Science Box questions 8th STD term -II | unit 2. மின்னியல்‌

8 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
2. மின்னியல்‌

1. மின்‌ நடுநிலையில்‌ இருக்கும்‌ ஒரு பொருள்‌ எலக்ட்ரான்களை இழப்பதால்‌ மட்டுமே நோரமின்னூட்டமுடைய பொருளாகிறது. நேர்மின்துகள்களைப்‌ பெற்றுக்கொள்வதால்‌ அல்ல.

2. நேர்மின்னூட்டம்‌ பெற்ற ஒரு கண்ணாடித்‌ தண்டினை மற்றொரு நேர்மின்னூட்டம்‌ பெற்ற கண்ணாடித்‌ தண்டின்‌ அருகே கொண்டு செல்லும்‌ போது அவை ஒன்றை விட்டு ஒன்று விலகுகின்றன. ஆனால்‌ நேர்‌ மின்னூட்டம்‌ பெற்ற கண்ணாடித்‌ தண்டின்‌ அருகே எதிர்‌ மின்னூட்டம்‌ பெற்ற எபோனைட்‌ தண்டினைக்‌ கொண்டு வரும்போது அவை ஒன்றை ஒன்று கவர்கின்றன. தண்டுகளுக்கிடையே உள்ள தூரம்‌ குறையும்போது விலக்கு விசை
அல்லது கவர்ச்சி விசை அதிகரிக்கின்றது.

3. மின்துகள்களை தங்களுக்குள்‌ பாய அனுமதிக்கும்‌ பொருள்கள்‌ மின்கடத்திகள்‌ எனப்படும்‌.
அலுமினியம்‌, தாமிரம்‌ போன்ற உலோகங்கள்‌ மின்‌ கடத்திகளுக்கு எடுத்துக்காட்டுகள்‌ ஆகும்‌. மின்துகள்களை தங்களுக்குள்‌ எளிதாக பாய அனுமதிக்காத பொருள்கள்‌
மின்காப்புப்‌ பொருள்கள்‌ எனப்படும்‌. ரப்பர்‌, மரம்‌, நெகிழிப்‌ பொருள்கள்‌ ஆகியன மின்காப்புப்‌ பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள்‌ ஆகும்‌.

4. 1600 ஆம்‌ ஆண்டு வில்லியம்‌ கில்பர்ட்‌ என்பவரால்‌ உருவாக்கப்பட்ட நிலைமின்காட்டி வெர்சோரியம்‌ என்றழைக்கப்பட்டது. உலோக ஊசி ஒன்றினை மேடையொன்றில்‌
தொங்கவிடப்பட்டிருந்த அமைப்பே வெர்சோரியம்‌ என்று அழைக்கப்பட்டது. இந்த உலோக ஊசியானது அதனருகே கொண்டு வரப்படும்‌ மின்னூட்டம்‌ பெற்ற பொருள்களால்‌ ஈர்க்கப்படும்‌.

5. மின்னல்‌ ஒரு மரத்தைத்‌ தாக்கும்போது உருவாகும்‌ அதிகபட்ச வெப்பத்தினால்‌ மரத்தினுள்‌ உள்ள நீரானது ஆவியாகி மரம்‌ எரிந்து விடுகிறது.

6. மின்னல்‌ மற்றும்‌ இடியுடன்‌ கூடிய மழையின்போது திறந்த வெளியிலோ அல்லது மரத்தின்‌ அடியிலோ நிற்பதைத்‌ தவிர்க்க வேண்டும்‌. கீழே அமர்ந்து தலையைக்‌ குனிந்து
கொள்வது நல்லது. அதைவிட வாகனங்களுக்குள்‌ இருப்பது பாதுகாப்பானது. வாகனங்களின்‌ உலோகப்‌ பரப்பு நிலைமின்‌ தடுப்புறையாகச்‌ செயல்பட்டு மின்னலானது வாகனத்திற்குள்‌ அமர்ந்திருப்பவர்களை தாக்காமல்‌ அது பாதுகாக்கிறது.

7. ஈல்‌ என்ற ஒரு வகையான விலாங்கு மீன்‌ 650 வாட்ஸ்‌ அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கி மின்னதிர்ச்சியை ஏற்படுத்தும்‌. ஆனால்‌ தொடர்ச்சியாக அது மின்னதிர்ச்சியைக்‌
கொடுத்துக்‌ கொண்டிருந்தால்‌ அதனுடைய உடலில்‌ இருக்கும்‌ மின்னூட்டம்‌ முழுவதுமாக
மின்னிறக்கம்‌ அடைந்துவிடும்‌. அதன்பின்‌ அதனைத்‌ தொடும்போது மின்னதிர்ச்சி ஏற்படாது.

Next Post Previous Post