிறங்கிய அப்போலோ -11 விண்கலத்தில் பயணித்த நீல்ஆம்ஸ்ட்ராங்,
புஷ்ஆல்டிரின் மற்றும் மைக்கல்காலின்ஸ் குழுவினர்.