Science Box questions 8th STD term -II | unit 1. வெப்பம்‌


8 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
1. வெப்பம்‌

1. இரயில்‌ தண்டவாளங்களில்‌ சிறிது இடைவெளி இருப்பதை நீங்கள்‌ பார்த்திருப்பீரகள்‌. அது ஏன்‌ என்று தெரியுமா?

* இரும்பினால்‌ செய்யப்பட்ட தண்டவாளங்கள்‌ கோடை காலங்களில்‌ வெப்பத்தின்‌ தாக்கத்தினால்‌ விரிவடைகின்றன. ஆனால்‌ அவ்வாறு விரிவடையும்‌ போது
தண்டவாளத்தில்‌ இடைவெளி விடப்பட்டு உள்ளதால்‌ எந்தவித பாதிப்பும்‌ அதில்‌ ஏற்படுவதில்லை.

2. இயற்கையாகவே புவியின்‌ மீது திண்மம்‌, திரவம்‌, வாயு ஆகிய மூன்று நிலைகளிலும்‌ காணப்படுகின்ற ஒரே பருப்பொருள்‌ நீர்‌ ஆகும்‌.

3. உலோகங்கள்‌ அனைத்தும்‌ சிறந்த வெப்பக்‌ கடத்திகளாகும்‌. வெப்பத்தை எளிதாகக்‌ கடத்தாத பொருள்கள்‌ வெப்பம்‌ கடத்தாப்‌ பொருள்கள்‌ (அ) காப்பான்கள்‌ என்று அழைக்கப்படுகின்றன. மரம்‌, தக்கை, பருத்தி, கம்பளி, கண்ணாடி, இரப்பர்‌ ஆகியவை வெப்பம்‌ கடத்தாப்‌ பொருள்களாகும்‌.

4. வெப்பக்‌ கதிர்வீச்சு மூலம்‌ வெப்ப ஆற்றல்‌ பரவுவதை நம்‌ கண்களால்‌ காண முடியும்‌. 500℃ வெப்பநிலைக்கு ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது கதிர்வீச்சானது மங்கிய சிவப்பு நிறத்தில்‌ நமது கண்களுக்குத்‌ தெரிய ஆரம்பிக்கிறது. அப்பொழுது நம்‌ தோலின்‌ மூலம்‌ வெப்பத்தினை உணரமுடியும்‌. மேலும்‌ வெப்பப்படுத்தும்போது, கதிர்வீச்சின்‌ அளவு அதிகரிக்கின்றது. அப்பொழுது ஆரஞ்சு மற்றும்‌ மஞ்சள்‌ நிறத்தைத்‌ தொடர்ந்து இறுதியாக
அப்பொருள்‌ வெள்ளை நிறத்தில்‌ ஒளிரும்‌.

5. உணவுப்பொருள்களில்‌ உள்ள ஆற்றலின்‌ அளவு கிலோ கலோரி எனும்‌ அலகால்‌ குறிப்பிடப்படுகிறது. 1 கிலோ கலோரி - 4200J (தோராயமாக)

6. முதன்‌ முதலாக 1782ஆம்‌ ஆண்டு ஆன்டொய்ன்‌ லவாய்ஸியர்‌ மற்றும்‌ பியரே சைமன்‌ லாப்லாஸ்‌ ஆகியோரால்‌, வேதியியல்‌ மாற்றங்களால்‌ ஏற்படும்‌ வெப்ப ஆற்றலின்‌ அளவை
அளவிட பனிக்கட்டி - கலோரிமீட்டர்‌ பயன்படுத்தப்பட்டது.

7. வெற்றிடக்குடுவை முதன்‌ முதலில்‌ 1892 ஆம்‌ ஆண்டு ஸ்காட்லாந்து அறிவியலாளர்‌ சர்‌ ஜேம்ஸ்‌ திவார்‌ என்பவரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக்‌ கவுரவப்படுத்தும்‌ விதமாக
இது திவார்‌ குடவை என்றும்‌ அழைக்கப்படுகிறது. இது திவார்‌ பாட்டில்‌ எனவும்‌ அழைக்கப்படும்‌.

Next Post Previous Post