Science Box questions 8th STD term -I | unit 4 and 5
4. பருப்பொருள்கள்
சேர்மம் - பொதுப்பெயர்
1. தாமிர சல்பேட் - மயில் துத்தம்
2. இரும்பு சல்பேட் (பர்ரஸ் சல்பேட்) - பச்சைத் துத்தம்
3. பொட்டாசியம் நைட்ரேட் - சால்ட்பீட்டர்
4. கந்தக அமிலம் - விட்டிரியால் எண்ணெய்
5. கால்சியம் சல்பேட் - ஜிப்சம்
6. கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் - பாரீஸ் சாந்து
7. பொட்டாசியம் குளோரைடு - மூரியேட் ஆப் பொட்டாஷ்
8 ஆம் வகுப்பு -முதல் பருவம்
5. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
1. மின்னாற்பகுத்தல் என்ற சொல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மின்சாரம் மற்றும் பகுத்தல் என்ற இரு
சொற்களிலிருந்து உருவானது.
2. சுண்ணாம்புக் கல்லானது சுட்ட சுண்ணாம்பு, நீற்றுச் சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகியவற்றுக்கு மூலப்பொருளாகும்.
3. வேதி வினைகளின் போது வெப்பம் வெளிவிடப்பட்டால் அவ்வினைகள் வெப்ப உமிழ்வினைகள் எனவும் வெப்பம் எடுத்துக்கொள்ளப்பட்டால் வெப்பக் கொள்வினைகள்
எனவும் அழைக்கப்படுகின்றன.
4. ஒளி வேதியியல் என்பது வேதியியலின் ஒரு பிரிவாகும். இது ஒளியினால் நிகழும்
வேதிவினைகளைப் பற்றியதாகும்.
5. வளிமண்டலத்தில் ஒளி வேதிவினை - சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஸ்ட்ரட்டோஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் இரண்டாம் அடுக்கில் உள்ள ஒசோன் (o3)
மூலக்கூறுகளை சிதைத்து மூலக்கூறு ஆக்சிஜனையும் அணு ஆக்சினையும் தருகிறது. இந்த அணு ஆக்சிஜன் மீண்டும் மூலக்கூறு ஆக்சிஜனுடன் இணைந்து ஓசோனை
உருவாக்குகிறது.
6. என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் உயிரி வினைவேக மாற்றிகள் எனப்படுகின்றன
7. ஆல்கஹால் அடிப்படையிலான பானங்களான பீர், வைன் போன்றவை தொழிற்சாலைகளில்
நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பீர் உற்பத்தித் தொழிற்சாலைகள்
புருவரீஸ் எனப்படுகின்றன.