Search This Blog

Science Box questions 8th STD term -I | unit 8. உயிரினங்களின்‌ அமைப்பு நிலைகள்‌


8 ஆம்‌ வகுப்பு -முதல்‌ பருவம்‌
8. உயிரினங்களின்‌ அமைப்பு நிலைகள்‌

1. மூலச்செல்‌ என்பது ஒரு அடிப்படைசெல்‌ ஆகும்‌. இச்செல்‌ தோல்‌, செல்‌, தசைச்‌ செல்‌
அல்லது நரம்பு செல்‌ போன்ற எந்த வகை செல்லாகவும்‌ மாறுபாடடையும்‌ தன்மைக்‌
கொண்டது. இவை மிக நுண்ணிய செல்கள்‌ ஆகும்‌.

2. மூலச்‌ செல்கள்‌ உடலில்‌ பாதிப்படைந்த திசுக்களை குணப்படுத்த அல்லது மாற்றி
அமைக்க உதவுகின்றன

3. மனித உடலின்‌ உள்ளேயே அமைந்த சரிசெய்யும்‌ அமைப்பாக மூலச்‌ செல்கள்‌
கருதப்படுகின்றன. ஒரு மனிதனின்‌ வாழ்நாள்‌ இறுதிவரை இவை புதிய செல்களை
உருவாக்கிக்‌ கொண்டே இருக்கின்றன.

4. நமது உடலானது கருமுட்டை (சைகோட்‌) என்ற ஒற்றை செல்லிலிருந்தே
உருவாக்கப்படுகிறது. கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ்‌
பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, வடிவம்‌ மற்றும்‌ உட்பொருள்களைக்‌
கொண்ட திரள்‌ செல்களாலான கருவை உருவாக்குகிறது.

5. கருச்‌ செல்கள்‌ படிப்படியாக அவற்றின்‌ அமைப்பிலும்‌, பணியிலும்‌ மாற்றங்களை
அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல்‌ மாறுபாடூுடைதல்‌ என்று பெயர்‌.

6. ஓய்வு நிலையில்‌ உள்ள ஒரு வளர்ந்த மனிதன்‌ சராசரியாக நிமிடத்திற்கு 15-18 முறை
மூச்சை உள்ளிழுத்து வெளி விடுகின்றான்‌. கடும்‌ உடற்பயிற்சியின்‌ போது இச்சுவாச
வீதம்‌ நிமிடத்திற்கு 25 முறைகளுக்கும்‌ மேலாக இருக்கும்‌.

7. புகைபிடித்தல்‌ நுரையீரல்களை சேதப்படுத்துகிறது. புகைப்பிடித்தல்‌ புற்று நோய்க்கு
காரணமாவதால்‌ அதை தவிர்த்தல்‌ நலம்‌.

8. உங்களுக்கு தும்மல்‌ ஏற்படும்‌ போது நீங்கள்‌ நாசித்‌ துவாரங்களை மூடிக்‌ கொள்ள
வேண்டும்‌. இதன்மூலம்‌ நோயுண்டாக்கும்‌ அயல்‌ பொருள்கள்‌ அருகில்‌ இருப்பவர்களுக்கு
நோய்த்தொற்று ஏற்படாமல்‌ தடுக்க முடியும்‌.

9. பரவல்‌ முறையின்‌ மூலம்‌ உணவுப்பொள்ருகள்‌ செரிமான நொதியுடன்‌ கலத்தல்‌.

10. சுவாச வாயுக்களான ஆக்ஸிஜன்‌ மற்றும்‌ கார்பன்‌ டை ஆக்ஸைடு வாயுக்கள்‌ பரவுதல்‌
செல்களினுள்ளும்‌, வெளியேயும்‌ பரவுதல்‌.

11. ஒர அளவு குளுக்கோஸிலிருந்து காற்றுள்ள சுவாசம்‌ காற்றில்லா சுவாசத்தினை விட 19
மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

12. காற்றுள்ள சுவாசத்தின்‌ போது ஒவ்வொரு குளுக்கோஸ்‌ மூலக்கூறும்‌ 36 ATP
மூலக்கூறுகளை உருவாக்கும்‌.

13. ரொட்டி தயாரிக்கும்‌ போது கோதுமை மாவில்‌ ஈஸ்ட்‌ சேர்க்கப்படுவதால்‌ CO2
வெளியிடப்படுகிறது. இதனால்‌ ரொட்டி மிருதுவாகவும்‌, உப்பியும்‌ காணப்படுகிறது.

14. ஒருவர்‌ பூரண ஓய்வு நிலையில்‌ இருக்கும்‌ போதும்‌ அவருக்கு ஒரு குறைந்த அளவிலான
ஆற்றல்‌ தேவைப்படும்‌. அந்த ஆற்றலை அளப்பது அடிப்படை வளர்சிதை மாற்றம்‌
எனப்படும்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url