Search This Blog

Science Box questions 8th STD term -III | unit 2. காந்தவியல்‌

8 ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌

2. காந்தவியல்‌

1. இரும்பின்‌ தாதுக்கள்‌ மூன்று வகைப்படும்‌. அவை, ஹேமடைட்‌ (இரும்பு 69%), மேக்னடைட்‌ (இரும்பு 72.4%) மற்றும்‌ சிடரைட்‌ (இரும்பு 48.2%). மேக்னடைட்‌ இரும்பின்‌ ஒரு ஆக்ஸைடு தாது, அதன்‌ வாய்ப்பாடு Fe3 O4. இவற்றில்‌ மமக்னடைட்‌ அதிகமான காந்தப்‌ பண்பினைப்‌ பெற்றுள்ளது.

2. வில்லியம்‌ கில்பர்ட்‌ காந்தவியல்‌ உருவாக அடித்தளமிட்டவர்‌. பூமி மிகப்‌ பெரிய காந்தம்‌ என்பதனை வலியுறத்தியவர்‌. 1544 ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 24 ம்‌ தேதி வில்லியம்‌ கில்பர்ட்‌ பிறந்தார்‌. இவர்‌ முதன்‌ முதலில்‌ காந்தக்‌ கல்‌ (காந்த இரும்புத்‌ தாது) குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டார்‌. தனது கண்டுபிடிப்புகளை 'தி மேக்னடைட்‌' - இல்வெளியிட்டார்‌.

3. எளிதாக சுழலும்‌ வகையில்‌ கிடைமட்டத்‌ தளத்தில்‌ மிகச்சிறிய காந்தம்‌ ஒன்று அதன்‌ மையத்தில்‌ குறிமுள்‌ வடிவத்தில்‌ உள்ளது. இது 'காந்த திசைகாட்டி அல்லது காந்த
ஊசி' என்று அழைக்கபடுகிறது. தோராயமாக காந்த ஊசியின்‌ முனைகள்‌, புவியின்‌ வட மற்றும்‌ தென்‌ திசைகளைக்‌ குறிக்கின்றன.

4. எந்த ஒரு வெப்பநிலையில்‌ ஃபோரோ காந்தப்‌ பொருள்கள்‌ பாரா காந்தப்‌ பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை கியூரி வெப்பநிலை என்றழைக்கப்படுகிறது.

5. புறக்காந்தப்புலத்தால்‌ ஒரு பொருளினை நிலையான அல்லது தற்காலிக காந்தமாக உருவாக்கும்‌ முறையே காந்தமாக்கம்‌ ஆகும்‌. இது செயற்கைக்‌ காந்தங்களை
உருவாக்கும்‌ முறைகளில்‌ ஒன்றாகும்‌.

6. பேரண்டத்தின்‌ பால்வழி விண்மீன்‌ திரளில்‌ அமைந்துள்ள மேக்னிட்டார்‌ என்று அழைக்கப்படும்‌ காந்த நியூட்ரான்‌ விண்மீனை நடைமுறையில்‌ காணப்படும்‌ அதிக திறன்‌ மிகுந்த காந்தமாகும்‌.

7. மேக்னிட்டார்‌, 20 கிலோ மீட்டர்‌ விட்டமும்‌, சூரியனைப்‌ போன்று 2 அல்லது 3 மடங்கு நிறையும்‌ கொண்டது. இதன்‌ மிக அதிக காந்தப்புலம்‌ ஊறு விளைவிக்கக்‌ கூடியது.
அதன்‌ நிலையிலிருந்து ஓர்‌ உயிரி 1000 கி.மீ தூரத்தில்‌ இருந்தாலும்‌ கூட அதன்‌
உடலின்‌ இரத்த ஓட்டத்தில்‌ (ஹீமோகுளோபின்‌) உள்ள அனைத்து இரும்பு அணுக்களையும்‌ உறிஞ்சும்‌ திறன்‌ கொண்டது.

8. புல்‌ மேயும்‌ போது எடுத்துக்‌ கொண்ட கூர்மையான இரும்புக்கம்பி மற்றும்‌ பிற இரும்புப்‌ பொருள்கள்‌ செரிமானப்‌ பகுதியில்‌ சேதத்தினை உண்டாக்கும்‌. அல்நிக்கோ எனப்படும்‌
பசுக்காந்தம்‌ இவற்றைக்‌ கவர்ந்திழுத்து பாதுகாக்கப்‌ பயன்படுகிறது.

9. குளிர்பதனி காந்தமானது புவி காந்தத்தை விட 20 மடங்கு திறன்‌ கொண்டதாகும்‌.

10. புறாக்களுக்கு அசாதரணமான நீண்ட தூரம்‌ பயணித்து திரும்பும்‌ திறன்‌ இருக்கிறது. இதுவரை பார்க்காத பகுதிகளில்‌ கொண்டு விட்டாலும்‌ புவியின்‌ காந்தப்புலத்தினை
அறிந்திடும்‌ மேக்னடைட்‌ என்னும்‌ காந்தப்பண்பு போதுமான அளவிற்கு அவற்றின்‌ அலகுகளில்‌ இருப்பதால்‌ புவியின்‌ காந்தப்புலத்தை அறியும்‌ ஆற்றலைப்‌ பெற்றுள்ளது. அத்தகைய காந்த உணர்வினை காந்த ஏற்கும்‌ பண்பு என்று அழைக்கப்படுகிறது.

11. மெக்லிவ்‌ Maglev தொடர்வண்டிக்கு (காந்த விலக்கம்‌ தொடர்வண்டி) சக்கரங்கள்‌ கிடையாது. கணினிவழி கட்டுப்படுத்தும்‌ மின்காந்தங்கள்‌ மூலம்‌ வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால்‌ தண்டவாளங்களுக்கு மேலே இது மிதந்து செல்லும்‌.

உலகிலேயே மிகவும்‌ வேகமான தொடர்வண்டியாகும்‌. இதன்‌ வேகம்‌ தோராயமாக 500 கிமீ / மணி என்பதனை எட்டியுள்ளது.

12. கடன்‌ அட்டை / பற்று அட்டைகளின்‌ பின்புறத்தில்‌ உள்ள ஒரு காந்த வரி அட்டை, இது பெரும்பாலும்‌ 'மாக்ஸ்ட்ரைப்‌' என்று அழைக்கப்படுகிறது. மாக்ஸ்ட்ரைப்‌ என்பது இரும்புக்‌ காந்தத்‌ துகள்களால்‌ ஆன மெல்லிய நெகிழிப்‌ படலம்‌ ஆகும்‌. உண்மையில்‌ ஒவ்வொரு துகளும்‌ ஒரு அங்குல நீளத்தில்‌ 20 மில்லியனில்‌ ஒரு பங்கு கொண்ட சிறிய சட்ட
காந்தமாகும்‌
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url