Science Box questions 8th STD term -II | unit 3. காற்று

8 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
3. காற்று

1. ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட இருமடங்கு நீரில்‌ அதிகமாகக்‌ கரையும்‌ தன்மை உடையது. நைட்ரஜனின்‌ கரைதிறனையே ஆக்சிஜனும்‌ கொண்டிருக்குமானால்‌, கடல்‌,
ஆறு, ஏரி போன்ற நீர்‌ நிலைகளில்‌ வாழும்‌ உயிரினங்களுக்கு உயிர்‌ வாழ்தல்‌ மிகவும்‌ கடினமான செயலாக இருக்கும்‌.

2. ஆக்சிஜனுக்கு தானாகவே தீப்பற்றி எரியும்‌ தன்மை இருந்தால்‌ நமது
வளிமண்டலத்திலுள்ள அனைத்து ஆக்சிஜனும்‌ எரிய ஒரு தீக்குச்சி மட்டுமே போதுமானதாக இருக்கும்‌.

3. தற்காலங்களில்‌ வாகனங்களின்‌ டயர்களில்‌ அழுத்தப்பட்ட காற்றுக்குப்‌ பதிலாக நைட்ரஜன்‌
நிரப்பப்படுகிறது.

4. வெப்பப்படுத்தும்போது ஒரு பொருள்‌ திடநிலையில்‌ இருந்து திரவநிலைக்கு மாறாமல்‌ நேரடியாக வாயுநிலைக்கு மாறும்‌ நிகழ்வு பதங்கமாதல்‌ எனப்படும்‌.

5. காற்றேற்றப்பட்ட நீர் என்பது அதிக அழுத்தத்தில்‌ கார்பன்‌ டை ஆக்சைடு வாயு நீரில்‌ கரைந்துள்ள நிலையாகும்‌. இது சோடா நீர் என்றும்‌ அழைகக்ப்படுகிறது.

6. வெள்ளிக்கோளின்‌ வளிமண்டலத்தில்‌ 96-97% கார்பன்‌ டை ஆக்சைடு உள்ளது. கார்பன்‌ டை ஆக்சைடின்‌ அளவு அதிகமாக இருப்பதால்‌ வெள்ளியின்‌ மேற்பரப்பால்‌ வெப்பத்தைத்‌ தக்க வைத்துக்‌ கொள்ள முடிகிறது. வெள்ளியின்‌ மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 462℃  ஆக இருக்கிறது. எனவேதான்‌ சூரிய குடும்பத்தில்‌ வெள்ளி மிகவும்‌ வெப்பமான கோளாக இருக்கிறது.

7. தூய மழை நீரின்‌ pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது. ஆனால்‌ அமில மழையின்‌ pH மதிப்பு 5.6 ஐ விடக்‌ குறைவு. ஏனெனில்‌ வளிமண்டலத்திலுள்ள கார்பன்‌ டை ஆக்சைடு இந்நீரில்‌
கரைந்திருக்கிறது.

Next Post Previous Post