Search This Blog

Science Box questions 8th STD term -I | unit 6 and 7

8 ஆம்‌ வகுப்பு -முதல்‌ பருவம்‌
6. நுண்ணுயிரிகள்‌

1. விஞ்ஞானிகள்‌ புதிய எதிர்‌உயிர்க்‌ கொல்லியான சூடோயுரிடிமைசினைக்‌
கண்டுபிடித்துள்ளனர்‌. இந்த புதிய எதிர்‌ உயிர்கொல்லியானது இத்தாலிய நாட்டின்‌ மண்‌ மாதிரியில்‌ காணப்பட்ட ஒரு வகையான நுண்ணுயிரியினால்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. இது சோதனைக்‌ குழாயில்‌ உள்ள மருந்து - எதிர்ப்பு மற்றும்‌ மருந்து - தாங்கும்‌ திறன்‌ கொண்ட பாக்டீரியாக்களை அழித்தது. எனவே, சுண்டெலிகளில்‌ பாக்டீரியத்‌ தொற்றினை
குணமாக்கப்‌ பயன்படுத்தப்பட்டது.

2. லாக்டோபேசில்லஸ்‌ அசிட்டோஃபிலஸ்‌ எனும்‌ பாக்டீரியா அமிலத்தை விரும்பக்‌ கூடியது. இவை மோர்‌, தயிர்‌, புளிப்புக்‌ ௯ழ்மங்கள்‌ மற்றும்‌ உறைந்த பனிக்கூழ்‌ ஆகியவற்றில்‌ காணப்படுகின்றன. இவை சர்க்கரை மற்றும்‌ கார்போஹைட்ரேட்டுகளை லாக்டிக்‌ அமிலமாக மாற்றுவதால்‌, “லாக்டிக்‌ அமில பாக்டீரியங்கள்‌” என்றழைக்கப்படுகின்றன.

3. கசையிழைகளைக்‌ கொண்ட புரோட்டோசோவாவான டிரிபனோசோமோவினால்‌ ஆப்பரிக்க தூக்க வியாதி உண்டாகிறது. இது செட்சீ எனும்‌ ஈக்கள்‌ கடிப்பதன்‌ மூலம்‌ பரவுகிறது.

4. விஞ்ஞானிகளால்‌ கண்டறியப்பட்ட குறிப்பிட்ட வகையான புரோபயாட்டிக்கான
பைபிடோபாக்டீரியம்‌ பைபிடம்‌ ஹெலிகோபாக்டர்‌ பைலோரியால்‌ உண்டான வயிற்றுப்‌ புண்களைக்‌ குணப்படுத்த உதவுகிறது. மற்றுமொரு வகை புரோபயாட்டிக்‌ சிற்றினமான
பைபிடோபாக்டீரியம்‌ ..பிரிவே குழந்தைப்‌ பருவத்தில்‌ உண்டாகும்‌ மலச்சிக்கலைக்‌ குணப்படுத்தப்‌ பயன்படுகிறது.



8 ஆம்‌ வகுப்பு -முதல்‌ பருவம்‌
7. தாவர உலகம்‌

1. இந்தியாவில்‌ மிகப்‌ பெரிய உலர்தாவரத்‌ தொகுப்பு கொல்கத்தாவில்‌ உள்ளது. இங்கு ஒரு மில்லியனுக்கு அதிகமான உலர்தாவரத்‌ மாதிரிகள்‌ உள்ளன.

2. இரு சொற்பெயரிடுமுறை தொடர்பான விதிமுறைகள்‌ மற்றும்‌ பரிந்துரைகள்‌ ICBN (அகில உலக தாவரவியல்‌ பெயர்ச்சூட்டும்‌ சட்டம்‌)ல்‌ உள்ளது, தற்போது இது ICN (அகில உலக பெயர்ச்சூட்டும்‌ சட்டம்‌) என அழைக்கப்படுகிறது.

3. உலகத்திலேயே மிகப்பெரிய உலர்‌ தாவரத்‌ தொகுப்பு பாரிசில்‌ உள்ள தேசிய டி ஹிஸ்டாரிக்‌ நேச்சுரல்லே என்னும்‌ பிரான்சின்‌ பாரிஸ்‌ நகரில்‌ உள்ள அருங்காட்சியகம்‌
தான்‌ உலகத்திலேயே மிகப்பெரிய உலர்‌ தாவரத்‌ தொகுப்பு அருங்காட்சியகம்‌.

4. RH விக்டேக்கரின்‌ ஐந்து உலக வகைப்பாட்டில்‌ பூஞ்சைகள்‌ மூன்றாவது உலகமாக இடம்பெற்றுள்ளன. ஏனெனில்‌ இவற்றில்‌ பச்சையம்‌ மற்றும்‌ தரசம்‌ இல்லை.

5. கிளாவிசெப்ஸ்‌ பர்பூரியா என்ற பூஞ்சையானது இளந்தலை முறையினரை அதிக அளவு பாதிப்படையச்‌ செய்கிறது. இது இளைஞர்களிடத்தில்‌ ஒரு மாயத்‌ தோற்றத்தை ஏற்படுத்தி
மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வுலகில்‌ ஒரு வித்தியாசமான மனநிலையை
ஏற்படுத்தி அவர்கள்‌ கனவுலகில்‌ மிதப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தும்‌.

6. அஸ்பர்ஜில்லஸ்‌ என்ற பூஞ்சையானது குழந்தைகளிடம்‌ ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனால்‌ கிளாடோஸ்போரியம்‌ என்ற பூஞ்சையானது ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது.

7. மருந்துகளின்‌ அரசி என்று கூறப்படுவது பெனிசிலின்‌ ஆகும்‌. இதைக்‌ கண்டுபிடித்தவர்‌ சர்‌ அலெக்ஸாண்டர்‌ பிளெம்மிங்‌ ஆவார்‌ (1938).

8. ஸ்பாக்னம்‌ மாஸ்‌, குழந்தைக்கு ஒரு முறை பயன்படுத்தும்‌ அரைக்‌ கச்சயைில்‌ பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில்‌ இது நீரை உறிஞ்சி வைத்துக்‌ கொள்ளும்‌.

9. லைக்கோபோடியம்‌, கிளப்‌ பாசி என அழைக்கப்படுகிறது. ஈக்விசிட்டம்‌, குதிரை வால்‌ என
அழைக்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url